ஆதாரமில்லாத #ஆதார் சர்ச்சை? ஆதார் எண்களை யாரிடமும் பகிர வேண்டாம்- அவசியம் படியுங்கள்!

ட்ராய் சேர்மன் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முற்பட்ட ஏலியட் ஆல்டெர்சன் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் தற்போது ட்விட்டரில் Aadhaar helpline number குறித்து புதிய கேள்வியைக் கேட்டுள்ளார். அது மீண்டும் ஆதார் பாதுகாப்பு குறித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த வாரம் ட்ராய் சேர்மன் ஆர்.எஸ். சர்மா தன்னுடைய ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிய ஹேக்கர்கள் அவருடைய பிறந்த தேதி, முகவரி, மற்றும் இதர விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டு ஒரு ரூபாயை … Continue reading ஆதாரமில்லாத #ஆதார் சர்ச்சை? ஆதார் எண்களை யாரிடமும் பகிர வேண்டாம்- அவசியம் படியுங்கள்!

கைவிடப்பட்டது சமூக ஊடகங்கள் கண்காணிப்பு! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!

சமூக ஊடகங்களில் தவறான செய்திகள், வன்முறையைத் தூண்டும் கருத்துகள், வீடியோ பதிவுகள் வேகமாக பரவி வன்முறை உருவாக காரணமாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தடுக்க மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் நாட்டின் 716 மாவட்டங்களில் சமூக ஊடக மையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. இந்த மையம், சமூக ஊடகங்களின் தகவல்களை சேகரிப்பதுடன், செய்தித்தாள்கள், உள்ளூர் டி.வி. சேனல்கள், வானொலி உட்பட அனைத்தையும் கண்காணிக்கும் என்று தகவல்கள் வெளியானது. இதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மஹூவா … Continue reading கைவிடப்பட்டது சமூக ஊடகங்கள் கண்காணிப்பு! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!

ஒரு ரூபாய்க்காக சவால் விட்ட சர்மா? தோல்விக்கு பரிசளித்த போட்டியாளர்!

தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்ட டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மாவுக்கு அதிர்ச்சிக் கொடுத்துள்ளார் பிரான்ஸை சேர்ந்த பாதுகாப்பு நிபுணர். இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு … Continue reading ஒரு ரூபாய்க்காக சவால் விட்ட சர்மா? தோல்விக்கு பரிசளித்த போட்டியாளர்!

ஒரே நாடு-ஒரே தேர்தல்! ஆகஸ்டில் புதிய சட்ட மசோதா இரு அவைகளிலும் தாக்கலாகிறது!

ஒரு நாடு; ஒரு தேர்தல்' திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, தேர்தல் கமிஷனிடம், பல்வேறு கேள்விகளை மத்திய அரசு கேட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் கமிஷன், 'இத்திட்டத்தை நிறைவேற்ற, கூடுதல் ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு போட்டதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களுக்காக, 4,555 கோடி ரூபாய் தேவை' என, தெரிவித்துள்ளது. 'நாடு முழுவதும், லோக்சபாவுடன், மாநிலங் களின் சட்டசபைகளுக்கும் சேர்த்து, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 'அதனால், மக்கள் பணம் வீணாவது தடுக்கப்படும்' என, பிரதமர் … Continue reading ஒரே நாடு-ஒரே தேர்தல்! ஆகஸ்டில் புதிய சட்ட மசோதா இரு அவைகளிலும் தாக்கலாகிறது!

ஒரே தேசம்-ஒரே தேர்தல்! அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு? சமாளிக்குமா இந்திய தேர்தல் ஆணையம்?

நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த சமாஜ்வாதிக் கட்சி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இது சாத்தியமில்லாதது என திமுக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதனால், செலவு குறையும் என்று சட்ட ஆணையம் ஏப்ரல் மாதம் தெரிவித்தது. மேலும், 2019-ம் ஆண்டில் இருந்து இரு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம், இதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரலாம் என ஆலோசனை தெரிவித்தது. இந்தக் கருத்துக்கு … Continue reading ஒரே தேசம்-ஒரே தேர்தல்! அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு? சமாளிக்குமா இந்திய தேர்தல் ஆணையம்?

ஒரே தேசம்–ஒரே தேர்தல்? இன்றும் தொடரும் ஆலோசனைக் கூட்டம்!

‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு யோசனை தெரிவித்து உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நிறைய செலவு மிச்சமாகும், காலவிரயமும் தவிர்க்கப்படும் என்றும், வளர்ச்சிப்பணிகளில் அரசு கவனம் செலுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பரிந்துரைத்துள்ள … Continue reading ஒரே தேசம்–ஒரே தேர்தல்? இன்றும் தொடரும் ஆலோசனைக் கூட்டம்!

#காவிரி_விவகாரம்? முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை!

