சுழன்றடிக்கும் சூறாவளியாய் கழக பணிகளை மேற்கொள்ளும் #அஇஅதிமுக_இராமநாதபுர_மாவட்ட_கழகம்!

சமீபகாலமாக அஇஅதிமுக கழகத்தின் வளர்ச்சியில் தொய்வு ஏற்ப்பட்டிருப்பதாகவும், கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை குறித்து நிர்வாகிகள் யாரும் அக்கறையுடன் செயல்படுவதே இல்லையென்றும் பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்திளை வெளியிட்டு வருகிறார்கள்.

ஆனால் அப்படி வரும் செய்திகள் தவறான வதந்திகளே ,நாங்கள் எங்கள் அஇஅதிமுக கழக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தே பணி செய்கிறோம் என்பதை #சொல்லால்_சொல்லாமல்_செயலால்_காட்டிவரும்_இராமநாதபுர_அஇஅதிமுக .

இது தொடர்பாக இராமநாதபுர மாவட்ட அஇஅதிமுக கழக நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது! பல்வேறு செய்தி நிறுவனங்களும் அதிமுகவின் வாக்கு வங்கி சரிவடைந்துள்ளதாகவும், உறுப்பினர் சேர்க்கை சரிவர நடைபெறவில்லை என்றும் அஇஅதிமுக கழகம் மீது தேவையற்ற வதந்திகளைத் திட்டமிட்டே பரப்பி வருகிறார்கள். ஆனால் அஇஅதிமுக கழக தலைமை நிர்வாகிகளின் உத்தரவின்படி நாங்கள் கழக வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்துக் கொண்டு தானிருக்கிறோம், மாவட்ட கழக நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை ஒன்றியம், நகரம், கிளை என அனைத்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அதிமுக வாக்கு வங்கியை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்! அதன் தொடர்ச்சியாக

கடந்த25/7/18 அன்று பரமக்குடியிலுள்ள கீர்த்தி மஹாலில் மாவட்ட அணிகள்,மற்றும் ஒன்றிய அணி செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியங்களை உள்ளடக்கிய அனைத்து கழக அணியினரும் வரப்போகும் 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும், மாற்றுகட்சி உறுப்பினர்களை கழகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கவும் எந்த மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக இதயதெய்வம் *புரட்சித் தலைவி அம்மா* அவர்களின் ஆசியுடன் , கழக ஒருங்கிணைப்பாளரும், *மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் திரு .ஓ. பன்னீர்செல்வம்* அவர்கள் ,கழக இணை ஒருங்கிணைப்பாளரும், *மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி* அவர்கள் ஆணைக்கிணங்க இராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் *மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் திருமிகு. MA.முனியசாமி* அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகளான , பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அணி செயலாளர்கள், மற்றும் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்..

அந்த ஆலோசனைகளின்படி மாவட்ட கழகம் சார்பாக அனைத்து ஊர்களிலும் திண்ணை,தெரு முனைப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் , மாற்றுக்கட்சி உறுப்பினர்களிடம் அஇஅதிமுக கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி கழக உறுப்பினர்களாக இணைக்கவும் முயற்சிகளை மேற்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் செயல்பட துடிப்பும் ,அனுபவமும் உள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாகவும் ஆலோசித்துள்ளதாகவும், மாவட்ட கழக தொழில்நுட்ப பிரிவின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த பகுதி வாரியாக தொழில்நுட்ப பிரிவு செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தவும், தொழில்நுட்ப பிரிவை வலுப்படுத்தும் வகையில் புதிய நியமனங்களை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மாவட்ட தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுர நாடாளுமன்ற உறுப்பினர் ,

மாநில தகவல் தொழில் நுட்ப அமைச்சர்,

மாவட்ட அஇஅதிமுக செயலாளர்,

மற்றும் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “மறைந்த முன்னாள் ஜனாதிபதி அய்யா அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளான 27/7/18 அன்று இராமநாதபுரம் ,பேக்கரும்பில் அமைந்துள்ள அய்யா அவர்களின் நினைவிடத்தில் மாவட்ட அஇஅதிமுக கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்,மாநில தொழில்நுட்ப துறை அமைச்சர், மாவட்ட செயலாளர் தலைமையில் கழக நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக மாவட்ட அஇஅதிமுக மாவட்ட கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அமமுக கட்சியைச் சேர்ந்த பெருவாரியான இளைஞர்கள் அமமுக விலிருந்து விலகி மாவட்ட செயலாளர் முன்னிலையில் தங்களை அஇஅதிமுகவில் இணைத்துக் கொண்டனர். புதியதாக கழகத்தில் இணைந்து கொண்ட இளைஞர்களை மாவட்டக் கழக நிர்வாகிகள் வரவேற்று ,வாழ்த்து கூறினர் .