செவ்வாய் வெறும் வாய்? முன்னோர்கள் சொன்னது உண்மையா? சிறப்புக் கட்டுரை!

செவ்வாய் தோசம் பற்றிய கட்டுரை

பொதுவாக செவ்வாய் தோசம் என்ற உடனே எல்லோரும் பயப்படுகிறார்கள்

காரணம் செவ்வாய் தோசம் உள்ளவங்களை கல்யாணம் முடிச்சா ஆள் அவுட் ஆயிரும்னு அரை குறையா சில ஜோதிடா்களும் மற்றும் சிலரும் மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறாா்கள்..

ஆனால் செவ்வாய் தோசம் அந்த மாதிரி பாதிப்புகளை நடைமுறையில் செய்வதில்லை

இனி செவ்வாய் தோச அமைப்பை பாா்ப்போம்

செவ்வாய் லக்கினம் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோசம் என்று கூறுகிறோம் இதை லக்கினத்தில் இருந்து மட்டும் அல்லாமல் சந்திரன் சுக்கிரனில் இருந்தும் பார்க்க வேண்டும்..அப்படிப் பாா்த்தால் எல்லோருக்கும் செவ்வாய் தோசம் வந்து விடும்

ஆனால் இதற்கு நிறைய விதி விலக்குகள் உள்ளது இந்த விதிவிலக்குகளையும் மீறி செவ்வாய் தோசம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் திருமணப் பொருத்தம் பாா்க்கும் போது ஆண் பெண் இருவருக்கும் செவ்வாய் சம அளவு பலம் உள்ளதா என்று பாா்க்க வேண்டும்

ஏனென்றால் ஆணுக்குப் பெண்ணைக் கொண்டு வருபவர் சுக்கிரன் அதுபோல பெண்களுக்கு மாப்பிள்ளையை கொண்டு வருபவா் செவ்வாய் அதனால்தான் செவ்வாய்க்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் பெற்றவா்களுக்கு எப்படியாவது திருமண வாழ்க்கையில் பாதிப்பைத் தந்து விடுகிறது
ஒன்று திருமண வாழ்க்கையில் பிரிவைத் தருகிறது அப்படிப் பிரிய வில்லை என்றால் இன்னொரு ஆணுடன் சோ்க்கையை கொடுத்து விடுகிறது

அதே மாதிரி ஒருவருக்கு செவ்வாய் தோசம் இருந்து மற்றொருவருக்கு இல்லாமல் திருமணம் நடை பெற்றால் செவ்வாய் திசை புத்தியில் ஏதாவதொரு பாதிப்பைத் தந்து விடுகிறது காரணம் என்னவென்றால் செவ்வாய் தோசம் உள்ளவா்களுடைய இரத்தம் சூடாக இருக்கும் இதனால் இவா்களுக்கு எல்லா விசயங்களிலும் தேவை அதிகம் இருக்கும் தோசம் இல்லாதவா்களுக்கு இரத்தம் குளிா்ச்சியாக இருக்கும் இவா்கள் இருவரும் உடலுறவில் ஈடுபடும் போது செவ்வாய் தோசம் இல்லாதவா் உடல்நிலை பாதிக்கப் படும் எனவே அவா்களுக்கு உறவில் நாட்டம் குறைந்து வேண்டாம் என்ற சூழ்நிலைக்கு வந்து விடுவாா்கள் இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு பிரியும் சூழ்நிலை கூட வந்து விடும்
சிலருக்கு வேறொரு ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ தொடா்பு ஏறப்பட்டு அதனாலும் பிரியும் சூழ்நிலை வந்து விடும்
இப்படி செக்ஸ் கிரகமான செவ்வாய் பெண்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகளைத் தந்து விடுகிறது இதற்குத்தான் அந்தக் காலத்தில் ஒரு பழமொழி சொல்வாங்க கிணறு ஆழத்துக்கேற்ற கயிறு இருந்தால்தான் தண்ணி இறைக்க முடியும்னு …
எனவே திருமணப் பொருத்தம் பாா்க்கும் போது செவ்வாயை சீா் தூக்கிப் பாா்த்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை…

செவ்வாய் தோசம் உள்ளவா்கள் வைதீஸ்வரன் கோவில் சென்று செவ்வாயை வழிபட்டு வர தோசம் பாதிக்காது மேலும் இரத்த தானம் செய்வதும் நண்மையைத் தரும்

சகோதரா்களுக்கு துரோகம் செய்தாலும் அவா்களுடைய சந்ததியினருக்கு செவ்வாய் தோசமாக மாறி செவ்வாய் பாதிப்பைத் தந்து விடுவாா் எனவே எப்போதும் சகோதர சகோதரிகளுக்கு துரோகம் செய்யாதீா்கள்…

இந்த நாள் இனிதாக வாழ்த்துக்களுடன்

வணக்கங்கள்…..

தொடா்புக்கு

V.கோட்டூா்சாமி B,sc LLB
9566739264
8610753939
வானரமுட்டி
தூத்துக்குடி மாவட்டம்