இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி தூக்குவார் என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதைத் தொடங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கருணாநிதி மறைந்த 7-ஆவது நாளிலேயே அழகிரி தனது எதிர்ப்பை ஆரம்பித்திருக்கிறார். ஸ்டாலின் கலக்கம்? ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம்' தொடங்கியது போன்று, அழகிரியும் இப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் தனது பாணி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் உள்ளனர். என் … Continue reading இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!

18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை என்றும் சபாநாயகர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே தகுதிநீக்கம் செய்தார் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது. 18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கு, மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு மூன்றாவது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்ஏ-க்கள் தரப்பிலான வாதம் கடந்த 2 நாட்களில் முடிவடைந்த நிலையில், நேற்று சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலர் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார். … Continue reading 18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

OPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்? சிறப்புச் செய்தி!

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டதாக, ஊடகங்களில் செய்தி பரவியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது டில்லியில் நேற்று, தமிழ்நாடு இல்லத்திலிருந்து கிளம்பும் முன், நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த, என் சகோதரரை, மேல் சிகிச்சைக்காக, மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.அதற்கு, 'ஏர் ஆம்புலன்ஸ்' வசதியை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏற்பாடு செய்து தந்தார். அதற்காக, அவரை நேரில் சந்தித்து, … Continue reading OPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்? சிறப்புச் செய்தி!

உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் 3-ஆவது நீதிபதி விசாரணையில், "அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காததே எங்களது முதல் குற்றச்சாட்டு" என தினகரன் தரப்பு வாதம் வைத்தது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதியின் விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது. இந்த வழக்கு மீதான விசாரணை திங்கள்கிழமை முதல் வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறும் 3-ஆவது நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்தார். இதையடுத்து, முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது தகுதி … Continue reading உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

பாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி? அதிமுக தலைமை அதிர்ச்சி!

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தையொட்டி நடந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சிகளை சேர்ந்த பல எம்.பிக்கள் வாக்களிக்காத விவரம் தற்போது வெளியாகியுள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 4 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி ஸ்ரீநிவாஸ் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப் … Continue reading பாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி? அதிமுக தலைமை அதிர்ச்சி!

18 எம்எல்ஏகள் தகுதி நீக்கம்? இன்று மூன்றாவது நீதிபதி விசாரணை துவக்கம்!

சென்னை : சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று(ஜூலை 23) முதல் மூன்றாவது நீதிபதி, சத்திய நாராயணன் விசாரிக்கிறார். தொடர்ந்து ஐந்து நாட்கள், விசாரணை நடைபெற உள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து, அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். 'பழனிசாமிக்கு எங்கள் ஆதரவு இல்லை; அவரை மாற்ற வேண்டும்' என, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், கவர்னரிடம் … Continue reading 18 எம்எல்ஏகள் தகுதி நீக்கம்? இன்று மூன்றாவது நீதிபதி விசாரணை துவக்கம்!

நல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்! ஆய்வு தகவல்!

இந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும் ஆய்வு மையம் ஆண்டு தோறும் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களின் பட்டியலை பப்ளிக் அஃபேர்ஸ் இன்டக்ஸ் எனும் ஆய்வறிக்கை மூலம் வெளியிடும். இந்த மையமானது மாநிலங்கள் முழுவதும் ஆய்வு நடத்தி அதனை சமூக வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் வரிசைபடுத்தி பட்டியலிடப்படும். அதுமட்டுமின்றி, 2 கோடி மக்கள் தொகைக்கு மேல் உள்ள … Continue reading நல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்! ஆய்வு தகவல்!

“ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்? மம்தா-சந்திரபாபு நாயுடு பேச்சு!

மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு எதிராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி குறிப்பிட்டார். ஜெயலலிதா இருந்திருந்தால் … Continue reading “ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்? மம்தா-சந்திரபாபு நாயுடு பேச்சு!

