18 Mla கள் தகுதி நீக்க வழக்கு துவங்கியது விசாரணை!

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், தகுதி நீக்க விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டன சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என தமிழக ஆளுநரை சந்தித்து கடந்த ஆண்டு கடிதம் அளித்தனர். இதனையடுத்து, இவர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி 18 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை … Continue reading 18 Mla கள் தகுதி நீக்க வழக்கு துவங்கியது விசாரணை!

18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை என்றும் சபாநாயகர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே தகுதிநீக்கம் செய்தார் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது. 18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கு, மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு மூன்றாவது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்ஏ-க்கள் தரப்பிலான வாதம் கடந்த 2 நாட்களில் முடிவடைந்த நிலையில், நேற்று சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலர் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார். … Continue reading 18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் 3-ஆவது நீதிபதி விசாரணையில், "அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காததே எங்களது முதல் குற்றச்சாட்டு" என தினகரன் தரப்பு வாதம் வைத்தது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதியின் விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது. இந்த வழக்கு மீதான விசாரணை திங்கள்கிழமை முதல் வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறும் 3-ஆவது நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்தார். இதையடுத்து, முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது தகுதி … Continue reading உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

18 எம்எல்ஏகள் தகுதி நீக்கம்? இன்று மூன்றாவது நீதிபதி விசாரணை துவக்கம்!

சென்னை : சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று(ஜூலை 23) முதல் மூன்றாவது நீதிபதி, சத்திய நாராயணன் விசாரிக்கிறார். தொடர்ந்து ஐந்து நாட்கள், விசாரணை நடைபெற உள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து, அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். 'பழனிசாமிக்கு எங்கள் ஆதரவு இல்லை; அவரை மாற்ற வேண்டும்' என, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், கவர்னரிடம் … Continue reading 18 எம்எல்ஏகள் தகுதி நீக்கம்? இன்று மூன்றாவது நீதிபதி விசாரணை துவக்கம்!

ஜெயலலிதாவை கொடுமைப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி? நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி?

தூத்துக்குடியில் 7.9.17 அன்று அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார் மகள் டாக்டர் ஜெயலலிதா திருமண நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நாலாட்டின்புதூர் ராமகிருஷ்ணன்- சண்முகத்தாய் தம்பதியினரின் மகனும், கோட்டயம் எஸ்பியுமான கருப்பசாமி ஐ.பி.எஸ் தான் ஆறுமுகநயினார் மருமகன்.. அதிமுக பிரமுகர் ஆறுமுகநயினார், தன் மகளுக்கு பேச்சியம்மாள் என்றுதான் பெயர் வைத்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் விசுவாசம் இருப்பது போல் காட்டி, பதவிகள் பெறுவதற்காக தன் மகள் … Continue reading ஜெயலலிதாவை கொடுமைப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி? நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி?

திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும்? கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி!

“ஆரம்பத்தில் ஐ.ஐ.டி. வளாகத்தில் வாக்கிங் போவதை வழக்கமாக வைத்திருந்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். கடந்த சில மாதங்களாகவே அவரது வாக்கிங் ஸ்பாட் அடையாறில் உள்ள The Theosophical Society கேம்பஸுக்கு மாறிவிட்டது. அடையாறு ஆலமரம் இருக்கக்கூடிய பகுதி இது. இங்கே உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே கேம்பஸுக்குள் நுழைய முடியும். சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் பசுமை சூழ இருக்கும். இந்த வளாகத்தில்தான் வாக்கிங் போகிறார் ஸ்டாலின். டிடிவி தினகரன் வீட்டிலிருந்து இந்த கேம்பஸ் … Continue reading திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும்? கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி!

ஒரே தேசம்–ஒரே தேர்தல்? இன்றும் தொடரும் ஆலோசனைக் கூட்டம்!

‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு யோசனை தெரிவித்து உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நிறைய செலவு மிச்சமாகும், காலவிரயமும் தவிர்க்கப்படும் என்றும், வளர்ச்சிப்பணிகளில் அரசு கவனம் செலுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பரிந்துரைத்துள்ள … Continue reading ஒரே தேசம்–ஒரே தேர்தல்? இன்றும் தொடரும் ஆலோசனைக் கூட்டம்!

#பசுமை_வழிச்சாலை! அரைகுறையாக புரிந்து கொண்டு எதிர்க்கின்றனர்-உயர்நீதிமன்றம்!

சேலம் 8 வழி சாலை திட்டத்தின் நோக்கத்தையும்,பயன்களையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும், என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாரியம்மன் கோயில் திடலில் தமாக கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் பொது கூட்டம் நடத்த அனுமதி கோரி சேலம் ஓமலூர் காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை, தங்கள் மனு பரிசீலிக்கப்படாததால், உரிய முறையில் … Continue reading #பசுமை_வழிச்சாலை! அரைகுறையாக புரிந்து கொண்டு எதிர்க்கின்றனர்-உயர்நீதிமன்றம்!

வருமா? #லோக்_அயுக்தா? சட்டசபையில் அறிவிப்பு!

லோக் ஆயுக்த சட்டமசோதா நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் சட்டப்பேரவையில் உறுதி அளித்தனர். தமிழக சட்டப்பேரவையில் வரும் 9-ஆம் தேதி இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. சட்டப்பேரவையில் பொதுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பி.கே.சேகர்பாபு பேசியது: நாட்டில் உள்ள மாநிலங்களின் அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க 2013-இல் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த … Continue reading வருமா? #லோக்_அயுக்தா? சட்டசபையில் அறிவிப்பு!

மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை எதிர்த்து, வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்குப் பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர். இறுதியில் … Continue reading மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

தகுதிநீக்க வழக்கு! ஆகஸ்டில் இறுதி தீர்ப்பா?

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணையை ஆரம்பித்த மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அனைத்து தரப்பினரும் வழக்கில் ஆஜராக வசதியாக ஜூலை 23 முதல் வழக்கு விசாரணை தொடங்கி தினமும் நடக்கும் என்று உத்தரவிட்டார். தமிழக முதல்வர் கே.பழனிசாமியை மாற்றக் கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் தமிழக ஆளுநரிடம் கடந்த ஆண்டு மனு அளித்தனர். இதில் ஜக்கையனைத் தவிர மீதமுள்ள 18 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை … Continue reading தகுதிநீக்க வழக்கு! ஆகஸ்டில் இறுதி தீர்ப்பா?

காவலர்களுக்கு ஓய்வு? அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க கடந்த 2012 ஆம் ஆண்டு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது காவலர்கள் தொடர் தற்கொலை குறித்து நீதிபதி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் காவலர்கள் வீட்டில் ஆடர்லியாக உள்ளவர்களின் விவரம் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். மீண்டும் இந்த வழக்கு … Continue reading காவலர்களுக்கு ஓய்வு? அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இடமாறுதலா? ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

அமைச்சா் பரிந்துரையின் பேரில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவா் மதிவாணனை திருவாடானைக்கு இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மணக்குடியைச் சோ்ந்தவா் வ.து.நடராஜன். முன்னாள் அமைச்சரும் அம்மா மக்கள் முன்னேற்றறக் கழகத்தின் மாநில நிா்வாகியுமான இவரது மகன் மதிவாணன். இவா் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் எலும்பு சிகிச்சைப் பிரிவு மருத்துவராக உள்ளாா். இந்த நிலையில், இவா் திருவாடாணை தாலுகா மருத்துவமனைக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா். இந்த உத்தரவை … Continue reading அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இடமாறுதலா? ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

“பசுமை வழிச் சாலை” திட்டத்துக்கு எதிராக உயநீதிமன்றம் திடீர் உத்தரவு

மக்களிடம் கருத்து கேட்காமல் பசுமை வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதை எதிர்த்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்லும் நேரத்தை குறைப்பதற்காக பசுமை வழிச்சாலையை அமைக்க மத்திய அரசு பரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் சென்னையிலிருந்து சேலம்வரை 277 கிலோ மீட்டர் தூரம் பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தவுள்ளது. இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை ரத்து … Continue reading “பசுமை வழிச் சாலை” திட்டத்துக்கு எதிராக உயநீதிமன்றம் திடீர் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு? விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து வரும் 25-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையின்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. மேலும், ஆலைக்கான மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர உருக்குப் பிரிவு அருகேயுள்ள கந்தக அமிலம் சேமிப்பு டேங்கில் கசிவு இருப்பது போலீஸ் ரோந்துப் பணியின்போது கண்டறியப்பட்டது. கந்தக அமிலம் முழுவதையும் அகற்றும் பணி … Continue reading ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு? விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

“தமிழக போலீசார்” தேடிவரும் குற்றவாளி, “தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், தமிழக காவல்துறை, எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் கூறியது. ஆனால், போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகரோ, மத்திய மாநில அமைச்சர்களுடனும், கோவில் குளங்களுக்கும் போலீசார் துணையுடன் சென்று வருகிறார். இது பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களிடத்திலும் தமிழக காவல்துறைமீது கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில், பல மாவட்டங்களில் … Continue reading “தமிழக போலீசார்” தேடிவரும் குற்றவாளி, “தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?

