அரசுக்கெதிராக “நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி கூறியுள்ளது. … Continue reading அரசுக்கெதிராக “நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா? மக்கள் நீதி மய்யம் அதிரடி!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது. இதற்கு பிறகு முதல் முறையாக, ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சி கொடியை ஏற்றினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன். இதன்பிறகு, மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனிடையே, கமல்ஹாசன் வருகையால் ஆழ்வார்பேட்டை சிக்னல் முதல் சுற்றிலுமுள்ள இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இது ஒருபக்கம் என்றால், … Continue reading ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா? மக்கள் நீதி மய்யம் அதிரடி!

ஒரே நாடு-ஒரே தேர்தல்! ஆகஸ்டில் புதிய சட்ட மசோதா இரு அவைகளிலும் தாக்கலாகிறது!

ஒரு நாடு; ஒரு தேர்தல்' திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, தேர்தல் கமிஷனிடம், பல்வேறு கேள்விகளை மத்திய அரசு கேட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் கமிஷன், 'இத்திட்டத்தை நிறைவேற்ற, கூடுதல் ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு போட்டதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களுக்காக, 4,555 கோடி ரூபாய் தேவை' என, தெரிவித்துள்ளது. 'நாடு முழுவதும், லோக்சபாவுடன், மாநிலங் களின் சட்டசபைகளுக்கும் சேர்த்து, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 'அதனால், மக்கள் பணம் வீணாவது தடுக்கப்படும்' என, பிரதமர் … Continue reading ஒரே நாடு-ஒரே தேர்தல்! ஆகஸ்டில் புதிய சட்ட மசோதா இரு அவைகளிலும் தாக்கலாகிறது!

ஒரே தேசம்-ஒரே தேர்தல்! அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு? சமாளிக்குமா இந்திய தேர்தல் ஆணையம்?

நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த சமாஜ்வாதிக் கட்சி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இது சாத்தியமில்லாதது என திமுக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதனால், செலவு குறையும் என்று சட்ட ஆணையம் ஏப்ரல் மாதம் தெரிவித்தது. மேலும், 2019-ம் ஆண்டில் இருந்து இரு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம், இதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரலாம் என ஆலோசனை தெரிவித்தது. இந்தக் கருத்துக்கு … Continue reading ஒரே தேசம்-ஒரே தேர்தல்! அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு? சமாளிக்குமா இந்திய தேர்தல் ஆணையம்?

2019 ல் பொதுத்தேர்தல்? #அதிமுக_எதிர்ப்பு!

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார். அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட … Continue reading 2019 ல் பொதுத்தேர்தல்? #அதிமுக_எதிர்ப்பு!

அதிரடி காட்டும் தமிழக பள்ளி கல்வித்துறை? மக்கள் விரும்பும் அரசாக மாறிவரும் #தமிழக_அரசு!

சென்னை : தமிழகத்தில், தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம், தனியார் பல்கலைகள் மற்றும் சட்ட கல்லுாரிகள் துவக்க அனுமதி அளிக்கும் சட்டம் உட்பட, ஆறு சட்டங்கள், நேற்று ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விபரம்: தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் : * தனியார் பள்ளிகள் அனைத்தையும் நிர்வகிப்பதற்கு, புதிய விரிவான சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்க, 2012 ஏப்., 18ல், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த ஆலோசனைப்படி, புதிய சட்டம் உருவாக்கப்பட்டு, சட்டசபையில் நேற்று … Continue reading அதிரடி காட்டும் தமிழக பள்ளி கல்வித்துறை? மக்கள் விரும்பும் அரசாக மாறிவரும் #தமிழக_அரசு!

#காவிரி_விவகாரம்? முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை!

காவிரிப் படுகை நீர்த் தேக்கங்களில் நீர் மதிப்பீடு தொடர்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகள், அதற்காகப் பயன்பாட்டில் உள்ள சாதனங்கள் ஆகியவை குறித்த நிலவர அறிக்கையை தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களும் தாக்கல் செய்யுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுக்கான தலைவர்கள், உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை … Continue reading #காவிரி_விவகாரம்? முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை!

மூன்றாண்டு தொடர்ந்த அதிகார மோதல்? தீர்த்து வைத்த உச்சநீதிமன்றம்!

தில்லி தலைநகர் பிராந்தியத்தைப் பொருத்தமட்டில் துணைநிலை ஆளுநருக்கு என தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே பல்வேறு விஷயங்களில் அதிகார மோதல் போக்கு நிலவி வந்தது. இதில், உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம், லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவை நிர்வகிக்கும் விவகாரம், சிஎன்ஜி வாகனங்களின் தரத்தை நிர்ணயிப்பதில் … Continue reading மூன்றாண்டு தொடர்ந்த அதிகார மோதல்? தீர்த்து வைத்த உச்சநீதிமன்றம்!

மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை எதிர்த்து, வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்குப் பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர். இறுதியில் … Continue reading மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

கூடுகிறது காவிரி ஆணையம்! கிடைக்குமா காவிரி?

சென்னை; காவிரி விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இரண்டு அமைப்புகளையும் மத்திய அரசு ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சார்பில் காவிரி உறுப்பினராக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநில அரசுகளும் தங்களது மாநில பிரதிநிதிகளை … Continue reading கூடுகிறது காவிரி ஆணையம்! கிடைக்குமா காவிரி?

மீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” ? விடுதலையாவாளா “காவிரித்தாய்?

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர்ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரச சார்பில் இன்று நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்சத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவில் தங்களிடம் ஆலோசிக்காமல் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட உள்ளது. தவறவிடாதீர் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.71 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி … Continue reading மீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” ? விடுதலையாவாளா “காவிரித்தாய்?

