ஆதாரமில்லாத #ஆதார் சர்ச்சை? ஆதார் எண்களை யாரிடமும் பகிர வேண்டாம்- அவசியம் படியுங்கள்!

ட்ராய் சேர்மன் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முற்பட்ட ஏலியட் ஆல்டெர்சன் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் தற்போது ட்விட்டரில் Aadhaar helpline number குறித்து புதிய கேள்வியைக் கேட்டுள்ளார். அது மீண்டும் ஆதார் பாதுகாப்பு குறித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த வாரம் ட்ராய் சேர்மன் ஆர்.எஸ். சர்மா தன்னுடைய ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிய ஹேக்கர்கள் அவருடைய பிறந்த தேதி, முகவரி, மற்றும் இதர விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டு ஒரு ரூபாயை … Continue reading ஆதாரமில்லாத #ஆதார் சர்ச்சை? ஆதார் எண்களை யாரிடமும் பகிர வேண்டாம்- அவசியம் படியுங்கள்!

ஒரு ரூபாய்க்காக சவால் விட்ட சர்மா? தோல்விக்கு பரிசளித்த போட்டியாளர்!

தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்ட டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மாவுக்கு அதிர்ச்சிக் கொடுத்துள்ளார் பிரான்ஸை சேர்ந்த பாதுகாப்பு நிபுணர். இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு … Continue reading ஒரு ரூபாய்க்காக சவால் விட்ட சர்மா? தோல்விக்கு பரிசளித்த போட்டியாளர்!

சுழன்றடிக்கும் சூறாவளியாய் கழக பணிகளை மேற்கொள்ளும் #அஇஅதிமுக_இராமநாதபுர_மாவட்ட_கழகம்!

சமீபகாலமாக அஇஅதிமுக கழகத்தின் வளர்ச்சியில் தொய்வு ஏற்ப்பட்டிருப்பதாகவும், கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை குறித்து நிர்வாகிகள் யாரும் அக்கறையுடன் செயல்படுவதே இல்லையென்றும் பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்திளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் அப்படி வரும் செய்திகள் தவறான வதந்திகளே ,நாங்கள் எங்கள் அஇஅதிமுக கழக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தே பணி செய்கிறோம் என்பதை #சொல்லால்_சொல்லாமல்_செயலால்_காட்டிவரும்_இராமநாதபுர_அஇஅதிமுக . இது தொடர்பாக இராமநாதபுர மாவட்ட அஇஅதிமுக கழக நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது! பல்வேறு செய்தி நிறுவனங்களும் அதிமுகவின் வாக்கு வங்கி சரிவடைந்துள்ளதாகவும், … Continue reading சுழன்றடிக்கும் சூறாவளியாய் கழக பணிகளை மேற்கொள்ளும் #அஇஅதிமுக_இராமநாதபுர_மாவட்ட_கழகம்!

உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் 3-ஆவது நீதிபதி விசாரணையில், "அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காததே எங்களது முதல் குற்றச்சாட்டு" என தினகரன் தரப்பு வாதம் வைத்தது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதியின் விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது. இந்த வழக்கு மீதான விசாரணை திங்கள்கிழமை முதல் வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறும் 3-ஆவது நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்தார். இதையடுத்து, முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது தகுதி … Continue reading உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

மத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு! முக்கிய மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது!

மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. தமிழக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. முன்னதாக இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது: மத்திய அரசு, … Continue reading மத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு! முக்கிய மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது!

“பசுமை வழிச்சாலை ” வரமா? சாபமா? ஒரு சிறு பார்வை -பகுதி 2

இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாடு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வந்தன. ஆனால், இங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஏகப்பட்ட, 'குட்டி' தலைவர்களை உருவாக்கிவருகிறது. இவர்கள் எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்ற பெயரில் மக்களுக்கு அழைப்பு விடுத்து, வன்முறைக்கு வித்திடுகின்றனர்.எட்டு வழிச்சாலை தொடர்பாக, அவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளும், அவற்றின் உண்மை நிலவரமும் வருமாறு: 6வது கட்டுக்கதை: * சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் … Continue reading “பசுமை வழிச்சாலை ” வரமா? சாபமா? ஒரு சிறு பார்வை -பகுதி 2

பசுமைவழி சாலைக்கு எதிர்ப்பு? தீக்குளிக்க முயற்சித்த விவசாயிகள்!

சேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40 ஆயிரம் வீடுகள், 8 மலைகளும் உடைக்கப்பட உள்ளது. சாலை அமைப்பதற்கான நில அளவீடு பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன் … Continue reading பசுமைவழி சாலைக்கு எதிர்ப்பு? தீக்குளிக்க முயற்சித்த விவசாயிகள்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு? விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து வரும் 25-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையின்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. மேலும், ஆலைக்கான மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர உருக்குப் பிரிவு அருகேயுள்ள கந்தக அமிலம் சேமிப்பு டேங்கில் கசிவு இருப்பது போலீஸ் ரோந்துப் பணியின்போது கண்டறியப்பட்டது. கந்தக அமிலம் முழுவதையும் அகற்றும் பணி … Continue reading ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு? விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

நதிகள் இணைப்பை துரிதகதியில் செயல் படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை!!!

நிதி ஆயோக் அமைப்பின் 4-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி தலைமை தாங்கினார். இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 24-ந்தேதி அன்று ‘தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023’ யை பிரகடனம் செய்தார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மென்மேலும் பன்மடங்கு உயர்த்திக் காட்டும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள், இலக்குகளை உள்ளடக்கி, … Continue reading நதிகள் இணைப்பை துரிதகதியில் செயல் படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை!!!