போட்டி திமுக பிரம்மாண்ட பேரணி? மதுரையின் முக்கிய முடிவுகள்!

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்கொடி துாக்கி உள்ள, அவரது அண்ணன் அழகிரி தலைமை யில், விரைவில், போட்டி தி.மு.க., உதயமாகிறது. கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆக.,7ல் மரணம் அடைந்தார். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 14ம் தேதி, அறிவாலயத்தில், தி.மு.க., தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடந்தது. அதில் … Continue reading போட்டி திமுக பிரம்மாண்ட பேரணி? மதுரையின் முக்கிய முடிவுகள்!

இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி தூக்குவார் என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதைத் தொடங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கருணாநிதி மறைந்த 7-ஆவது நாளிலேயே அழகிரி தனது எதிர்ப்பை ஆரம்பித்திருக்கிறார். ஸ்டாலின் கலக்கம்? ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம்' தொடங்கியது போன்று, அழகிரியும் இப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் தனது பாணி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் உள்ளனர். என் … Continue reading இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!

திக்…. திக்…. திமுக! நாளை நடக்கப் போவதென்ன? சிறு பார்வை!

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ என, முக்கிய நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால், ஆக., 7ல் காலமானார். அவரது உடல், மெரினாவில் உள்ள அண்ணாதுரை நினைவிடத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டது. நினைவிடத்திற்கு, தினமும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வந்து, அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். இந்நிலையில், தி.மு.க., செயற்குழு கூட்டம், செயல் தலைவர் … Continue reading திக்…. திக்…. திமுக! நாளை நடக்கப் போவதென்ன? சிறு பார்வை!

அமமுகவில் தொடரும் பணிப்போர்! தொண்டர்களின் கோபக்கணையில் சிக்கிய ஜனா!

‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்னிச்சையாகக் கழகத்தைச் சார்ந்தவர் போல, விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்த தேனி கர்ணன் அவர்கள், தற்போது சமூக வலைதளங்களில் கழகத்திற்கு எதிரான விஷமத்தனமான செய்திகளைப் பரப்பி வருகிறார் எனத் தெரியவருகிறது. ஆகவே, கழகத் தோழர்கள் தேனி கர்ணனுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ -இப்படி ஒரு அறிவிப்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியாகியிருக்கிறது. தொலைக்காட்சி … Continue reading அமமுகவில் தொடரும் பணிப்போர்! தொண்டர்களின் கோபக்கணையில் சிக்கிய ஜனா!

தேனி கர்ணன் அமமுக விலிருந்து நீக்கம்? பின்னனி என்ன? தொடரும் சர்ச்சை!

‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்னிச்சையாகக் கழகத்தைச் சார்ந்தவர் போல, விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்த தேனி கர்ணன் அவர்கள், தற்போது சமூக வலைதளங்களில் கழகத்திற்கு எதிரான விஷமத்தனமான செய்திகளைப் பரப்பி வருகிறார் எனத் தெரியவருகிறது. ஆகவே, கழகத் தோழர்கள் தேனி கர்ணனுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ -இப்படி ஒரு அறிவிப்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியாகியிருக்கிறது. தொலைக்காட்சி … Continue reading தேனி கர்ணன் அமமுக விலிருந்து நீக்கம்? பின்னனி என்ன? தொடரும் சர்ச்சை!

தமிழர்கள் அகதிகளா? மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் அகதிகள் வருகிறார்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது. அதிமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தான் வாய்தவறி பேசிவிட்டதாகக் கூறிவிட்டார். மக்களவையில் பல்வேறு துணைக் கேள்விகளுக்கு நேற்று மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார். அப்போது அகதிகள் விவகாரம் குறித்துப் பேசுகையில், ” மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் வரும் ரோஹிங்கயா முஸ்லிகளுக்கு அகதிகள் … Continue reading தமிழர்கள் அகதிகளா? மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

பதவி நியமனத்தில் பாரபட்சம்? தன்னிச்சையாக செயல்படும் மூவர் அணி! போராடத் தயாரான தொழில்நுட்ப பிரிவு?

