தமிழக அமைச்சரவை விரிவாக்கம்?? புதியவர்களுக்கு வாய்ப்பா???

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சரான மணிகண்டன் நீக்கப்பட்ட நிலையில்.... இப்போது அமைச்சரவையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை நிலவுகிறது. இந்தக் குறையைத் தீர்க்க வேண்டும் என்று அதிமுகவுக்குள் அடுத்த கட்ட நகர்வுகள் ஆரம்பித்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். திருவாடானை தொகுதியில் முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் … Continue reading தமிழக அமைச்சரவை விரிவாக்கம்?? புதியவர்களுக்கு வாய்ப்பா???

18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை என்றும் சபாநாயகர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே தகுதிநீக்கம் செய்தார் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது. 18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கு, மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு மூன்றாவது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்ஏ-க்கள் தரப்பிலான வாதம் கடந்த 2 நாட்களில் முடிவடைந்த நிலையில், நேற்று சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலர் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார். … Continue reading 18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

Ops ன் திடீர் டில்லிப் பயணத்தின் முழுப் பின்னனி ? அதிர்ச்சி தகவல்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளதாகக் கடந்த மார்ச் 10ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அனுப்பியது நினைவிருக்கும். அந்த மனுவில், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துகளின் பட்டியலுக்கும் வருமான வரித் துறையில் செலுத்தியுள்ள சொத்துகளின் விவரங்களிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி, மகன்கள், மற்றும் மகளின் … Continue reading Ops ன் திடீர் டில்லிப் பயணத்தின் முழுப் பின்னனி ? அதிர்ச்சி தகவல்

OPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்? சிறப்புச் செய்தி!

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டதாக, ஊடகங்களில் செய்தி பரவியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது டில்லியில் நேற்று, தமிழ்நாடு இல்லத்திலிருந்து கிளம்பும் முன், நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த, என் சகோதரரை, மேல் சிகிச்சைக்காக, மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.அதற்கு, 'ஏர் ஆம்புலன்ஸ்' வசதியை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏற்பாடு செய்து தந்தார். அதற்காக, அவரை நேரில் சந்தித்து, … Continue reading OPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்? சிறப்புச் செய்தி!

உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் 3-ஆவது நீதிபதி விசாரணையில், "அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காததே எங்களது முதல் குற்றச்சாட்டு" என தினகரன் தரப்பு வாதம் வைத்தது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதியின் விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது. இந்த வழக்கு மீதான விசாரணை திங்கள்கிழமை முதல் வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறும் 3-ஆவது நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்தார். இதையடுத்து, முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது தகுதி … Continue reading உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

பாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி? அதிமுக தலைமை அதிர்ச்சி!

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தையொட்டி நடந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சிகளை சேர்ந்த பல எம்.பிக்கள் வாக்களிக்காத விவரம் தற்போது வெளியாகியுள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 4 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி ஸ்ரீநிவாஸ் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப் … Continue reading பாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி? அதிமுக தலைமை அதிர்ச்சி!

18 எம்எல்ஏகள் தகுதி நீக்கம்? இன்று மூன்றாவது நீதிபதி விசாரணை துவக்கம்!

சென்னை : சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று(ஜூலை 23) முதல் மூன்றாவது நீதிபதி, சத்திய நாராயணன் விசாரிக்கிறார். தொடர்ந்து ஐந்து நாட்கள், விசாரணை நடைபெற உள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து, அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். 'பழனிசாமிக்கு எங்கள் ஆதரவு இல்லை; அவரை மாற்ற வேண்டும்' என, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், கவர்னரிடம் … Continue reading 18 எம்எல்ஏகள் தகுதி நீக்கம்? இன்று மூன்றாவது நீதிபதி விசாரணை துவக்கம்!

நல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்! ஆய்வு தகவல்!

இந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும் ஆய்வு மையம் ஆண்டு தோறும் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களின் பட்டியலை பப்ளிக் அஃபேர்ஸ் இன்டக்ஸ் எனும் ஆய்வறிக்கை மூலம் வெளியிடும். இந்த மையமானது மாநிலங்கள் முழுவதும் ஆய்வு நடத்தி அதனை சமூக வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் வரிசைபடுத்தி பட்டியலிடப்படும். அதுமட்டுமின்றி, 2 கோடி மக்கள் தொகைக்கு மேல் உள்ள … Continue reading நல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்! ஆய்வு தகவல்!

“ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்? மம்தா-சந்திரபாபு நாயுடு பேச்சு!

மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு எதிராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி குறிப்பிட்டார். ஜெயலலிதா இருந்திருந்தால் … Continue reading “ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்? மம்தா-சந்திரபாபு நாயுடு பேச்சு!

உயிர்பெறுமா? ஆன்லைன் அதிமுக!

அதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துக்கொள்வது ஆகிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து துவக்கி வைத்தனர். கட்டுக் கட்டாக புதிய உறுப்பினர் சேர்க்கைப் படிவங்களை பன்னீர், பழனிசாமியிடம் இருந்து அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுத்து பெற்றுச் சென்றனர். தலைமைக் கழகத்தில் உற்சாகமாக நடந்த இந்த கூட்டத்துக்குப் பின் உடனடியாக துணை முதல்வர் … Continue reading உயிர்பெறுமா? ஆன்லைன் அதிமுக!