தொடரும் வருமான வரித்துறை ரெய்டு! மலை போன பணக்குவியலால் அதிகாரிகள் அதிர்ச்சி!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 60). இவர் அரசு முதல் நிலை காண்டிராக்டர். இவருக்கு கருப்பசாமி, ஈஸ்வரன், நாகராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர். செய்யாத்துரை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார். தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கப்பலூர் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை சேகர்ரெட்டி என்பவர் எடுத்து இருந்தாலும் அந்தவேலையை … Continue reading தொடரும் வருமான வரித்துறை ரெய்டு! மலை போன பணக்குவியலால் அதிகாரிகள் அதிர்ச்சி!

அம்த்ஷா பேச்சுக்கு இலகணேசன் விளக்கம்? அதிமுகவை விமர்சித்து பேசவில்லை!

அதிமுக அரசை ஊழல் அரசு என அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 9-ம் தேதி சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் பாஜக ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், ''தமிழகத்தை நினைத்தால் எனக்கு வேதனையாக இருக்கிறது. மிகவும் ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கிறது. இந்த ஊழல்கள் அனைத்தும் … Continue reading அம்த்ஷா பேச்சுக்கு இலகணேசன் விளக்கம்? அதிமுகவை விமர்சித்து பேசவில்லை!

ஜெயலலிதாவை கொடுமைப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி? நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி?

தூத்துக்குடியில் 7.9.17 அன்று அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார் மகள் டாக்டர் ஜெயலலிதா திருமண நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நாலாட்டின்புதூர் ராமகிருஷ்ணன்- சண்முகத்தாய் தம்பதியினரின் மகனும், கோட்டயம் எஸ்பியுமான கருப்பசாமி ஐ.பி.எஸ் தான் ஆறுமுகநயினார் மருமகன்.. அதிமுக பிரமுகர் ஆறுமுகநயினார், தன் மகளுக்கு பேச்சியம்மாள் என்றுதான் பெயர் வைத்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் விசுவாசம் இருப்பது போல் காட்டி, பதவிகள் பெறுவதற்காக தன் மகள் … Continue reading ஜெயலலிதாவை கொடுமைப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி? நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி?

ஒரே நாடு-ஒரே தேர்தல்! ஆகஸ்டில் புதிய சட்ட மசோதா இரு அவைகளிலும் தாக்கலாகிறது!

ஒரு நாடு; ஒரு தேர்தல்' திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, தேர்தல் கமிஷனிடம், பல்வேறு கேள்விகளை மத்திய அரசு கேட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் கமிஷன், 'இத்திட்டத்தை நிறைவேற்ற, கூடுதல் ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு போட்டதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களுக்காக, 4,555 கோடி ரூபாய் தேவை' என, தெரிவித்துள்ளது. 'நாடு முழுவதும், லோக்சபாவுடன், மாநிலங் களின் சட்டசபைகளுக்கும் சேர்த்து, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 'அதனால், மக்கள் பணம் வீணாவது தடுக்கப்படும்' என, பிரதமர் … Continue reading ஒரே நாடு-ஒரே தேர்தல்! ஆகஸ்டில் புதிய சட்ட மசோதா இரு அவைகளிலும் தாக்கலாகிறது!

திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும்? கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி!

“ஆரம்பத்தில் ஐ.ஐ.டி. வளாகத்தில் வாக்கிங் போவதை வழக்கமாக வைத்திருந்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். கடந்த சில மாதங்களாகவே அவரது வாக்கிங் ஸ்பாட் அடையாறில் உள்ள The Theosophical Society கேம்பஸுக்கு மாறிவிட்டது. அடையாறு ஆலமரம் இருக்கக்கூடிய பகுதி இது. இங்கே உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே கேம்பஸுக்குள் நுழைய முடியும். சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் பசுமை சூழ இருக்கும். இந்த வளாகத்தில்தான் வாக்கிங் போகிறார் ஸ்டாலின். டிடிவி தினகரன் வீட்டிலிருந்து இந்த கேம்பஸ் … Continue reading திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும்? கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி!

அமித்ஷா தலைமையில் கூடும் பாஜக பயங்கரவாதிகள்? சுப்ரமணியம் சாமி அதிரடிப் பேச்சு!

