போட்டி திமுக பிரம்மாண்ட பேரணி? மதுரையின் முக்கிய முடிவுகள்!

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்கொடி துாக்கி உள்ள, அவரது அண்ணன் அழகிரி தலைமை யில், விரைவில், போட்டி தி.மு.க., உதயமாகிறது. கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆக.,7ல் மரணம் அடைந்தார். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 14ம் தேதி, அறிவாலயத்தில், தி.மு.க., தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடந்தது. அதில் … Continue reading போட்டி திமுக பிரம்மாண்ட பேரணி? மதுரையின் முக்கிய முடிவுகள்!

இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி தூக்குவார் என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதைத் தொடங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கருணாநிதி மறைந்த 7-ஆவது நாளிலேயே அழகிரி தனது எதிர்ப்பை ஆரம்பித்திருக்கிறார். ஸ்டாலின் கலக்கம்? ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம்' தொடங்கியது போன்று, அழகிரியும் இப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் தனது பாணி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் உள்ளனர். என் … Continue reading இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!

திக்…. திக்…. திமுக! நாளை நடக்கப் போவதென்ன? சிறு பார்வை!

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ என, முக்கிய நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால், ஆக., 7ல் காலமானார். அவரது உடல், மெரினாவில் உள்ள அண்ணாதுரை நினைவிடத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டது. நினைவிடத்திற்கு, தினமும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வந்து, அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். இந்நிலையில், தி.மு.க., செயற்குழு கூட்டம், செயல் தலைவர் … Continue reading திக்…. திக்…. திமுக! நாளை நடக்கப் போவதென்ன? சிறு பார்வை!

மம்தா போடும் இரட்டை வேடம்?

என்.ஆர்.சி. விவகாரத்தில் 2005-ம் ஆண்டு லோக்சபாவில் மம்தா பானர்ஜி, அநாகரீகமாக நடந்து கொண்டதை சுட்டிகாட்டி இப்போது அவர் இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை அடையாளம் காண என்.ஆர்.சி. எனப்படும் குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் 40 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படலாம் என பரவலாக பேசப்பட்டது. இதை கண்டித்து மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார். ஆனால் இதே போன்று 13 ஆண்டு முன் மேற்குவங்கத்தில் … Continue reading மம்தா போடும் இரட்டை வேடம்?

#அஞ்சா_நெஞ்சர்_அழகிரி #அடிப்பாரா_செஞ்ச்சுரி? பகுதி -2

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க, காவேரி மருத்துவமனைக்கு வரும், அவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் பலர், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினிடம் பேசும்போது, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை பற்றியும், தவறாமல் பேசுகின்றனர். அவரை மீண்டும் கட்சியில் இணைத்து செயல்படும்படி, ஸ்டாலினிடம் வலியுறுத்துவதாக, தகவல் வெளியாகியுள்ளது. தென் மண்டல அமைப்பு செயலர் பதவி வகித்த அழகிரி, 2014ல், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். அதனால், அதிருப்தி அடைந்த அழகிரி, லோக்சபா தேர்தலிலும், … Continue reading #அஞ்சா_நெஞ்சர்_அழகிரி #அடிப்பாரா_செஞ்ச்சுரி? பகுதி -2

தமிழகம் முழுவதும் காவல்துறை பாதூகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்!

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் பணியில் சுமார் 1.20 லட்சம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி முதுமையின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மாறிமாறி தகவல்கள் வந்ததால், திமுக தொண்டர்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையை … Continue reading தமிழகம் முழுவதும் காவல்துறை பாதூகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்!

பதவி நியமனத்தில் பாரபட்சம்? தன்னிச்சையாக செயல்படும் மூவர் அணி! போராடத் தயாரான தொழில்நுட்ப பிரிவு?

