போராட்டங்களால் பொதுச் சொத்துக்கள் சேதம்? உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

நாட்டில் எதற்கெடுத்தாலும் போராட்டங்களும் அதனையடுத்து வன்முறைச் சம்பவங்களும் அரசு, தனியார் உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும் கவலையளிக்கிறது என்று கூறிய உச்ச நீதிமன்றம் இதற்கான சட்டத் திருத்தத்துக்காக அரசின் முடிவை எதிர்நோக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் கூறியபோது நாட்டில் எங்காவது ஒரு பகுதியில் தினப்படி போராட்டங்கள், வன்முறைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன என்று சமீபத்திய கன்வாரிய போராட்டத்தைக் குறிப்பிட்டு எழுப்பிய போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசின் சட்டத்திருத்தத்துக்காகக் … Continue reading போராட்டங்களால் பொதுச் சொத்துக்கள் சேதம்? உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

கைவிடப்பட்டது சமூக ஊடகங்கள் கண்காணிப்பு! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!

சமூக ஊடகங்களில் தவறான செய்திகள், வன்முறையைத் தூண்டும் கருத்துகள், வீடியோ பதிவுகள் வேகமாக பரவி வன்முறை உருவாக காரணமாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தடுக்க மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் நாட்டின் 716 மாவட்டங்களில் சமூக ஊடக மையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. இந்த மையம், சமூக ஊடகங்களின் தகவல்களை சேகரிப்பதுடன், செய்தித்தாள்கள், உள்ளூர் டி.வி. சேனல்கள், வானொலி உட்பட அனைத்தையும் கண்காணிக்கும் என்று தகவல்கள் வெளியானது. இதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மஹூவா … Continue reading கைவிடப்பட்டது சமூக ஊடகங்கள் கண்காணிப்பு! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!

ஒரே தேசம்–ஒரே தேர்தல்? இன்றும் தொடரும் ஆலோசனைக் கூட்டம்!

‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு யோசனை தெரிவித்து உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நிறைய செலவு மிச்சமாகும், காலவிரயமும் தவிர்க்கப்படும் என்றும், வளர்ச்சிப்பணிகளில் அரசு கவனம் செலுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பரிந்துரைத்துள்ள … Continue reading ஒரே தேசம்–ஒரே தேர்தல்? இன்றும் தொடரும் ஆலோசனைக் கூட்டம்!

#பசுமை_வழிச்சாலை! அரைகுறையாக புரிந்து கொண்டு எதிர்க்கின்றனர்-உயர்நீதிமன்றம்!

சேலம் 8 வழி சாலை திட்டத்தின் நோக்கத்தையும்,பயன்களையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும், என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாரியம்மன் கோயில் திடலில் தமாக கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் பொது கூட்டம் நடத்த அனுமதி கோரி சேலம் ஓமலூர் காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை, தங்கள் மனு பரிசீலிக்கப்படாததால், உரிய முறையில் … Continue reading #பசுமை_வழிச்சாலை! அரைகுறையாக புரிந்து கொண்டு எதிர்க்கின்றனர்-உயர்நீதிமன்றம்!

#காவிரி_விவகாரம்? முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை!

காவிரிப் படுகை நீர்த் தேக்கங்களில் நீர் மதிப்பீடு தொடர்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகள், அதற்காகப் பயன்பாட்டில் உள்ள சாதனங்கள் ஆகியவை குறித்த நிலவர அறிக்கையை தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களும் தாக்கல் செய்யுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுக்கான தலைவர்கள், உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை … Continue reading #காவிரி_விவகாரம்? முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை!

வருமா? #லோக்_அயுக்தா? சட்டசபையில் அறிவிப்பு!

லோக் ஆயுக்த சட்டமசோதா நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் சட்டப்பேரவையில் உறுதி அளித்தனர். தமிழக சட்டப்பேரவையில் வரும் 9-ஆம் தேதி இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. சட்டப்பேரவையில் பொதுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பி.கே.சேகர்பாபு பேசியது: நாட்டில் உள்ள மாநிலங்களின் அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க 2013-இல் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த … Continue reading வருமா? #லோக்_அயுக்தா? சட்டசபையில் அறிவிப்பு!

மூன்றாண்டு தொடர்ந்த அதிகார மோதல்? தீர்த்து வைத்த உச்சநீதிமன்றம்!

தில்லி தலைநகர் பிராந்தியத்தைப் பொருத்தமட்டில் துணைநிலை ஆளுநருக்கு என தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே பல்வேறு விஷயங்களில் அதிகார மோதல் போக்கு நிலவி வந்தது. இதில், உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம், லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவை நிர்வகிக்கும் விவகாரம், சிஎன்ஜி வாகனங்களின் தரத்தை நிர்ணயிப்பதில் … Continue reading மூன்றாண்டு தொடர்ந்த அதிகார மோதல்? தீர்த்து வைத்த உச்சநீதிமன்றம்!

மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை எதிர்த்து, வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்குப் பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர். இறுதியில் … Continue reading மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

தகுதிநீக்க வழக்கு! ஆகஸ்டில் இறுதி தீர்ப்பா?

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணையை ஆரம்பித்த மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அனைத்து தரப்பினரும் வழக்கில் ஆஜராக வசதியாக ஜூலை 23 முதல் வழக்கு விசாரணை தொடங்கி தினமும் நடக்கும் என்று உத்தரவிட்டார். தமிழக முதல்வர் கே.பழனிசாமியை மாற்றக் கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் தமிழக ஆளுநரிடம் கடந்த ஆண்டு மனு அளித்தனர். இதில் ஜக்கையனைத் தவிர மீதமுள்ள 18 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை … Continue reading தகுதிநீக்க வழக்கு! ஆகஸ்டில் இறுதி தீர்ப்பா?

காவிரி விவகாரம்-அனைத்துக்கட்சி கூட்டம்? தமிழக முதல்வர் விளக்கம்!

காவிரி விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப்பேரவை திங்கள்கிழமை தொடங்கியதும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசியது: காவிரி பிரச்னையில் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியன அமைக்கப்பட்டு அதில் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். … Continue reading காவிரி விவகாரம்-அனைத்துக்கட்சி கூட்டம்? தமிழக முதல்வர் விளக்கம்!

கூடுகிறது காவிரி ஆணையம்! கிடைக்குமா காவிரி?

சென்னை; காவிரி விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இரண்டு அமைப்புகளையும் மத்திய அரசு ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சார்பில் காவிரி உறுப்பினராக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநில அரசுகளும் தங்களது மாநில பிரதிநிதிகளை … Continue reading கூடுகிறது காவிரி ஆணையம்! கிடைக்குமா காவிரி?

“காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது தவறு என்று கர்நாடக நீா்வளத் துறை அமைச்சா் டி.கே.சிவக்குமார், சனிக்கிழமை தெரிவித்தார். பெங்களூரு, விதான சௌதாவில் காவிரி தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காவிரி தொடா்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் கா்நாடகத்துக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் ஆராயப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பால் சிலவற்றில் கா்நாடகத்துக்கு … Continue reading “காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

மீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” ? விடுதலையாவாளா “காவிரித்தாய்?

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர்ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரச சார்பில் இன்று நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்சத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவில் தங்களிடம் ஆலோசிக்காமல் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட உள்ளது. தவறவிடாதீர் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.71 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி … Continue reading மீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” ? விடுதலையாவாளா “காவிரித்தாய்?

அமைந்தது “காவிரி ஆணையம்” ! மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, உறுப்பினர்களையும் நியமித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 1ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனால் ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. ஆணையத்தின் தமிழக உறுப்பினருக்குப் பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பெயரை தமிழக அரசு பரிந்துரை … Continue reading அமைந்தது “காவிரி ஆணையம்” ! மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

நதிகள் இணைப்பை துரிதகதியில் செயல் படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை!!!

நிதி ஆயோக் அமைப்பின் 4-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி தலைமை தாங்கினார். இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 24-ந்தேதி அன்று ‘தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023’ யை பிரகடனம் செய்தார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மென்மேலும் பன்மடங்கு உயர்த்திக் காட்டும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள், இலக்குகளை உள்ளடக்கி, … Continue reading நதிகள் இணைப்பை துரிதகதியில் செயல் படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை!!!

பிரதமருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்! ஏன்? எதற்கு?

தமிழ்நாட்டு அரசின் பலத்த சட்டப்போராட்டம், தமிழக கட்சிகள், மக்களின் கடுமையான போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்து நேற்று (ஜூன் 1 ) அரசிதழில் வெளியிட்டது. இது தமிழகத்தின் காவிரி வரலாற்றில் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இது மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசிற்கும், தமிழ்நாட்டு … Continue reading பிரதமருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்! ஏன்? எதற்கு?

