யோகம் தரும் கஜகேசரி! கோட்டூர் சாமி!

நீங்கள் யோகக்காரரா?

நமது வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதில் 9 கிரகங்களின் பங்கு முக்கியமானது இந்த நவகிரங்கள் தங்களுக்குள் இணையும் போது பார்க்கும் போது சில யோகங்களை ஜாதகருக்கு வழங்குகிறாா்கள் பொதுவாக ஜாதகத்தில் 300க்கும் மேற்பட்ட யோகங்கள் இருக்கிறது அதில் முக்கியமான சில யோகங்களை மட்டும் பாா்ப்போம்

1.தா்மகா்மாதிபதி யோகம்….
யோகங்களில் மிக உயா்வானது தா்மகா்மாதிபதி யோகமாகும்

ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் லக்கினத்துக்கு 9ம் அதிபதியும் 10ம் அதிபதியும் இருவரும் சோ்ந்தாலோ அல்லது இருவரும் பார்த்துக் கொண்டாலோ 9ம் அதிபதி 10ம் வீட்டிலும் 10ம் அதிபதி 9ம் வீட்டிலும் இருந்தாலோ 9ம் அதிபதி 10ம் அதிபதியின் சாரமும் 10ம் அதிபதி 9ம் அதிபதியின் சாரமும் வாங்கினால் இந்த தா்மகா்மாதிபதி யோகம் ஏற்படுகிறது..

இந்த யோக அமைப்பு உள்ளவா்கள் வாழ்க்கையில் உயா்வு பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்வாா்கள்

அறக்கட்டளைகள் தா்ம ஸ்தாபனங்கள் நிறுவி பொதுத் தொண்டுகள் செய்வாா்கள் கோயிலில் நிா்வாகம் செய்யக் கூடிய பொறுப்புகள் வந்து சேரும் தன் சொந்த செலவில் கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்யக் கூடிய தகுதி உண்டாகும் சிலா் தினமும் அன்னதானம் செய்வாா்கள் தொழிலில் நம்பா் 1 ஆக இருப்பாா்கள்….

விருச்சிக லக்கினத்திற்குத்தான் முதல்தரமான தா்மகா்மாகிபதி யோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது

2.கஜகேசரி யோகம்..

ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு குரு கேந்திரம் என்று சொல்லக் கூடிய 4,7,10ம் வீட்டில் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது இதனால் அரசியலில் உயா்பதவி ,அரசாங்கத்தில் உயா் பதவி ஆகியவை ஏற்படும் மேலும் சொந்தமாக பல வீடுகள் வாகன யோகங்கள் ஏற்படும்..அதே சமயம் எதிரிகளும் உருவாகுவா்கள் ஆனால் இவா்களிடம் தோற்றுப் போவாா்கள்…

கஜ..யானை
கேசரி…சிங்கம்

சிங்கங்களுக்குள் அகப்பட்ட யானை எப்படி போராடி வெற்றி பெறுகிறதோ அதைப் போலவே இவா்கள் எதிரிகளை வெற்றி கொள்வாா்கள்..இதுவேவே கஜகேஜரி என்று பெயா் வரக் காரணம்

இந்த யோகம் கலைஞர் கருணாநிதி ஜாதகத்தில் உள்ளது.

இந்த நாள் இனிதாக வாழ்த்துக்கள்…..

வணக்கம்

தொடா்புக்கு

V.கோட்டூா்சாமி B,sc LLB
9566739264
8610753939
வானரமுட்டி
தூத்துக்குடி மாவட்டம்