கடந்த வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் திருமதி. தமிழிசை சௌந்திரராஜன் பேசியதாவது அமித் ஷாவின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். தாமரை மலராது, தமிழக பாஜகவில் என்ன இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிகழ்ச்சியாக அமையும். பாஜக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் கட்சி. பல எம்எல்ஏக்களைப் பெற்று தோல்வியடைந்த கட்சி போல் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சவாலான சூழ்நிலையில் அடிமட்டத் தொண்டர் வரை கட்சியை எவ்வளவு எடுத்துச் சென்றிருக்கிறோம் என … Continue reading அமித்ஷா தலைமையில் கூடும் பாஜக பயங்கரவாதிகள்? சுப்ரமணியம் சாமி அதிரடிப் பேச்சு!

அதிரடி காட்டும் தமிழக பள்ளி கல்வித்துறை? மக்கள் விரும்பும் அரசாக மாறிவரும் #தமிழக_அரசு!

சென்னை : தமிழகத்தில், தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம், தனியார் பல்கலைகள் மற்றும் சட்ட கல்லுாரிகள் துவக்க அனுமதி அளிக்கும் சட்டம் உட்பட, ஆறு சட்டங்கள், நேற்று ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விபரம்: தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் : * தனியார் பள்ளிகள் அனைத்தையும் நிர்வகிப்பதற்கு, புதிய விரிவான சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்க, 2012 ஏப்., 18ல், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த ஆலோசனைப்படி, புதிய சட்டம் உருவாக்கப்பட்டு, சட்டசபையில் நேற்று … Continue reading அதிரடி காட்டும் தமிழக பள்ளி கல்வித்துறை? மக்கள் விரும்பும் அரசாக மாறிவரும் #தமிழக_அரசு!

தொடரும் அதிமுக அரசின் அதிரடி? சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகள்!

சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று பல்வேறு நலத்திட்டங்களை பேரவையில் அறிவித்தார். அவை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் முதல்வர் வெளியிட்ட நலத்திட்டங்கள் 1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் 1,367 விடுதிகளில், தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கு அவர்தம் உடமைகளை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு ஏற்கனவே அறையில் அமைக்கப் பெற்றிருக்கும் ஆர்.சி. அலமாரிகளுக்கு, மாணாக்கர் எண்ணிக்கைக்கேற்ப, தனித்தனி இரும்புக் கதவு மற்றும் பூட்டு சாவி … Continue reading தொடரும் அதிமுக அரசின் அதிரடி? சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகள்!

மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை எதிர்த்து, வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்குப் பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர். இறுதியில் … Continue reading மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

தகுதிநீக்க வழக்கு! ஆகஸ்டில் இறுதி தீர்ப்பா?

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணையை ஆரம்பித்த மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அனைத்து தரப்பினரும் வழக்கில் ஆஜராக வசதியாக ஜூலை 23 முதல் வழக்கு விசாரணை தொடங்கி தினமும் நடக்கும் என்று உத்தரவிட்டார். தமிழக முதல்வர் கே.பழனிசாமியை மாற்றக் கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் தமிழக ஆளுநரிடம் கடந்த ஆண்டு மனு அளித்தனர். இதில் ஜக்கையனைத் தவிர மீதமுள்ள 18 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை … Continue reading தகுதிநீக்க வழக்கு! ஆகஸ்டில் இறுதி தீர்ப்பா?

காவிரி விவகாரம்-அனைத்துக்கட்சி கூட்டம்? தமிழக முதல்வர் விளக்கம்!

காவிரி விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப்பேரவை திங்கள்கிழமை தொடங்கியதும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசியது: காவிரி பிரச்னையில் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியன அமைக்கப்பட்டு அதில் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். … Continue reading காவிரி விவகாரம்-அனைத்துக்கட்சி கூட்டம்? தமிழக முதல்வர் விளக்கம்!

“காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது தவறு என்று கர்நாடக நீா்வளத் துறை அமைச்சா் டி.கே.சிவக்குமார், சனிக்கிழமை தெரிவித்தார். பெங்களூரு, விதான சௌதாவில் காவிரி தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காவிரி தொடா்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் கா்நாடகத்துக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் ஆராயப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பால் சிலவற்றில் கா்நாடகத்துக்கு … Continue reading “காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

மீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” ? விடுதலையாவாளா “காவிரித்தாய்?

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர்ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரச சார்பில் இன்று நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்சத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவில் தங்களிடம் ஆலோசிக்காமல் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட உள்ளது. தவறவிடாதீர் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.71 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி … Continue reading மீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” ? விடுதலையாவாளா “காவிரித்தாய்?

“தமிழக அரசுக்கு விருது” மத்திய அரசு!

தாய்மார்கள் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை டெல்லியில் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவிடம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று பெற்றுக் கொண்டார். விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:– மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. சாதனை சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தமிழக சுகாதாரத்துறையின் மணிமகுடத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைத்ததற்காக வழங்கப்படும் இவ்விருது … Continue reading “தமிழக அரசுக்கு விருது” மத்திய அரசு!

“பசுமை வழிச் சாலை” திட்டத்துக்கு எதிராக உயநீதிமன்றம் திடீர் உத்தரவு

மக்களிடம் கருத்து கேட்காமல் பசுமை வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதை எதிர்த்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்லும் நேரத்தை குறைப்பதற்காக பசுமை வழிச்சாலையை அமைக்க மத்திய அரசு பரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் சென்னையிலிருந்து சேலம்வரை 277 கிலோ மீட்டர் தூரம் பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தவுள்ளது. இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை ரத்து … Continue reading “பசுமை வழிச் சாலை” திட்டத்துக்கு எதிராக உயநீதிமன்றம் திடீர் உத்தரவு

சபாநாயகருடன் கடும் வாக்குவாதம்? துணை முதல்வர் செய்து வைத்த சமரசம்!

சட்டப் பேரவைத் தலைவா் தனபாலுடன், அமைச்சா் ஓ.எஸ்.மணியன் புதன்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலையீட்டால் சமாதானம் ஏற்பட்டது. சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், ஆளுநா் சுற்றுப்பயணம் குறித்து பேசுகையில், மாநில சுயாட்சி குறித்து பேசினாா். பின்னா் அது தொடா்பாக கைத்தறித்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பேசுகையில், ‘எதிா்கட்சித் தலைவா் மாநில சுயாட்சி குறித்து பேசினாா். அதுகுறித்து விளக்கம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்’ என்றாா். … Continue reading சபாநாயகருடன் கடும் வாக்குவாதம்? துணை முதல்வர் செய்து வைத்த சமரசம்!

பெண்களுக்கு எதிரான வன்முறையில் தமிழகத்தின் நிலை? முதல்வர் விளக்கம்!

இந்தியாவிலேயே வன் குற்றங்களின் அடிப்படையில் தமிழகத்தின் நிலை என்ன என்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2018 - 19ம் ஆண்டுக்கான காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பின் தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அதில், 2016ஆம் ஆண்டைய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி, சொத்து சம்பந்தமான குற்றங்களில் நமது மாநிலத்தின் நிலை என்ன என்பதை இங்கு குறிப்பிட … Continue reading பெண்களுக்கு எதிரான வன்முறையில் தமிழகத்தின் நிலை? முதல்வர் விளக்கம்!

“பசுமை வழிச்சாலை ” வரமா? சாபமா? ஒரு சிறு பார்வை -பகுதி 2

இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாடு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வந்தன. ஆனால், இங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஏகப்பட்ட, 'குட்டி' தலைவர்களை உருவாக்கிவருகிறது. இவர்கள் எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்ற பெயரில் மக்களுக்கு அழைப்பு விடுத்து, வன்முறைக்கு வித்திடுகின்றனர்.எட்டு வழிச்சாலை தொடர்பாக, அவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளும், அவற்றின் உண்மை நிலவரமும் வருமாறு: 6வது கட்டுக்கதை: * சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் … Continue reading “பசுமை வழிச்சாலை ” வரமா? சாபமா? ஒரு சிறு பார்வை -பகுதி 2

அமைந்தது “காவிரி ஆணையம்” ! மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, உறுப்பினர்களையும் நியமித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 1ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனால் ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. ஆணையத்தின் தமிழக உறுப்பினருக்குப் பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பெயரை தமிழக அரசு பரிந்துரை … Continue reading அமைந்தது “காவிரி ஆணையம்” ! மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

“பசுமை வழிச் சாலை” வரமா? சாபமா? – ஒரு சிறு பார்வை!

