நாளை கூடும் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம்! சலசலப்பை ஏற்படுத்துமா? மீடியாக்கள் ஏக்கம்!

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாஜ தேசிய தலைவர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார். அவர் கட்சி நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேச திட்ட மிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாஜ தேசிய தலைவர் அமித்ஷா பாஜகவின் சக்தி கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார். இதற்காக ஒவ்வொரு மாநிலமாக அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் சக்தி கேந்திர ெபாறுப்பாளர்களை சந்திக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் நாளை(திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை வருகிறார். தொடர்ந்து அவர் தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார். பிற்பகல் 3 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜிபி தங்ககடற்ரையில் கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

இதில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், பாஜ மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில் சுமார் 20,000 பேர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு சந்திப்பது, வெற்றி வியூகம், பிரசார வியூகம் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் தமிழகத்தில் பாஜவை வலுப்படுத்துவதற்காக அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்றும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் அவர் ஆேலாசனை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும் பாஜ நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார். கூட்டம் முடிந்ததும் அன்று இரவு அமித்ஷா சென்னையில் தங்குகிறார். மறுநாள் 10ம் தேதி காலை அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

* அமித்ஷா கடந்த ஆண்டு மே 10, 11ம் தேதி தமிழகம் வருவதாக இருந்தது. இது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
* அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 23, 24ம் தேதி சென்னை, கோவை வருவதாக இருந்தது. இதுவும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
* சுமார் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு அமித்ஷா தற்போது சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியம் சாமி தமிழக பாஜகவினரை பயங்கரவாதிகளாகவும்,சோம்பேறிகளாகவும் சித்தரித்து கருத்து கூறிவரும் நிலையில் நாளைய பாஜக கூட்டத்தில் சலசலப்புகளுக்கு பஞ்சமிருக்காது என்ற பேச்சுக்கள் தமிழக பாஜகவினரிடை பரவலாக உள்ளது.