#ஸ்டெர்லைட் விவகாரம்! தமிழக அரசு மேல்முறையீடு?

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22-ந் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தேசிய பசுமை … Continue reading #ஸ்டெர்லைட் விவகாரம்! தமிழக அரசு மேல்முறையீடு?

மோமோ? விளையாட்டு வினையாகும் பரிதாபம்!! விழிப்படையுமா இளைய சமுதாயம்?

இளைஞர்களின் உயிரை பலிவாங்க வாட்ஸ் அப்பில் படையெடுத்திருக்கும் அடுத்த விளையாட்டு தான் மோமோ சேலஞ். மோமோ சேலஞ் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர்கள், சிறுவர்களின் உயிரை பறிக்க வந்த ஒரு வாட்ஸ் அப் விளையாட்டு தான் நீல திமிங்கலம் (blue whale challenge). இந்த விளையாட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். விளையாட்டு வினையாகும் என்பார்கள். அதுப்போல் இந்த நீல திமிங்கல விளையாட்டு எமனாக வந்தது. ரஷ்யாவில் தொடங்கிய இந்த ஆபத்தான விளையாட்டு கொஞ்சம் கொஞ்சமாக … Continue reading மோமோ? விளையாட்டு வினையாகும் பரிதாபம்!! விழிப்படையுமா இளைய சமுதாயம்?

கேரளாவில் வெள்ளப்பெருக்கு? பலி 29! உள்துறை அமைச்சர் ஆய்வு?

தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருவதால் கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மீட்புப் பணியில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, மழை மற்றும் நிலச்சரிவால் கடந்த சில தினங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் பல பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதிலும் 439 முகாம்களில் 53,401 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கேரள மாநிலத்தில் கடந்த 8-ஆம் தேதி … Continue reading கேரளாவில் வெள்ளப்பெருக்கு? பலி 29! உள்துறை அமைச்சர் ஆய்வு?

இந்திய வாலிபரைக் கொன்றவர்! துப்பாக்கியால் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் கனாஸ்சிட்டியில் உள்ள மசோரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவரைச் சுட்டுக் கொன்றவராகக் கருதப்படும் இளைஞரைக் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞரை போலீஸார் சுட்டுக்கொன்றனர். தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரைச் சேர்ந்தவர் சரத் கொப்பு (வயது 25). ஐ.டி. இன்ஜினீயரான சரத் கொப்பு, மிசோரி மாநிலம், கனாஸ் சிட்டியில் உள்ள மசோரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். மேலும், சரத் கொப்பு படித்துக்கொண்டே, அங்குள்ள ஜேபிஷ் அன்ட் சிக்கன் மார்க்டெ … Continue reading இந்திய வாலிபரைக் கொன்றவர்! துப்பாக்கியால் சுட்டுக் கொலை!

வதந்தி பரப்புவோருக்கு வருகிறது ஆப்(பு)! வாட்சப் நிறுவனம் அதிரடி!

வதந்திகளையும், போலிச் செய்திகளையும் தடுக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக ஒரு மெசேஜ் எங்கிருந்து வருகிறது, யார் அனுப்புகிறார்கள், பரப்புகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் முறையை வகுத்து வருகிறோம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் முக்கிய இடம் வகிக்கும் வாட்ஸ் அப்பில் பல்வேறுவிதமான நம்பகத்தன்மையில்லாத செய்திகள், மெசேஜ்கள், படங்கள் சமீபகாலமாக பரப்பிவிடப்படுகின்றன. குறிப்பாக, பலாத்காரம், குழந்தைகள் கடத்தல், பசுக்களைக் கடத்துதல் தொடர்பான வீடியோக்கள் போன்றவை போலியாகச் சித்தரிக்கப்பட்டும், பழைய வீடியோக்களையும் சமீபத்தில் … Continue reading வதந்தி பரப்புவோருக்கு வருகிறது ஆப்(பு)! வாட்சப் நிறுவனம் அதிரடி!

2016-2017 ல் அதிகளவில் பணம் பதுக்கிய இந்தியர்கள்? அதிர்ச்சி தகவல்

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்த பணத்தின் அளவு 2016ஆம் ஆண்டை விட 2017ஆம் ஆண்டில் 50% அதிகரித்து உள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது. ஆண்டு வாரியான தரவுகளின் படி 2017-ல் மொத்தமாக வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பணம் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது 2017-ம் ஆண்டில் மட்டும் 1.46 ட்ரில்லியன் இந்திய மதிப்பில் சுமார் 100 லட்சம் கோடி டெபாசிட் ஆகியுள்ளது. கடந்த 2016-ல் அதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியர்களின் டெபாசிட் 45 சதவிகிதம் … Continue reading 2016-2017 ல் அதிகளவில் பணம் பதுக்கிய இந்தியர்கள்? அதிர்ச்சி தகவல்

பெண்களுக்கு எதிரான வன்முறையில் தமிழகத்தின் நிலை? முதல்வர் விளக்கம்!

