ஆதாரமில்லாத #ஆதார் சர்ச்சை? ஆதார் எண்களை யாரிடமும் பகிர வேண்டாம்- அவசியம் படியுங்கள்!

ட்ராய் சேர்மன் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முற்பட்ட ஏலியட் ஆல்டெர்சன் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் தற்போது ட்விட்டரில் Aadhaar helpline number குறித்து புதிய கேள்வியைக் கேட்டுள்ளார். அது மீண்டும் ஆதார் பாதுகாப்பு குறித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த வாரம் ட்ராய் சேர்மன் ஆர்.எஸ். சர்மா தன்னுடைய ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிய ஹேக்கர்கள் அவருடைய பிறந்த தேதி, முகவரி, மற்றும் இதர விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டு ஒரு ரூபாயை … Continue reading ஆதாரமில்லாத #ஆதார் சர்ச்சை? ஆதார் எண்களை யாரிடமும் பகிர வேண்டாம்- அவசியம் படியுங்கள்!

ஒரு ரூபாய்க்காக சவால் விட்ட சர்மா? தோல்விக்கு பரிசளித்த போட்டியாளர்!

தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்ட டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மாவுக்கு அதிர்ச்சிக் கொடுத்துள்ளார் பிரான்ஸை சேர்ந்த பாதுகாப்பு நிபுணர். இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு … Continue reading ஒரு ரூபாய்க்காக சவால் விட்ட சர்மா? தோல்விக்கு பரிசளித்த போட்டியாளர்!

பதஞ்சலியின் உலகளாவிய திருட்டு! தோலுரித்து காட்டிய சவுக்கு

இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும். ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர். ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர். ஒருவர் ஜக்கி வாசுதேவ். மற்றொருவர் பாபா ராம்தேவ். … Continue reading பதஞ்சலியின் உலகளாவிய திருட்டு! தோலுரித்து காட்டிய சவுக்கு

ஆதார் விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

ஆதார் அட்டைக்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிந்து, தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தல், செல்போன் சிம்கார்டு புதிதாகப் பெறுதல், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறுதல் ஆகியவற்றுக்கு ஆதார் கார்டை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி புட்டாசாமி உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு உச்ச … Continue reading ஆதார் விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு!