சிறுமிகள் வன்புணர்வு? மரண தண்டனைக்கு குடிரசுத்தலைவர் ஒப்புதல்!

இந்தியா முழுவதிலும் அதிகரித்துவரும் இளம்சிறார் பாலியல் வன்புணர்வும் ,அதன் தொடர்பாக ஏற்படும் வன்முறைகளும், போராட்டங்களும் பொதுச் சொத்துக்களுக்கே சேதம் விளைவித்து வருகின்றன. இதைத் தடுக்க புதிதாக போடப்பட்ட சட்டத்திற்க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலளித்துள்ளார். காஷ்மீரின் கதுவாவில் சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சிறுமிகளை கற்பழிப்போருக்கு … Continue reading சிறுமிகள் வன்புணர்வு? மரண தண்டனைக்கு குடிரசுத்தலைவர் ஒப்புதல்!

மோமோ? விளையாட்டு வினையாகும் பரிதாபம்!! விழிப்படையுமா இளைய சமுதாயம்?

இளைஞர்களின் உயிரை பலிவாங்க வாட்ஸ் அப்பில் படையெடுத்திருக்கும் அடுத்த விளையாட்டு தான் மோமோ சேலஞ். மோமோ சேலஞ் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர்கள், சிறுவர்களின் உயிரை பறிக்க வந்த ஒரு வாட்ஸ் அப் விளையாட்டு தான் நீல திமிங்கலம் (blue whale challenge). இந்த விளையாட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். விளையாட்டு வினையாகும் என்பார்கள். அதுப்போல் இந்த நீல திமிங்கல விளையாட்டு எமனாக வந்தது. ரஷ்யாவில் தொடங்கிய இந்த ஆபத்தான விளையாட்டு கொஞ்சம் கொஞ்சமாக … Continue reading மோமோ? விளையாட்டு வினையாகும் பரிதாபம்!! விழிப்படையுமா இளைய சமுதாயம்?

கேரளாவில் வெள்ளப்பெருக்கு? பலி 29! உள்துறை அமைச்சர் ஆய்வு?

தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருவதால் கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மீட்புப் பணியில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, மழை மற்றும் நிலச்சரிவால் கடந்த சில தினங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் பல பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதிலும் 439 முகாம்களில் 53,401 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கேரள மாநிலத்தில் கடந்த 8-ஆம் தேதி … Continue reading கேரளாவில் வெள்ளப்பெருக்கு? பலி 29! உள்துறை அமைச்சர் ஆய்வு?

நம் குழந்தைகளைப் பாதுகாக்க நாம் முன்வர வேண்டும்! #Good_touch #Bad_touch பற்றிய காணொளி!

சமீப காலமாக தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது, அதன் மூலம் வளர்ந்து வாசம் வீச வேண்டிய பூ மலர்கள் அறியாப் பருவத்திலேயே தங்களையுமறியாமல் சருகாகிப் போவது தொடர்கதையாகிப் போனதே நிஜம். இதைத் தடுக்க அரசாங்கம் மட்டும் முயற்சித்தால் போதாது. மாறாக நம் குழந்தைகளுக்கு விவரம் தெரிந்த நாள் முதலாக #நல்ல_தொடுதல் #தீய_தொடுதல் பற்றிய பயிற்சியை எளிமையான முறையில் பயிற்றுவிக்கலாமே! இந்தக் காணொளியில் தனது குழந்தைக்கு #GOOD_TOUCH #BAD_TOUCH பற்றி தனது குழந்தைக்கு பயிற்றுவிக்கும் … Continue reading நம் குழந்தைகளைப் பாதுகாக்க நாம் முன்வர வேண்டும்! #Good_touch #Bad_touch பற்றிய காணொளி!

மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை எதிர்த்து, வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்குப் பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர். இறுதியில் … Continue reading மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

வதந்தி பரப்புவோருக்கு வருகிறது ஆப்(பு)! வாட்சப் நிறுவனம் அதிரடி!

வதந்திகளையும், போலிச் செய்திகளையும் தடுக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக ஒரு மெசேஜ் எங்கிருந்து வருகிறது, யார் அனுப்புகிறார்கள், பரப்புகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் முறையை வகுத்து வருகிறோம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் முக்கிய இடம் வகிக்கும் வாட்ஸ் அப்பில் பல்வேறுவிதமான நம்பகத்தன்மையில்லாத செய்திகள், மெசேஜ்கள், படங்கள் சமீபகாலமாக பரப்பிவிடப்படுகின்றன. குறிப்பாக, பலாத்காரம், குழந்தைகள் கடத்தல், பசுக்களைக் கடத்துதல் தொடர்பான வீடியோக்கள் போன்றவை போலியாகச் சித்தரிக்கப்பட்டும், பழைய வீடியோக்களையும் சமீபத்தில் … Continue reading வதந்தி பரப்புவோருக்கு வருகிறது ஆப்(பு)! வாட்சப் நிறுவனம் அதிரடி!

காவலர்களுக்கு ஓய்வு? அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க கடந்த 2012 ஆம் ஆண்டு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது காவலர்கள் தொடர் தற்கொலை குறித்து நீதிபதி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் காவலர்கள் வீட்டில் ஆடர்லியாக உள்ளவர்களின் விவரம் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். மீண்டும் இந்த வழக்கு … Continue reading காவலர்களுக்கு ஓய்வு? அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

11-பேர் கொலையா? புதுதில்லி போலீசார் குழப்பம்!

டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்யவில்லை, அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். டெல்லியின் வடக்குப்பகுதியில் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் நேற்று வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்துகொண்டதில் வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி(வயது77) தரையில் படுத்தவாறு இறந்திருந்தார். … Continue reading 11-பேர் கொலையா? புதுதில்லி போலீசார் குழப்பம்!

“தமிழக அரசுக்கு விருது” மத்திய அரசு!

தாய்மார்கள் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை டெல்லியில் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவிடம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று பெற்றுக் கொண்டார். விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:– மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. சாதனை சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தமிழக சுகாதாரத்துறையின் மணிமகுடத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைத்ததற்காக வழங்கப்படும் இவ்விருது … Continue reading “தமிழக அரசுக்கு விருது” மத்திய அரசு!

அதிகளவில் “உயிர்பலி” கேட்கும் மெரினா கடற்கறை?

தமிழகக் கடற்கரைகளிலேயே அதிகமான மனித உயிர்களைப் பலிவாங்கும் இடமாகச் சென்னை மெரினா கடற்கரை மாறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 64 பேர் பலியாகியுள்ளனர். ஆசியாவிலேயே அழகிய கடற்கரையை சென்னை மெரினா கடற்கரையாகும். சென்னையில் வசிக்கும் மக்களுக்கு வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் பொழுதுபோக்கும் முக்கிய இடமாக மெரினா கடற்கரை இருக்கிறது. விடுமுறை நாட்களில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் குளித்து, விளையாடி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், அவ்வாறு கடலில் விளையாடுபவர்கள் அதிகமான ஆழத்தில் செல்லும்போது … Continue reading அதிகளவில் “உயிர்பலி” கேட்கும் மெரினா கடற்கறை?