இந்தியாவிலேயே வன் குற்றங்களின் அடிப்படையில் தமிழகத்தின் நிலை என்ன என்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2018 - 19ம் ஆண்டுக்கான காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பின் தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அதில், 2016ஆம் ஆண்டைய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி, சொத்து சம்பந்தமான குற்றங்களில் நமது மாநிலத்தின் நிலை என்ன என்பதை இங்கு குறிப்பிட … Continue reading பெண்களுக்கு எதிரான வன்முறையில் தமிழகத்தின் நிலை? முதல்வர் விளக்கம்!

பதஞ்சலியின் உலகளாவிய திருட்டு! தோலுரித்து காட்டிய சவுக்கு

இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும். ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர். ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர். ஒருவர் ஜக்கி வாசுதேவ். மற்றொருவர் பாபா ராம்தேவ். … Continue reading பதஞ்சலியின் உலகளாவிய திருட்டு! தோலுரித்து காட்டிய சவுக்கு

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறது அமெரிக்கா? அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அந்த ஒப்பந்தம் எதற்காக போடப்பட்டது; அதன் பின்னணி என்ன; விலகுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பார்க்கலாம்.... ஒப்பந்தத்தில் உள்ளது என்ன? அணு குண்டு தயாரிப்பை நோக்கி சென்று கொண்டிருந்த ஈரானை தடுக்க, பல பொருளாதார தடைகளை சர்வதேச நாடுகள் விதித்தன. எண்ணெய் ஏற்றுமதியை மையமாக கொண்ட ஈரான் பொருளாதாரம் பெரிதும் பாதித்தது. வேறு வழியே இல்லாமல், ஒரு சர்வதேச உடன்படிக்கையில் … Continue reading ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறது அமெரிக்கா? அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

ரூ.10,000 கோடி மோசடி: மல்லையாவுக்கு செக் வைத்தது இங்கிலாந்து நீதிமன்றம்!

தொழிலதிபர் விஜய் மல்லையா மீது இந்திய வங்கிகள் தொடுத்த ரூ.10,000 கோடி மோசடி வழக்கில், அவருக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிங்பிஷர் நிறுவன தலைவர் விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள 13 வங்கிகளில் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவில் கடன் வாங்கி, அதை திருப்பிக் கொடுக்காமல், இங்கிலாந்து தப்பித்து சென்றார். அவருக்கு எதிராக வழக்கு தொடுத்த வங்கிகள், அவரின் சொத்துக்களை முடக்க கோரின. கர்நாடக நீதிமன்றம் இந்த வழக்கில், அவரின் சொத்துக்களை முடக்க உத்தரவிட்டன. … Continue reading ரூ.10,000 கோடி மோசடி: மல்லையாவுக்கு செக் வைத்தது இங்கிலாந்து நீதிமன்றம்!

“மே” தினத்தின் பின்னனி

​8 மணிநேர உழைப்பு, 8 மணிநேர ஓய்வு 8 மணிநேர உறக்கம் என்பது இன்று உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் உரிமை. இந்த உரிமை சாதாரணமாகப் பெறப்படவில்லை. எண்ணற்ற தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்து பெற்ற உரிமை இது. 1880இல் தொழிலாளர்களின் பணிநேரம் என்பது அதிகாலை முதல் அந்தி சாயும்வரை. மிகக் குறைவான கூலி, 16 மணிநேரம் 18 மணிநேரம் பணி என்பதே அன்றைய நடைமுறை. தொழிற்புரட்சி தொடங்கியதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் … Continue reading “மே” தினத்தின் பின்னனி

இந்தியா பாகிஸ்தான் இராணுவங்களின் கூட்டுப் பயிற்சி!

எஸ்.சி.ஓ. என்னும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2001-ம் ஆண்டு ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்களால் உருவாக்கப்பட்டது.இந்த அமைப்பில் 2005-ம் ஆண்டு, இந்தியாவும், பாகிஸ்தானும் பார்வையாளர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டன.இவ்விரு நாடுகளும் கடந்த ஆண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டன.நேட்டோ அமைப்புக்கு சமமாக இந்த அமைப்பு கருதப்படுகிறது. இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த பயிற்சியின் … Continue reading இந்தியா பாகிஸ்தான் இராணுவங்களின் கூட்டுப் பயிற்சி!