அமித்ஷா தலைமையில் கூடும் பாஜக பயங்கரவாதிகள்? சுப்ரமணியம் சாமி அதிரடிப் பேச்சு!

கடந்த வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் திருமதி. தமிழிசை சௌந்திரராஜன் பேசியதாவது

அமித் ஷாவின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். தாமரை மலராது, தமிழக பாஜகவில் என்ன இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிகழ்ச்சியாக அமையும்.

பாஜக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் கட்சி. பல எம்எல்ஏக்களைப் பெற்று தோல்வியடைந்த கட்சி போல் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சவாலான சூழ்நிலையில் அடிமட்டத் தொண்டர் வரை கட்சியை எவ்வளவு எடுத்துச் சென்றிருக்கிறோம் என தேசியத் தலைவர் உணர்ந்திருக்கிறார்.

40 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களைச் சந்தித்திருக்கிறேன். தமிழக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசப்படும் நிகழ்ச்சியாக இருக்கும். பணம் கொடுத்து யாரையும் அழைத்து வர மாட்டோம். 5 வாக்குச்சாவடிகளில் பணி செய்துகொண்டிருக்கும் எங்கள் நிர்வாகிகளை மட்டுமே அழைத்திருக்கிறோம். தமிழகத்தில் வேறு கட்சிகளால் இதனைச் செய்ய முடியாது.

யாரை வேண்டுமானாலும் அழைத்துக் கூட்டத்தைக் கூட்டுவது எங்கள் நோக்கமல்ல. வெளித் தோற்றத்திற்காக அல்ல. கட்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளும் மாபெரும் நிகழ்ச்சி. அந்த நிர்வாகிகள் ஈசிஆர் கோல்டன் பீச் ரிசார்ட்டில் தேசியத் தலைவர் அமித் ஷாவைச் சந்திக்கின்றனர்-என்று தமிழிசை செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்…

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது தமிழகத்தில் 10 ஆயிரம் பயங்கரவாதிகள் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தமிழக ஆட்சியை கலைக்க பாஜக திட்டமிட்டு இதுபோன்ற தகவல்களை பரப்பி வருகிறதா? என தமிழக மக்ளிடையே கேள்வி எழுந்துள்ளது.ஏற்கனவே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து கூறி வரும் நிலையில், தற்போது சுப்பிரமணிய சாமி கூறியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சாமி, தமிழகத்தில் தீவிரவாதிகள் இருப்பதாகவும், அவர்கள் மூளைச்சலவை செய்வதால்தான் போராட்டங்கள் வன்முறையாக மாறி வருவதாக கூறி உள்ளார்.தமிழகத்தில் ஒரு தீவிரவாதி கூட இல்லை என்ற முதல்வரின் கருத்தை தான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று கூறிய சாமி, தமிழகத்தில் துப்பாக்கி வைத்து கொலை செய்யும் கூட்டமும், பிரவுன் சுகர் விற்கும் பயங்கரவாதிகள் நடமாட்டமும் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

என்னுடைய கணக்குப்படி தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் தீவிரவாதிகள் இருப்பதாகவும், அவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.சாமியின் இந்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழக பாஜக வில் ஜால்ராக்களே நிரம்பியுள்ளனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய சுசாமி, தற்போது அமித்ஷா தலைமையில் கூடும் 10000 நிர்வாகிகளை தீவிரவாதிகளென்றும், அவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கூறியிருப்பது தமிழக பாஜகவினரிடையே மட்டுமல்லாது பல்வேறு கட்சியினரிடையே #இவரு_நல்லவரா_கெட்டவரா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.