“ ஆரம்பத்துல சாதாரணத் தொண்டன்கூட நினைச்ச நேரத்துல TTV தினகரனைப் பார்க்க முடிஞ்சது. அதனால்தான் தொண்டர்கள் அவரை விரும்பினாங்க; தேடி வந்தாங்க. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அது எல்லாமே மாறிடுச்சு. தினகரன் கட்சியில் அதிகாரம் என்பது ஒரு நபர் கைக்குப் போயிடுச்சு. அந்த ஒரு நபர் தினகரன் இல்லை; அவரது உதவியாளர் ஜனார்த்தனன். கடந்த 6 மாதங்களாகவே ஜனார்த்தனன் மீது பல புகார்கள் வந்தன. எல்லாம் தினகரன் கவனத்துக்கும் போனது. ஆனால், அவர் கண்டுகொள்ளவே இல்லை. … Continue reading பதவி நியமனத்தில் பாரபட்சம்? தன்னிச்சையாக செயல்படும் மூவர் அணி! போராடத் தயாரான தொழில்நுட்ப பிரிவு?

தினகரன் பேச்சு! தகுதி நீக்க எம்எல்ஏ அதிர்ப்தி? கலகலத்த பரமக்குடி!

மறைந்த முன்னால் குடியரசுத் தலைவர் #அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இராமநாதபுரம் அருகே பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர். அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த இராமநாதபுரம் மாவட்ட அமமுக தலைவர் Ttv தினகரன் நேற்று பிற்பகல் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து சேர்ந்தவர் தனியார் விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டு மாலை மதுரையிலிருந்து சாலைப் பயணமாக இராமநாதபுரம் … Continue reading தினகரன் பேச்சு! தகுதி நீக்க எம்எல்ஏ அதிர்ப்தி? கலகலத்த பரமக்குடி!

அரசியல் சாணக்கியரின் ஐம்பதாம் ஆண்டு!

இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ‘முத்துவேல் கருணாநிதி’. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) ஒரு பகுதியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969 ல் இருந்து கட்சியை வழிவகுத்து வருகிறார். சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட வைத்தது. 60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்துகிறார். … Continue reading அரசியல் சாணக்கியரின் ஐம்பதாம் ஆண்டு!

சுழன்றடிக்கும் சூறாவளியாய் கழக பணிகளை மேற்கொள்ளும் #அஇஅதிமுக_இராமநாதபுர_மாவட்ட_கழகம்!

சமீபகாலமாக அஇஅதிமுக கழகத்தின் வளர்ச்சியில் தொய்வு ஏற்ப்பட்டிருப்பதாகவும், கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை குறித்து நிர்வாகிகள் யாரும் அக்கறையுடன் செயல்படுவதே இல்லையென்றும் பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்திளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் அப்படி வரும் செய்திகள் தவறான வதந்திகளே ,நாங்கள் எங்கள் அஇஅதிமுக கழக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தே பணி செய்கிறோம் என்பதை #சொல்லால்_சொல்லாமல்_செயலால்_காட்டிவரும்_இராமநாதபுர_அஇஅதிமுக . இது தொடர்பாக இராமநாதபுர மாவட்ட அஇஅதிமுக கழக நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது! பல்வேறு செய்தி நிறுவனங்களும் அதிமுகவின் வாக்கு வங்கி சரிவடைந்துள்ளதாகவும், … Continue reading சுழன்றடிக்கும் சூறாவளியாய் கழக பணிகளை மேற்கொள்ளும் #அஇஅதிமுக_இராமநாதபுர_மாவட்ட_கழகம்!

18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை என்றும் சபாநாயகர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே தகுதிநீக்கம் செய்தார் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது. 18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கு, மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு மூன்றாவது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்ஏ-க்கள் தரப்பிலான வாதம் கடந்த 2 நாட்களில் முடிவடைந்த நிலையில், நேற்று சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலர் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார். … Continue reading 18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

“அம்மா மக்கள் முன்னேற்ற கழக” துணைப் பொதுச் செயலாளரை வரவேற்க பரமக்குடி நகரம் தீவிரம்!