“ ஆரம்பத்துல சாதாரணத் தொண்டன்கூட நினைச்ச நேரத்துல TTV தினகரனைப் பார்க்க முடிஞ்சது. அதனால்தான் தொண்டர்கள் அவரை விரும்பினாங்க; தேடி வந்தாங்க. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அது எல்லாமே மாறிடுச்சு. தினகரன் கட்சியில் அதிகாரம் என்பது ஒரு நபர் கைக்குப் போயிடுச்சு. அந்த ஒரு நபர் தினகரன் இல்லை; அவரது உதவியாளர் ஜனார்த்தனன். கடந்த 6 மாதங்களாகவே ஜனார்த்தனன் மீது பல புகார்கள் வந்தன. எல்லாம் தினகரன் கவனத்துக்கும் போனது. ஆனால், அவர் கண்டுகொள்ளவே இல்லை. … Continue reading பதவி நியமனத்தில் பாரபட்சம்? தன்னிச்சையாக செயல்படும் மூவர் அணி! போராடத் தயாரான தொழில்நுட்ப பிரிவு?

தினகரன் பேச்சு! தகுதி நீக்க எம்எல்ஏ அதிர்ப்தி? கலகலத்த பரமக்குடி!

மறைந்த முன்னால் குடியரசுத் தலைவர் #அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இராமநாதபுரம் அருகே பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர். அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த இராமநாதபுரம் மாவட்ட அமமுக தலைவர் Ttv தினகரன் நேற்று பிற்பகல் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து சேர்ந்தவர் தனியார் விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டு மாலை மதுரையிலிருந்து சாலைப் பயணமாக இராமநாதபுரம் … Continue reading தினகரன் பேச்சு! தகுதி நீக்க எம்எல்ஏ அதிர்ப்தி? கலகலத்த பரமக்குடி!

18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை என்றும் சபாநாயகர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே தகுதிநீக்கம் செய்தார் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது. 18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கு, மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு மூன்றாவது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்ஏ-க்கள் தரப்பிலான வாதம் கடந்த 2 நாட்களில் முடிவடைந்த நிலையில், நேற்று சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலர் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார். … Continue reading 18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

Ops ன் திடீர் டில்லிப் பயணத்தின் முழுப் பின்னனி ? அதிர்ச்சி தகவல்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளதாகக் கடந்த மார்ச் 10ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அனுப்பியது நினைவிருக்கும். அந்த மனுவில், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துகளின் பட்டியலுக்கும் வருமான வரித் துறையில் செலுத்தியுள்ள சொத்துகளின் விவரங்களிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி, மகன்கள், மற்றும் மகளின் … Continue reading Ops ன் திடீர் டில்லிப் பயணத்தின் முழுப் பின்னனி ? அதிர்ச்சி தகவல்

OPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்? சிறப்புச் செய்தி!

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டதாக, ஊடகங்களில் செய்தி பரவியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது டில்லியில் நேற்று, தமிழ்நாடு இல்லத்திலிருந்து கிளம்பும் முன், நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த, என் சகோதரரை, மேல் சிகிச்சைக்காக, மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.அதற்கு, 'ஏர் ஆம்புலன்ஸ்' வசதியை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏற்பாடு செய்து தந்தார். அதற்காக, அவரை நேரில் சந்தித்து, … Continue reading OPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்? சிறப்புச் செய்தி!

பாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி? அதிமுக தலைமை அதிர்ச்சி!

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தையொட்டி நடந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சிகளை சேர்ந்த பல எம்.பிக்கள் வாக்களிக்காத விவரம் தற்போது வெளியாகியுள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 4 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி ஸ்ரீநிவாஸ் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப் … Continue reading பாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி? அதிமுக தலைமை அதிர்ச்சி!

“ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்? மம்தா-சந்திரபாபு நாயுடு பேச்சு!

மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு எதிராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி குறிப்பிட்டார். ஜெயலலிதா இருந்திருந்தால் … Continue reading “ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்? மம்தா-சந்திரபாபு நாயுடு பேச்சு!

நம்பிக்கையில்லாத் தீர்மானம்! வியூகம் வகுக்கும் பாஜக!

மக்களவையில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளும் பாஜக திடீரென ஏற்றுக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்களவை தேர்தலுக்கான வியூகத்தை அக்கட்சித் தலைவர் அமித் ஷா மாற்றியுள்ளதாக தெரிகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தது. இதன்படி, … Continue reading நம்பிக்கையில்லாத் தீர்மானம்! வியூகம் வகுக்கும் பாஜக!

தொடரும் வருமான வரித்துறை ரெய்டு! மலை போன பணக்குவியலால் அதிகாரிகள் அதிர்ச்சி!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 60). இவர் அரசு முதல் நிலை காண்டிராக்டர். இவருக்கு கருப்பசாமி, ஈஸ்வரன், நாகராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர். செய்யாத்துரை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார். தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கப்பலூர் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை சேகர்ரெட்டி என்பவர் எடுத்து இருந்தாலும் அந்தவேலையை … Continue reading தொடரும் வருமான வரித்துறை ரெய்டு! மலை போன பணக்குவியலால் அதிகாரிகள் அதிர்ச்சி!

அம்த்ஷா பேச்சுக்கு இலகணேசன் விளக்கம்? அதிமுகவை விமர்சித்து பேசவில்லை!

அதிமுக அரசை ஊழல் அரசு என அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 9-ம் தேதி சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் பாஜக ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், ''தமிழகத்தை நினைத்தால் எனக்கு வேதனையாக இருக்கிறது. மிகவும் ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கிறது. இந்த ஊழல்கள் அனைத்தும் … Continue reading அம்த்ஷா பேச்சுக்கு இலகணேசன் விளக்கம்? அதிமுகவை விமர்சித்து பேசவில்லை!

ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா? மக்கள் நீதி மய்யம் அதிரடி!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது. இதற்கு பிறகு முதல் முறையாக, ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சி கொடியை ஏற்றினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன். இதன்பிறகு, மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனிடையே, கமல்ஹாசன் வருகையால் ஆழ்வார்பேட்டை சிக்னல் முதல் சுற்றிலுமுள்ள இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இது ஒருபக்கம் என்றால், … Continue reading ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா? மக்கள் நீதி மய்யம் அதிரடி!

மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை எதிர்த்து, வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்குப் பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர். இறுதியில் … Continue reading மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

தகுதிநீக்க வழக்கு! ஆகஸ்டில் இறுதி தீர்ப்பா?

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணையை ஆரம்பித்த மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அனைத்து தரப்பினரும் வழக்கில் ஆஜராக வசதியாக ஜூலை 23 முதல் வழக்கு விசாரணை தொடங்கி தினமும் நடக்கும் என்று உத்தரவிட்டார். தமிழக முதல்வர் கே.பழனிசாமியை மாற்றக் கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் தமிழக ஆளுநரிடம் கடந்த ஆண்டு மனு அளித்தனர். இதில் ஜக்கையனைத் தவிர மீதமுள்ள 18 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை … Continue reading தகுதிநீக்க வழக்கு! ஆகஸ்டில் இறுதி தீர்ப்பா?

வதந்தி பரப்புவோருக்கு வருகிறது ஆப்(பு)! வாட்சப் நிறுவனம் அதிரடி!

வதந்திகளையும், போலிச் செய்திகளையும் தடுக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக ஒரு மெசேஜ் எங்கிருந்து வருகிறது, யார் அனுப்புகிறார்கள், பரப்புகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் முறையை வகுத்து வருகிறோம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் முக்கிய இடம் வகிக்கும் வாட்ஸ் அப்பில் பல்வேறுவிதமான நம்பகத்தன்மையில்லாத செய்திகள், மெசேஜ்கள், படங்கள் சமீபகாலமாக பரப்பிவிடப்படுகின்றன. குறிப்பாக, பலாத்காரம், குழந்தைகள் கடத்தல், பசுக்களைக் கடத்துதல் தொடர்பான வீடியோக்கள் போன்றவை போலியாகச் சித்தரிக்கப்பட்டும், பழைய வீடியோக்களையும் சமீபத்தில் … Continue reading வதந்தி பரப்புவோருக்கு வருகிறது ஆப்(பு)! வாட்சப் நிறுவனம் அதிரடி!

போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு? ரவுடி என்கவ்ன்ட்டர்!

சென்னை கிண்டியில் போலீஸை வெட்டிய ரவுடியை போலீஸார் பிடிக்கச் சென்றபோது நடந்த மோதலில் கொல்லப்பட்டார். இதில் உதவி ஆய்வாளர் காயமடைந்தார். சென்னை பி.எம்.தர்கா பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். நேற்று பி.எம்.தர்காவில் ரவுடிகள் அட்டூழியம் செய்வதாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற காவலர் ராஜவேலுவை 10 பேர் கும்பல் சூழ்ந்து வெட்டியது. இதில் 16 இடங்களில் வெட்டுப்பட்ட ராஜவேலு ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் நேற்று காலை … Continue reading போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு? ரவுடி என்கவ்ன்ட்டர்!

காவலர்களுக்கு ஓய்வு? அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க கடந்த 2012 ஆம் ஆண்டு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது காவலர்கள் தொடர் தற்கொலை குறித்து நீதிபதி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் காவலர்கள் வீட்டில் ஆடர்லியாக உள்ளவர்களின் விவரம் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். மீண்டும் இந்த வழக்கு … Continue reading காவலர்களுக்கு ஓய்வு? அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

11-பேர் கொலையா? புதுதில்லி போலீசார் குழப்பம்!

டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்யவில்லை, அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். டெல்லியின் வடக்குப்பகுதியில் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் நேற்று வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்துகொண்டதில் வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி(வயது77) தரையில் படுத்தவாறு இறந்திருந்தார். … Continue reading 11-பேர் கொலையா? புதுதில்லி போலீசார் குழப்பம்!

ரேஷன் கார்டு ரத்து? மத்திய அரசு விளக்கம்!

ரேஷன் கார்டைப் பயன்படுத்தி தொடர்ந்து 3 மாதங்கள் பொருட்கள் வாங்காதவர்களின் கார்டுகளை ரத்து செய்யலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநிலங்களின் உணவுத்துறை அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் ராம் விலாஸ் பாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டில் ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள் அனைவரும் முறையாக கார்டுகளை பயன்படுத்துவதில்லை. சில பணக்காரர்கள் ரேஷன்கார்டை பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். அவர்களை அடையாளம் … Continue reading ரேஷன் கார்டு ரத்து? மத்திய அரசு விளக்கம்!

அதிர்ச்சி! எரிவாயு சிலின்டர் விலை உயர்வு! அடி வையிற்றில் தீ வைத்த மத்திய அரசு!

மானியத்துடன் கூடிய கேஸ் சிலிண்டர் விலை நள்ளிரவு முதல் அதிரடியாக ரூ.2.83 அதிகரித்துள்ளது. கேஸ் சிலிண்டர்களின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கின்றன. மாதத்தின் முதல் நாள் இந்த விலை மாற்றம் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த மாதத்துக்கான, விலைள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் மானியத்துடன் கூடிய சிலிண்டர் ஒன்றுக்கு சென்னையில் ரூ.2.83 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.481.84 ஆக இருந்த மானிய சிலிண்டர் விலை ரூ.484.67 ஆக உயர்ந்து ள்ளது. மானியமில்லா சிலிண்டருக்கும் சென்னையில் ரூ.58.00 உயர்ந்துள்ளது. … Continue reading அதிர்ச்சி! எரிவாயு சிலின்டர் விலை உயர்வு! அடி வையிற்றில் தீ வைத்த மத்திய அரசு!