காவிரிப் படுகை நீர்த் தேக்கங்களில் நீர் மதிப்பீடு தொடர்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகள், அதற்காகப் பயன்பாட்டில் உள்ள சாதனங்கள் ஆகியவை குறித்த நிலவர அறிக்கையை தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களும் தாக்கல் செய்யுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுக்கான தலைவர்கள், உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை … Continue reading #காவிரி_விவகாரம்? முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை!

மூன்றாண்டு தொடர்ந்த அதிகார மோதல்? தீர்த்து வைத்த உச்சநீதிமன்றம்!

தில்லி தலைநகர் பிராந்தியத்தைப் பொருத்தமட்டில் துணைநிலை ஆளுநருக்கு என தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே பல்வேறு விஷயங்களில் அதிகார மோதல் போக்கு நிலவி வந்தது. இதில், உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம், லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவை நிர்வகிக்கும் விவகாரம், சிஎன்ஜி வாகனங்களின் தரத்தை நிர்ணயிப்பதில் … Continue reading மூன்றாண்டு தொடர்ந்த அதிகார மோதல்? தீர்த்து வைத்த உச்சநீதிமன்றம்!

மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை எதிர்த்து, வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்குப் பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர். இறுதியில் … Continue reading மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

காவிரி விவகாரம்-அனைத்துக்கட்சி கூட்டம்? தமிழக முதல்வர் விளக்கம்!

காவிரி விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப்பேரவை திங்கள்கிழமை தொடங்கியதும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசியது: காவிரி பிரச்னையில் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியன அமைக்கப்பட்டு அதில் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். … Continue reading காவிரி விவகாரம்-அனைத்துக்கட்சி கூட்டம்? தமிழக முதல்வர் விளக்கம்!

தமிழகத்தில் பொதுத்தேர்தல்-2019? மத்திய அரசு தீவிரம்!

பார்லி. லோக்சப, மாநில சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் குறித்து வரும் 7 தேதி முதல் அரசியல்கட்சிகளுடன் சட்ட கமிஷன் ஆலோசனை நடத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பார்லி. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் .ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் அதிக பண செலவு குறைக்கப்படும் என பிரதமர் மோடி யோசனை கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் வரவேற்பும் ஆதரவும் இருந்தது. இது குறித்த அறிக்கை … Continue reading தமிழகத்தில் பொதுத்தேர்தல்-2019? மத்திய அரசு தீவிரம்!

கூடுகிறது காவிரி ஆணையம்! கிடைக்குமா காவிரி?

சென்னை; காவிரி விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இரண்டு அமைப்புகளையும் மத்திய அரசு ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சார்பில் காவிரி உறுப்பினராக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநில அரசுகளும் தங்களது மாநில பிரதிநிதிகளை … Continue reading கூடுகிறது காவிரி ஆணையம்! கிடைக்குமா காவிரி?

“காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது தவறு என்று கர்நாடக நீா்வளத் துறை அமைச்சா் டி.கே.சிவக்குமார், சனிக்கிழமை தெரிவித்தார். பெங்களூரு, விதான சௌதாவில் காவிரி தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காவிரி தொடா்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் கா்நாடகத்துக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் ஆராயப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பால் சிலவற்றில் கா்நாடகத்துக்கு … Continue reading “காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

மீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” ? விடுதலையாவாளா “காவிரித்தாய்?

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர்ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரச சார்பில் இன்று நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்சத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவில் தங்களிடம் ஆலோசிக்காமல் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட உள்ளது. தவறவிடாதீர் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.71 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி … Continue reading மீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” ? விடுதலையாவாளா “காவிரித்தாய்?

“பசுமை வழிச் சாலை” திட்டத்துக்கு எதிராக உயநீதிமன்றம் திடீர் உத்தரவு

மக்களிடம் கருத்து கேட்காமல் பசுமை வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதை எதிர்த்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்லும் நேரத்தை குறைப்பதற்காக பசுமை வழிச்சாலையை அமைக்க மத்திய அரசு பரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் சென்னையிலிருந்து சேலம்வரை 277 கிலோ மீட்டர் தூரம் பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தவுள்ளது. இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை ரத்து … Continue reading “பசுமை வழிச் சாலை” திட்டத்துக்கு எதிராக உயநீதிமன்றம் திடீர் உத்தரவு

சபாநாயகருடன் கடும் வாக்குவாதம்? துணை முதல்வர் செய்து வைத்த சமரசம்!

சட்டப் பேரவைத் தலைவா் தனபாலுடன், அமைச்சா் ஓ.எஸ்.மணியன் புதன்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலையீட்டால் சமாதானம் ஏற்பட்டது. சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், ஆளுநா் சுற்றுப்பயணம் குறித்து பேசுகையில், மாநில சுயாட்சி குறித்து பேசினாா். பின்னா் அது தொடா்பாக கைத்தறித்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பேசுகையில், ‘எதிா்கட்சித் தலைவா் மாநில சுயாட்சி குறித்து பேசினாா். அதுகுறித்து விளக்கம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்’ என்றாா். … Continue reading சபாநாயகருடன் கடும் வாக்குவாதம்? துணை முதல்வர் செய்து வைத்த சமரசம்!