இறக்குமதி மணல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு இறக்குமதி செய்த 55 ஆயிரம் டன் “சிலிகா சாண்ட்” என்ற மணலை துறைமுகத்துக்கு வெளியில் எடுத்துச் செல்லவும், அரசின் அனுமதி இன்றி மணலை இறக்குமதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனை எதிர்த்து மணல் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு ஒற்றை நீதிபதி இந்த தடை உத்தரவை ரத்து செய்ததோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து … Continue reading இறக்குமதி மணல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

S ve சேகரை விளாசிய நீதிபதி- முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

படுக்கையைப் பகிர்ந்தால் முன்னேற முடியும் என்று பதிவிடுவது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கும் பொருந்துமா? பணிக்கு செல்லும் பெண்கள் குறித்து இதைவிடக் கேவலமாகப் பதிவிட முடியாது என்று கடுமையாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதி முன் ஜாமீனை ரத்து செய்துள்ளார். எஸ்.வி சேகர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பிறப்பித்துள்ள விரிவான தீர்ப்பில், எஸ்.வி.சேகரின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளதுடன், சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். அவரது தீர்ப்பு முழு விபரம் வருமாறு: “ஒருவர் கோபமாக இருக்கும்போதோ … Continue reading S ve சேகரை விளாசிய நீதிபதி- முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

சிபிஐ விசாரணைக்கு தடை கோரியவர் சுகாதாரத்துறை அமைச்சரின் பினாமியா? அன்புமணி ராமதாஸ்

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்துள்ள நபர், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பினாமி, என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் நேற்று (மே.10) வெளியிட்ட அறிக்கையில், “குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சுகாதார அதிகாரி சிவக்குமார் என்பவர் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் … Continue reading சிபிஐ விசாரணைக்கு தடை கோரியவர் சுகாதாரத்துறை அமைச்சரின் பினாமியா? அன்புமணி ராமதாஸ்

கூட்டுறவு சங்க தேர்தல் – தற்போதைய நிலையே நீடிக்கும்! உயர்நீதிமன்றம்!

சென்னை : கூட்டுறவு சங்க தேர்தலில் அரசியல்வாதிகளின் சொல்படி ஆடிய அதிகாரிகள் சிக்குகின்றனர். இத்தேர்தலில் முறைகேடு செய்தோருக்கு 'ஆப்பு' வைக்கும் விதத்தில் கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்துவதில் ஒருதலைபட்சமாக செயல்பட்டோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக போட்டியிட்டவர்கள் குற்றம் சாட்டினர். 'வேட்புமனுக்கள் நிராகரிப்பு; வேட்புமனுக்களை ஏற்க மறுப்பு; முறையில்லாமல் தேர்தல் நடப்பது; தேர்தல் அதிகாரிகளின் துணையுடன் … Continue reading கூட்டுறவு சங்க தேர்தல் – தற்போதைய நிலையே நீடிக்கும்! உயர்நீதிமன்றம்!

Sve சேகரை கைது செய்ய தாமதிப்பதேன்? உயர்நீதிமன்றம் கண்டனம்!

மே 3 பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி. சேகருக்கு எதிரான வழக்கில் பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் கேள்வி எழுப்பினார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலை நியாயப்படுத்தி, நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் … Continue reading Sve சேகரை கைது செய்ய தாமதிப்பதேன்? உயர்நீதிமன்றம் கண்டனம்!

மணல் கடத்தல்? அதிகாரிகளைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த வேடியம்மாள் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், மணல் கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டதாக கூறி எனது கணவர் பாபுவை காவல்துறை கைது செய்தனர். பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். எனது … Continue reading மணல் கடத்தல்? அதிகாரிகளைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோடை விடுமுறை! அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல்!

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயர் பட்டியலை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஆர்.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கைகையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப் 30) முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவசர வழக்குகளை விசாரணை நடத்த நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 29 முதல் மே 6-ஆம் … Continue reading கோடை விடுமுறை! அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல்!

வழக்குகளில் திமுகவுக்கு பின்னடைவு! உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

சென்னை: தி.மு.க.,வுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சபாநாயகர் முடிவுக்கு எதிராக அந்த கட்சி தொடர்ந்த இரண்டு வழக்குகளையும், உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்ட சபையில் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டளித்த, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும், 10 எம்.எல்.ஏ.,க்களை, தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு, நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதுபோல, ஜெயலலிதா படத்தை அகற்ற கோரிய வழக்கையும், தள்ளுபடி செய்த நீதிபதிகள், 'நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்த கூடாது' என, தி.மு.க.,வுக்கு கண்டனமும் தெரிவித்தனர். … Continue reading வழக்குகளில் திமுகவுக்கு பின்னடைவு! உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!