தினகரன் பேச்சு! தகுதி நீக்க எம்எல்ஏ அதிர்ப்தி? கலகலத்த பரமக்குடி!

மறைந்த முன்னால் குடியரசுத் தலைவர் #அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இராமநாதபுரம் அருகே பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த இராமநாதபுரம் மாவட்ட அமமுக தலைவர் Ttv தினகரன் நேற்று பிற்பகல் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து சேர்ந்தவர் தனியார் விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டு மாலை மதுரையிலிருந்து சாலைப் பயணமாக இராமநாதபுரம் பயணித்தார்! அந்த பயணத்தின் போது பல்வேறு பகுதி அமமுக கழகம் சார்பில் தினகரனுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பரமக்குடி நகரம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பின் போது தினகரன் பேசியதாவது

நமது கொள்கைக்காக தனது பதவியை துச்சமாக கருதி செயல்பட்டு பதவியைத் தூக்கி எறிந்த பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சுந்தர்ராஜன் அவர்களுக்கு வருகின்ற அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று பேசினார். இதனால் அதிர்ச்சியடைந்த அமமுகவினர் அதிர்ப்தியை தெரிவித்தவுடன் சுதாரித்துக் கொண்ட தினகரன் டாக்டர்.முத்தையா என்று தான் கூறினேன் என்று சமாளித்தார்.

இதுகுறித்து தகுதி நீக்க எம்எல்ஏ டாக்டர்.முத்தைய்யா தரப்பினர் கடும் அதிர்ப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இவருக்காக பதவியைக்கூட வேண்டாமென தூக்கியெறிந்த சட்டமன்ற உறுப்பினர் பெயரையே சரியாகக் கூற முடியாதவரை நம்பி இனியும் காலம் கடத்த வேண்டாம் என்று டாக்டர் முத்தைய்யாவுக்கு நெருக்கமான நண்பர்கள் அறுவுரை கூறத் தொடங்கிவிட்டனர்……

டாக்டர் முத்தைய்யா என்பதற்க்கு பதிலாக டாக்டர் சுந்தர்ராஜன் என்று பேசிய தினகரன் வீடியோவைப் பார்க்க இங்கே தொடுங்கள்