பெண்களுக்கு எதிரான வன்முறையில் தமிழகத்தின் நிலை? முதல்வர் விளக்கம்!

இந்தியாவிலேயே வன் குற்றங்களின் அடிப்படையில் தமிழகத்தின் நிலை என்ன என்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2018 - 19ம் ஆண்டுக்கான காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பின் தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அதில், 2016ஆம் ஆண்டைய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி, சொத்து சம்பந்தமான குற்றங்களில் நமது மாநிலத்தின் நிலை என்ன என்பதை இங்கு குறிப்பிட … Continue reading பெண்களுக்கு எதிரான வன்முறையில் தமிழகத்தின் நிலை? முதல்வர் விளக்கம்!

மத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு! முக்கிய மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது!

மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. தமிழக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. முன்னதாக இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது: மத்திய அரசு, … Continue reading மத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு! முக்கிய மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது!

அமைந்தது “காவிரி ஆணையம்” ! மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, உறுப்பினர்களையும் நியமித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 1ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனால் ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. ஆணையத்தின் தமிழக உறுப்பினருக்குப் பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பெயரை தமிழக அரசு பரிந்துரை … Continue reading அமைந்தது “காவிரி ஆணையம்” ! மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

உயருகிறதா மின் கட்டணம்? தமிழக மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 33 லட்சம் மின் இணைப்புகளும் உள்ளது. மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு சில வருடங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்படுவதில்லை. கடைசியாக கடந்த 1999-ம் ஆண்டு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 20 … Continue reading உயருகிறதா மின் கட்டணம்? தமிழக மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

நதிகள் இணைப்பை துரிதகதியில் செயல் படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை!!!

நிதி ஆயோக் அமைப்பின் 4-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி தலைமை தாங்கினார். இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 24-ந்தேதி அன்று ‘தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023’ யை பிரகடனம் செய்தார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மென்மேலும் பன்மடங்கு உயர்த்திக் காட்டும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள், இலக்குகளை உள்ளடக்கி, … Continue reading நதிகள் இணைப்பை துரிதகதியில் செயல் படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை!!!

பிரதமருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்! ஏன்? எதற்கு?

தமிழ்நாட்டு அரசின் பலத்த சட்டப்போராட்டம், தமிழக கட்சிகள், மக்களின் கடுமையான போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்து நேற்று (ஜூன் 1 ) அரசிதழில் வெளியிட்டது. இது தமிழகத்தின் காவிரி வரலாற்றில் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இது மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசிற்கும், தமிழ்நாட்டு … Continue reading பிரதமருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்! ஏன்? எதற்கு?

தூத்துக்குடி கலவரம்! யாருடைய திட்டம்? உண்மை என்ன?

தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தது 11 பேர் மாநில போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பிறகு, அந்த ஆலையின் தினமும் 1,200 டன் உற்பத்திக்கான சர்ச்சைக்குரிய விரிவாக்கத்திற்கு உயர் நீதிமன்றம் மே 23 தடை விதித்துள்ளது. ஆலை கட்டுவதற்கு முன்னர் அப்பகுதி மக்களை கலந்தாலோசிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவ்வாறு சட்டப்பூர்வமாக செய்ய வேண்டியதில்லை என அந்த நிறுவனம் கூறியது. பொதுமக்களை ஆலோசிக்காமல் ஸ்மெல்டரை விரிவாக்கம் செய்து உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க … Continue reading தூத்துக்குடி கலவரம்! யாருடைய திட்டம்? உண்மை என்ன?

ஆதார் விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

ஆதார் அட்டைக்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிந்து, தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தல், செல்போன் சிம்கார்டு புதிதாகப் பெறுதல், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறுதல் ஆகியவற்றுக்கு ஆதார் கார்டை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி புட்டாசாமி உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு உச்ச … Continue reading ஆதார் விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

தொழிலாளர் வைப்புநிதி திருடு போகும் அபாயம்! 2.7 கோடி உறுப்பினர்களின் நிலை?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் (இபிஎப்ஓ) பதிவு செய்த 2.7 கோடி உறுப்பினர்களின் தகவல்கள் திருடப்படும் அபாயத்தை எதிர்க்கொண்டு உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களுடைய வைப்பு நிதி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய அரசு புதிய வசதியை கொண்டு வந்தது. ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டும் உறுப்பினர்கள் இணையத்தை அணுகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் ஆதார் அடிப்படையிலான இபிஎப்ஓ தகவல் தரவில் இருந்து தகவல்கள் திருடப்பட்டு உள்ளது என மத்திய … Continue reading தொழிலாளர் வைப்புநிதி திருடு போகும் அபாயம்! 2.7 கோடி உறுப்பினர்களின் நிலை?