சாலை வசதி ஏற்படுத்துவது, ஒரு நாட்டின் அடிப்படை கட்டமைப்பு. அதன் அடிப்படை யிலேயே, தொழில்வளம், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல அம்சங்கள் உருவாகும். இதனால், சாலை அமைப்பதை எந்த துறை வல்லுனர்களும் எதிர்ப்பதில்லை. ஆனால், தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், சேலம் -சென்னை விரைவு பசுமை சாலை, கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. நித்தம் நித்தம் சமூக ஊடகங்களில் பரவும் பல்வேறு வதந்திகள், பொதுமக்களையும், சாலைக்கு நிலம் வழங்க ஒப்புக் கொண்டவர் களையும் குழப்பி வருகிறது. 'காடுகள் அழிக்கப்படும்; … Continue reading “பசுமை வழிச் சாலை” வரமா? சாபமா? – ஒரு சிறு பார்வை!

பசுமைவழி சாலைக்கு எதிர்ப்பு? தீக்குளிக்க முயற்சித்த விவசாயிகள்!

சேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40 ஆயிரம் வீடுகள், 8 மலைகளும் உடைக்கப்பட உள்ளது. சாலை அமைப்பதற்கான நில அளவீடு பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன் … Continue reading பசுமைவழி சாலைக்கு எதிர்ப்பு? தீக்குளிக்க முயற்சித்த விவசாயிகள்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு? விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து வரும் 25-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையின்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. மேலும், ஆலைக்கான மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர உருக்குப் பிரிவு அருகேயுள்ள கந்தக அமிலம் சேமிப்பு டேங்கில் கசிவு இருப்பது போலீஸ் ரோந்துப் பணியின்போது கண்டறியப்பட்டது. கந்தக அமிலம் முழுவதையும் அகற்றும் பணி … Continue reading ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு? விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

சேலத்தில் தீவிரமாகும் போராட்டங்கள்! அரசிடம் மக்கள் எதிர்பார்க்கும் முடிவு என்ன?

நெடுவாசல் மீத்தேன் எதிர்ப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு, சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு எதிர்ப்பு என தொடர்ந்து மக்கள் போராட்டங்களால் தமிழக அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகளும்,உதிரிக்கட்சிகளும் தங்களது திட்டத்தை செயல்படுத்த அப்பாவி பாமர மக்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதே உண்மை.... ஆனால் போராட்டங்களை முன்னெடுத்துப் போராடும் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முயற்சிக்காமல், போராட்டங்களை பின்னிருந்து இயக்கும் சில அமைப்புகள்,மற்றும் கட்சிகளின் நிர்வாகிகளை அழைத்து சமாதானம் பேசிவரும் அரசு அதிகாரிகளின் வீண் முயற்சிகளால் போராட்டங்களை முடிவுக்கு … Continue reading சேலத்தில் தீவிரமாகும் போராட்டங்கள்! அரசிடம் மக்கள் எதிர்பார்க்கும் முடிவு என்ன?

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீவிரமாகும் “தமிழக அரசு!

புதுடெல்லி, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– 4–வது நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக நிறைய கோரிக்கைகள் வைத்திருக்கின்றோம். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர் மேலாண்மை பணிகளுக்கு முக்கியத்துவம் தருவது குறித்தும், தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்படும் குடிமராமத்து திட்டத்தைப் பற்றியும், விளக்கி மத்திய அரசிற்கு குறிப்பிட்டோம். அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய … Continue reading ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீவிரமாகும் “தமிழக அரசு!

பிரதமருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்! ஏன்? எதற்கு?