வருகிற 27/7/18 அன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அய்யா அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்த இராமநாதபுர மாவட்ட "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்" சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த "அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் #Ttv தினகரன் இராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு வருகை தருகிறார். 26/7/18 அன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் … Continue reading “அம்மா மக்கள் முன்னேற்ற கழக” துணைப் பொதுச் செயலாளரை வரவேற்க பரமக்குடி நகரம் தீவிரம்!

Ops ன் திடீர் டில்லிப் பயணத்தின் முழுப் பின்னனி ? அதிர்ச்சி தகவல்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளதாகக் கடந்த மார்ச் 10ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அனுப்பியது நினைவிருக்கும். அந்த மனுவில், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துகளின் பட்டியலுக்கும் வருமான வரித் துறையில் செலுத்தியுள்ள சொத்துகளின் விவரங்களிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி, மகன்கள், மற்றும் மகளின் … Continue reading Ops ன் திடீர் டில்லிப் பயணத்தின் முழுப் பின்னனி ? அதிர்ச்சி தகவல்

OPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்? சிறப்புச் செய்தி!

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டதாக, ஊடகங்களில் செய்தி பரவியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது டில்லியில் நேற்று, தமிழ்நாடு இல்லத்திலிருந்து கிளம்பும் முன், நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த, என் சகோதரரை, மேல் சிகிச்சைக்காக, மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.அதற்கு, 'ஏர் ஆம்புலன்ஸ்' வசதியை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏற்பாடு செய்து தந்தார். அதற்காக, அவரை நேரில் சந்தித்து, … Continue reading OPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்? சிறப்புச் செய்தி!

உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் 3-ஆவது நீதிபதி விசாரணையில், "அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காததே எங்களது முதல் குற்றச்சாட்டு" என தினகரன் தரப்பு வாதம் வைத்தது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதியின் விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது. இந்த வழக்கு மீதான விசாரணை திங்கள்கிழமை முதல் வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறும் 3-ஆவது நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்தார். இதையடுத்து, முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது தகுதி … Continue reading உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

பாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி? அதிமுக தலைமை அதிர்ச்சி!

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தையொட்டி நடந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சிகளை சேர்ந்த பல எம்.பிக்கள் வாக்களிக்காத விவரம் தற்போது வெளியாகியுள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 4 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி ஸ்ரீநிவாஸ் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப் … Continue reading பாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி? அதிமுக தலைமை அதிர்ச்சி!

நல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்! ஆய்வு தகவல்!

இந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும் ஆய்வு மையம் ஆண்டு தோறும் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களின் பட்டியலை பப்ளிக் அஃபேர்ஸ் இன்டக்ஸ் எனும் ஆய்வறிக்கை மூலம் வெளியிடும். இந்த மையமானது மாநிலங்கள் முழுவதும் ஆய்வு நடத்தி அதனை சமூக வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் வரிசைபடுத்தி பட்டியலிடப்படும். அதுமட்டுமின்றி, 2 கோடி மக்கள் தொகைக்கு மேல் உள்ள … Continue reading நல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்! ஆய்வு தகவல்!

“ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்? மம்தா-சந்திரபாபு நாயுடு பேச்சு!

மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு எதிராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி குறிப்பிட்டார். ஜெயலலிதா இருந்திருந்தால் … Continue reading “ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்? மம்தா-சந்திரபாபு நாயுடு பேச்சு!

நம்பிக்கையில்லாத் தீர்மானம்! வியூகம் வகுக்கும் பாஜக!

மக்களவையில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளும் பாஜக திடீரென ஏற்றுக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்களவை தேர்தலுக்கான வியூகத்தை அக்கட்சித் தலைவர் அமித் ஷா மாற்றியுள்ளதாக தெரிகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தது. இதன்படி, … Continue reading நம்பிக்கையில்லாத் தீர்மானம்! வியூகம் வகுக்கும் பாஜக!

20,23 தேதிகளில் விவாதம்! பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதன்பின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலங்கு தேசம் கட்சியினர் பெரும் அமளியில் ஈடுபட்டு ஆளும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்தனர். ஆனால் அதை மக்களவை சபாநாயகர் ஏற்கவில்லை. இந்நிலையில், மழைக்காலக் கூட்டத்தொடரிலும் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை … Continue reading 20,23 தேதிகளில் விவாதம்! பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு!

இன்று கூடுகிறது “பார்லி மழைக்கால கூட்டத்தொடர்” ! முழங்குமா? முடங்குமா?

'பார்லி.,யில் மழைக்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று(ஜூலை 18) துவங்குகிறது. இதை முன்னிட்டு, அனைத்துக் கட்சி கூட்டம், நேற்று நடந்தது. இதைஅடுத்து நிருபர்களிடம் பேசிய, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது: இரு அவைகளிலும் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்க, அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் குறித்து பேச வேண்டும். பார்லி., கூட்டத்தொடரை மக்கள் … Continue reading இன்று கூடுகிறது “பார்லி மழைக்கால கூட்டத்தொடர்” ! முழங்குமா? முடங்குமா?

தொடரும் வருமான வரித்துறை ரெய்டு! மலை போன பணக்குவியலால் அதிகாரிகள் அதிர்ச்சி!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 60). இவர் அரசு முதல் நிலை காண்டிராக்டர். இவருக்கு கருப்பசாமி, ஈஸ்வரன், நாகராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர். செய்யாத்துரை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார். தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கப்பலூர் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை சேகர்ரெட்டி என்பவர் எடுத்து இருந்தாலும் அந்தவேலையை … Continue reading தொடரும் வருமான வரித்துறை ரெய்டு! மலை போன பணக்குவியலால் அதிகாரிகள் அதிர்ச்சி!

அம்த்ஷா பேச்சுக்கு இலகணேசன் விளக்கம்? அதிமுகவை விமர்சித்து பேசவில்லை!

அதிமுக அரசை ஊழல் அரசு என அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 9-ம் தேதி சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் பாஜக ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், ''தமிழகத்தை நினைத்தால் எனக்கு வேதனையாக இருக்கிறது. மிகவும் ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கிறது. இந்த ஊழல்கள் அனைத்தும் … Continue reading அம்த்ஷா பேச்சுக்கு இலகணேசன் விளக்கம்? அதிமுகவை விமர்சித்து பேசவில்லை!

அரசுக்கெதிராக “நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி கூறியுள்ளது. … Continue reading அரசுக்கெதிராக “நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

ஜெயலலிதாவை கொடுமைப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி? நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி?

தூத்துக்குடியில் 7.9.17 அன்று அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார் மகள் டாக்டர் ஜெயலலிதா திருமண நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நாலாட்டின்புதூர் ராமகிருஷ்ணன்- சண்முகத்தாய் தம்பதியினரின் மகனும், கோட்டயம் எஸ்பியுமான கருப்பசாமி ஐ.பி.எஸ் தான் ஆறுமுகநயினார் மருமகன்.. அதிமுக பிரமுகர் ஆறுமுகநயினார், தன் மகளுக்கு பேச்சியம்மாள் என்றுதான் பெயர் வைத்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் விசுவாசம் இருப்பது போல் காட்டி, பதவிகள் பெறுவதற்காக தன் மகள் … Continue reading ஜெயலலிதாவை கொடுமைப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி? நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி?

ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா? மக்கள் நீதி மய்யம் அதிரடி!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது. இதற்கு பிறகு முதல் முறையாக, ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சி கொடியை ஏற்றினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன். இதன்பிறகு, மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனிடையே, கமல்ஹாசன் வருகையால் ஆழ்வார்பேட்டை சிக்னல் முதல் சுற்றிலுமுள்ள இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இது ஒருபக்கம் என்றால், … Continue reading ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா? மக்கள் நீதி மய்யம் அதிரடி!