சபாநாயகருடன் கடும் வாக்குவாதம்? துணை முதல்வர் செய்து வைத்த சமரசம்!

சட்டப் பேரவைத் தலைவா் தனபாலுடன், அமைச்சா் ஓ.எஸ்.மணியன் புதன்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலையீட்டால் சமாதானம் ஏற்பட்டது. சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், ஆளுநா் சுற்றுப்பயணம் குறித்து பேசுகையில், மாநில சுயாட்சி குறித்து பேசினாா். பின்னா் அது தொடா்பாக கைத்தறித்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பேசுகையில், ‘எதிா்கட்சித் தலைவா் மாநில சுயாட்சி குறித்து பேசினாா். அதுகுறித்து விளக்கம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்’ என்றாா். … Continue reading சபாநாயகருடன் கடும் வாக்குவாதம்? துணை முதல்வர் செய்து வைத்த சமரசம்!

பெண்களுக்கு எதிரான வன்முறையில் தமிழகத்தின் நிலை? முதல்வர் விளக்கம்!

இந்தியாவிலேயே வன் குற்றங்களின் அடிப்படையில் தமிழகத்தின் நிலை என்ன என்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2018 - 19ம் ஆண்டுக்கான காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பின் தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அதில், 2016ஆம் ஆண்டைய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி, சொத்து சம்பந்தமான குற்றங்களில் நமது மாநிலத்தின் நிலை என்ன என்பதை இங்கு குறிப்பிட … Continue reading பெண்களுக்கு எதிரான வன்முறையில் தமிழகத்தின் நிலை? முதல்வர் விளக்கம்!

மத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு! முக்கிய மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது!

மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. தமிழக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. முன்னதாக இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது: மத்திய அரசு, … Continue reading மத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு! முக்கிய மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது!

உயருகிறதா மின் கட்டணம்? தமிழக மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 33 லட்சம் மின் இணைப்புகளும் உள்ளது. மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு சில வருடங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்படுவதில்லை. கடைசியாக கடந்த 1999-ம் ஆண்டு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 20 … Continue reading உயருகிறதா மின் கட்டணம்? தமிழக மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

முன்னாள் முதல்வரின் மரண மர்மம்! சிக்குகிறாரா சசிகலா?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த 9 மாதங்களாக விசாரித்து வருகிறது. ஆணையத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் நேரடியாக வாக்குமூலமும் அளித்து உள்ளார். இதில் , 2016 செப்டம்பர் 22ம் தேதி அன்று போயஸ்கார்டனில் நடந்த சம்பவங்கள் குறித்து இருவரும் அளித்த தகவலில் பல முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. செப்டம்பர் 22ம் தேதியன்று இரவு 7 மணியளவில் தன்னை சசிகலா … Continue reading முன்னாள் முதல்வரின் மரண மர்மம்! சிக்குகிறாரா சசிகலா?

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு? விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து வரும் 25-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையின்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. மேலும், ஆலைக்கான மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர உருக்குப் பிரிவு அருகேயுள்ள கந்தக அமிலம் சேமிப்பு டேங்கில் கசிவு இருப்பது போலீஸ் ரோந்துப் பணியின்போது கண்டறியப்பட்டது. கந்தக அமிலம் முழுவதையும் அகற்றும் பணி … Continue reading ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு? விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

தூத்துக்குடி கலவரம்! யாருடைய திட்டம்? உண்மை என்ன?

தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தது 11 பேர் மாநில போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பிறகு, அந்த ஆலையின் தினமும் 1,200 டன் உற்பத்திக்கான சர்ச்சைக்குரிய விரிவாக்கத்திற்கு உயர் நீதிமன்றம் மே 23 தடை விதித்துள்ளது. ஆலை கட்டுவதற்கு முன்னர் அப்பகுதி மக்களை கலந்தாலோசிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவ்வாறு சட்டப்பூர்வமாக செய்ய வேண்டியதில்லை என அந்த நிறுவனம் கூறியது. பொதுமக்களை ஆலோசிக்காமல் ஸ்மெல்டரை விரிவாக்கம் செய்து உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க … Continue reading தூத்துக்குடி கலவரம்! யாருடைய திட்டம்? உண்மை என்ன?

ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்வாரா முதல்வர் ?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை இரவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து விளக்கம் அளித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. போராட்டத்தின் 100-வது நாளான நேற்றுமுன்தினம் (மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதில் போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. நேற்று 2-வது நாளாகவும் வன்முறை, துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 12 … Continue reading ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்வாரா முதல்வர் ?

காவிரி! அறிக்கை தாக்கல் செய்கிறது மத்திய அரசு?

புதுடெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் வரைவு செயல் திட்டத்துக்கு பதிலாக, அதற்காக இதுவரை எடுக்கப்பட்ட  நடவடிக்கைகளின் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில்,  மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மே 3ம் தேதிக்குள் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.  மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் அவகாசம் வழங்கியும் அதை செயல்படுத்தாமல், கடைசி … Continue reading காவிரி! அறிக்கை தாக்கல் செய்கிறது மத்திய அரசு?

கர்நாடக தேர்தலுக்காக தயாராகிறது காங்கிரஸின் தேர்தல் அறிக்கை.

கர்நாடகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி ‌தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவையின் 225 உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வரும் மே 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று வெளியிட்டார். கர்நாடக மக்களின் குரலாக இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய ராகுல்காந்தி, … Continue reading கர்நாடக தேர்தலுக்காக தயாராகிறது காங்கிரஸின் தேர்தல் அறிக்கை.