ஆதாரமில்லாத #ஆதார் சர்ச்சை? ஆதார் எண்களை யாரிடமும் பகிர வேண்டாம்- அவசியம் படியுங்கள்!

ட்ராய் சேர்மன் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முற்பட்ட ஏலியட் ஆல்டெர்சன் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் தற்போது ட்விட்டரில் Aadhaar helpline number குறித்து புதிய கேள்வியைக் கேட்டுள்ளார்.

அது மீண்டும் ஆதார் பாதுகாப்பு குறித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த வாரம் ட்ராய் சேர்மன் ஆர்.எஸ். சர்மா தன்னுடைய ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிய ஹேக்கர்கள் அவருடைய பிறந்த தேதி, முகவரி, மற்றும் இதர விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டு ஒரு ரூபாயை பரிசாக பெற்றுக் கொண்ட நிலையில் தற்போது #Aadhaar_helpline_number சர்ச்சை!

ஆதார் உதவி மையத்தின் டோல் ப்ரீ (aadhaar helpline number) எண்ணான 1800-300-1947 இந்த எண்கள் நிறைய ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் போனில் ஏற்கனவே பதிவாகியுள்ளது.
ஆதார் அட்டை வைத்திருந்தாலும் இல்லாவிடினும் அவ்வாடிக்கையாளர்களின் போனில் இந்த எண் டீஃபால்ட்டாக பதிவாகியுள்ளது.

என்னுடைய விருப்பம் இன்றி என்னுடைய திறன்பேசியில் எப்படி இந்த எண்ணை டிஃபால்ட்டாக இணைக்கலாம் என்ற கேள்வியினையும் தொடர்ந்து கேட்டு தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துவருகிறார்கள்.

வாடிக்கையாளர் சேவை எண் போன்றுதான் இதுவும் என்று எடுத்துக் கொண்டாலும் அனைத்துவிதமான போன்களிலும் இந்த எண் பதிவு செய்யப்பட்டதாகவே தெரியவருகிறது. இதனால் தனிமனிதனின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக பலர் கருத்து தெரித்துள்ளனர்.
இது குறித்து ஆதார் நிறுவன அதிகாரிகள் பேசுகையில், நாங்கள் எந்த ஒரு மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனத்திடமும், சர்வீஸ் ப்ரொவைடர்களிடமும் இந்த எண்ணை டீஃபால்ட்டாக இணைக்க வேண்டும் என்று கூறவில்லை என்று அறிவித்திருக்கிறது.

யு.ஐ.டி.ஏ.ஐ எப்படி இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார்கள் பொதுமக்கள். சில நாட்களுக்கு முன்பு தான் எந்த ஒரு சமூக வலைதளத்திலும் ஆதார் சேலஞ்ச் என எதையாவது ஏற்றுக் கொண்டு ஆதார் எண்களை பதிய வேண்டாம் என யு.ஐ.டி.ஏ.ஐ கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது!

இந்நிலையில் ஆதார் நிறுவன டோல்ப்ரீ எண் ஆன்ட்ராய்ட் மொபைல் போன்களில் தானாக இணைக்கப்பட்டதற்க்கு ஆன்ட்ராய்ட் இயங்குதளமே காரணம் என்று கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. 2014ஆம் ஆண்டு UIDAI சேவை எண்ணும் 112 என்ற பேரிடர் உதவி எண்ணும் ஆண்ட்ராய்டு இயங்கு தளம் ஸ்டெப்அப் ஜிசார்ட்டில் கவனக்குறைவாக கோடிங் செய்யப்பட்டதாகக் கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், பயனாளர்களின் ஆண்ட்ராய்டு கருவிகளில் அங்கீரிக்கப்படாத எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை என்று உறுதியளித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.