கநாடக ஆட்சி பொறுப்பை ஏற்கப் போவது யார்? உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

கர்நாடக அரசியலில் அதிரடியாக நடைபெற்று வரும் திருப்பங்கள் நேற்று (மே 16) இரவு முதல் விடிய விடிய பல்வேறு பரபரப்புக் காட்சிகளை பெங்களூருவிலும் டெல்லியிலும் அரங்கேற்றியுள்ளன. கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிகாலை கூறிவிட்டது. ஆனபோதும் காங்கிரஸ் மஜதவினரின் மனுவை தள்ளுபடி செய்ய வில்லை என்றும் இதை பின் விசாரிப்பதாகவும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். நேற்று இரவு பெங்களூருவில் தொடங்கி அதிகாலை உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த … Continue reading கநாடக ஆட்சி பொறுப்பை ஏற்கப் போவது யார்? உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

இறக்குமதி மணல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு இறக்குமதி செய்த 55 ஆயிரம் டன் “சிலிகா சாண்ட்” என்ற மணலை துறைமுகத்துக்கு வெளியில் எடுத்துச் செல்லவும், அரசின் அனுமதி இன்றி மணலை இறக்குமதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனை எதிர்த்து மணல் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு ஒற்றை நீதிபதி இந்த தடை உத்தரவை ரத்து செய்ததோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து … Continue reading இறக்குமதி மணல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

ஆதார் விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

ஆதார் அட்டைக்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிந்து, தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தல், செல்போன் சிம்கார்டு புதிதாகப் பெறுதல், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறுதல் ஆகியவற்றுக்கு ஆதார் கார்டை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி புட்டாசாமி உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு உச்ச … Continue reading ஆதார் விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

கூட்டுறவு சங்க தேர்தல் – தற்போதைய நிலையே நீடிக்கும்! உயர்நீதிமன்றம்!

சென்னை : கூட்டுறவு சங்க தேர்தலில் அரசியல்வாதிகளின் சொல்படி ஆடிய அதிகாரிகள் சிக்குகின்றனர். இத்தேர்தலில் முறைகேடு செய்தோருக்கு 'ஆப்பு' வைக்கும் விதத்தில் கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்துவதில் ஒருதலைபட்சமாக செயல்பட்டோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக போட்டியிட்டவர்கள் குற்றம் சாட்டினர். 'வேட்புமனுக்கள் நிராகரிப்பு; வேட்புமனுக்களை ஏற்க மறுப்பு; முறையில்லாமல் தேர்தல் நடப்பது; தேர்தல் அதிகாரிகளின் துணையுடன் … Continue reading கூட்டுறவு சங்க தேர்தல் – தற்போதைய நிலையே நீடிக்கும்! உயர்நீதிமன்றம்!

தமிழகத்தை திட்டமிட்டே அவமதிக்கும் மத்திய அரசு! பதிலடி கொடுக்குமா தமிழக அரசு?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி பார்க்க மறுத்துள்ளது தமிழ்நாட்டிற்கான அவமானமாகவே பார்க்க வேண்டியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில், தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் அறிவித்தனர். அத்துடன் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த புதிய திட்டத்தை (ஸ்கீம்) வகுக்கும்படி மத்திய … Continue reading தமிழகத்தை திட்டமிட்டே அவமதிக்கும் மத்திய அரசு! பதிலடி கொடுக்குமா தமிழக அரசு?

காவிரி! அறிக்கை தாக்கல் செய்கிறது மத்திய அரசு?

புதுடெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் வரைவு செயல் திட்டத்துக்கு பதிலாக, அதற்காக இதுவரை எடுக்கப்பட்ட  நடவடிக்கைகளின் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில்,  மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மே 3ம் தேதிக்குள் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.  மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் அவகாசம் வழங்கியும் அதை செயல்படுத்தாமல், கடைசி … Continue reading காவிரி! அறிக்கை தாக்கல் செய்கிறது மத்திய அரசு?

கற்பழிப்பு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை!

காஷ்மீரின் கதுவா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த ஜனவரி 10-ந்தேதி கடத்தி செல்லப்பட்டு கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஒரு வாரத்துக்குப்பின் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கதுவா மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இதில் ஒரு இளம் குற்றவாளி உள்பட 8 பேர் மீது கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை சண்டிகருக்கு … Continue reading கற்பழிப்பு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை!