இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி தூக்குவார் என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதைத் தொடங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கருணாநிதி மறைந்த 7-ஆவது நாளிலேயே அழகிரி தனது எதிர்ப்பை ஆரம்பித்திருக்கிறார். ஸ்டாலின் கலக்கம்? ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம்' தொடங்கியது போன்று, அழகிரியும் இப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் தனது பாணி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் உள்ளனர். என் … Continue reading இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த அஇஅதிமுக நிர்வாகி? நெரிசலில் சிக்கி பலி!

ராஜாஜி ஹாலில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியபோது நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் அதிமுக நிர்வாகியும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மரணமடைந்தார். மறுநாள் அதிகாலை அவரது உடல் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. காலையிலிருந்தே அவரது உடலைக்காண லட்சக்கணக்கான மக்கள் ராஜாஜி ஹாலில் குவிந்தனர். கருணாநிதியின் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்கிற வேட்கையில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். பிரதமர் வந்துச்சென்ற பின்னர் தடுப்புகளை தாண்டி முண்டியடித்துக்கொண்டு பொதுமக்கள் முன்னேறியதால் கடும் … Continue reading கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த அஇஅதிமுக நிர்வாகி? நெரிசலில் சிக்கி பலி!

தமிழர்கள் அகதிகளா? மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் அகதிகள் வருகிறார்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது. அதிமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தான் வாய்தவறி பேசிவிட்டதாகக் கூறிவிட்டார். மக்களவையில் பல்வேறு துணைக் கேள்விகளுக்கு நேற்று மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார். அப்போது அகதிகள் விவகாரம் குறித்துப் பேசுகையில், ” மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் வரும் ரோஹிங்கயா முஸ்லிகளுக்கு அகதிகள் … Continue reading தமிழர்கள் அகதிகளா? மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

சுழன்றடிக்கும் சூறாவளியாய் கழக பணிகளை மேற்கொள்ளும் #அஇஅதிமுக_இராமநாதபுர_மாவட்ட_கழகம்!

சமீபகாலமாக அஇஅதிமுக கழகத்தின் வளர்ச்சியில் தொய்வு ஏற்ப்பட்டிருப்பதாகவும், கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை குறித்து நிர்வாகிகள் யாரும் அக்கறையுடன் செயல்படுவதே இல்லையென்றும் பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்திளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் அப்படி வரும் செய்திகள் தவறான வதந்திகளே ,நாங்கள் எங்கள் அஇஅதிமுக கழக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தே பணி செய்கிறோம் என்பதை #சொல்லால்_சொல்லாமல்_செயலால்_காட்டிவரும்_இராமநாதபுர_அஇஅதிமுக . இது தொடர்பாக இராமநாதபுர மாவட்ட அஇஅதிமுக கழக நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது! பல்வேறு செய்தி நிறுவனங்களும் அதிமுகவின் வாக்கு வங்கி சரிவடைந்துள்ளதாகவும், … Continue reading சுழன்றடிக்கும் சூறாவளியாய் கழக பணிகளை மேற்கொள்ளும் #அஇஅதிமுக_இராமநாதபுர_மாவட்ட_கழகம்!