போட்டி திமுக பிரம்மாண்ட பேரணி? மதுரையின் முக்கிய முடிவுகள்!

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்கொடி துாக்கி உள்ள, அவரது அண்ணன் அழகிரி தலைமை யில், விரைவில், போட்டி தி.மு.க., உதயமாகிறது. கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆக.,7ல் மரணம் அடைந்தார். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 14ம் தேதி, அறிவாலயத்தில், தி.மு.க., தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடந்தது. அதில் … Continue reading போட்டி திமுக பிரம்மாண்ட பேரணி? மதுரையின் முக்கிய முடிவுகள்!

ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்வாரா முதல்வர் ?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை இரவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து விளக்கம் அளித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. போராட்டத்தின் 100-வது நாளான நேற்றுமுன்தினம் (மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதில் போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. நேற்று 2-வது நாளாகவும் வன்முறை, துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 12 … Continue reading ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்வாரா முதல்வர் ?

வீழ்ந்தது தினகரனின் துவக்கமா? முன்னாள் MLA மேலூர் சாமி மறைவு!

மேலூர் ஆர்.சாமி, நேற்று பிற்பகலில் மரணம் அடைந்தார். டிடிவி தினகரனுக்கு வலது கரமாக இயங்கியவர். டிடிவி தினகரனுக்காக முதல் கூட்டம் நடத்தியவர்! மேலூர் ஆர்.சாமி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக.வில் துடிப்பாக இயங்கிய நிர்வாகிகளில் ஒருவர்! எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர்! ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இயங்கி வந்தார். நேற்றுகாலை 10 மணிக்கே மேலூர் சாமி இறந்ததாக கூறி சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணமிருந்தன. ஆனால் தினகரன் ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா டிவி பிற்பகல் … Continue reading வீழ்ந்தது தினகரனின் துவக்கமா? முன்னாள் MLA மேலூர் சாமி மறைவு!