தமிழ்நாட்டு அரசின் பலத்த சட்டப்போராட்டம், தமிழக கட்சிகள், மக்களின் கடுமையான போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்து நேற்று (ஜூன் 1 ) அரசிதழில் வெளியிட்டது. இது தமிழகத்தின் காவிரி வரலாற்றில் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இது மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசிற்கும், தமிழ்நாட்டு … Continue reading பிரதமருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்! ஏன்? எதற்கு?

ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்வாரா முதல்வர் ?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை இரவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து விளக்கம் அளித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. போராட்டத்தின் 100-வது நாளான நேற்றுமுன்தினம் (மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதில் போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. நேற்று 2-வது நாளாகவும் வன்முறை, துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 12 … Continue reading ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்வாரா முதல்வர் ?

மீண்டும் “சாமிக்கு அர்ச்சனை” ! நெட்டிசன்களின் “அர்ச்சனையில்”சிக்கிய எடப்பாடியார்!

தமிழக முதல்வர் எடப்பாடியை போற்றும் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 45 நாள் போராட்டத்திற்கு பின் திரைப்படங்கள் தியேட்டர்களில் திரையிடப்பட்டன. பலநாட்களுக்கு பிறகு தியேட்டர் வந்த பொதுமக்களுக்கு ஒரு அதிர்ச்சி. அதாவது, தமிழக அரசின் செய்தி துறை சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி தயாரிக்கப்பட்ட விளம்பரம் தான் அவை. தனக்கு வேலை கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி … Continue reading மீண்டும் “சாமிக்கு அர்ச்சனை” ! நெட்டிசன்களின் “அர்ச்சனையில்”சிக்கிய எடப்பாடியார்!

ஜெயலலிதாவை மிஞ்சினாரா எடப்பாடியார்?

“கோட்டையை முற்றுகையிடப்போவதாக அறிவித்த அரசு ஊழியர்கள் சங்கத்தினரை நேற்று இரவிலிருந்தே கைது செய்ய ஆரம்பித்துவிட்டது போலீஸ். வழக்கமாகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதும், மாலையில் விடுவிப்பதும்தான் போலீஸ் ஸ்டைல். ஆனால், இன்று அரசு ஊழியர்களைப் போராட்டமே நடத்தவிடாமல் தடுத்தது எடப்பாடி ஸ்டைல் என்று சொல்கிறார்கள். ‘அரசு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிடப் போகிறார்கள் என்று அறிவிப்பு வந்ததுமே காவல் துறையில் தனக்கு நெருக்கத்தில் உள்ள சிலரை அழைத்துப் பேசினார் முதல்வர். ‘இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு எப்படி இருக்கும் என்பதை … Continue reading ஜெயலலிதாவை மிஞ்சினாரா எடப்பாடியார்?

தர்மயுத்தம் 2.0 நடத்தப் (ஜெய்க்கப்) போவது யாரு?                 சிறப்புத் தொடர். பகுதி 1

சினிமாவுல ஒரு தடவை கிளைமேக்ஸ் வந்தால்தான் சுவாரஸ்யமா இருக்கும். ஆனால் சீனுக்கு சீன் கிளைமேக்ஸ் வைத்தால் அடிக்கடி பிரஷர் எகிறி பிராணனுக்கே பிரச்னை வந்துடாது? இப்படியொரு இக்கட்டான இம்சையில்தான் சிக்கித் தவிக்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். ‘ஓ.பி.எஸ். அணி’ என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டு அவரது பின்னால் நிற்பவர்கள், பன்னீரின் அரசியல் செல்வாக்கு சொந்த மாவட்டத்திலேயே ஆட்டம் காண துவங்கியிருப்பதால் மண்டை காய துவங்குகிறார்களாம். ஜெயலலிதாவுக்கு சிக்கல் வரும்போதெல்லாம் முதல்வராக்கப்பட்டார் பன்னீர்செல்வம். இதனால் ஜெ.வுக்கு அடுத்து, சசிக்கும் நடுவில் … Continue reading தர்மயுத்தம் 2.0 நடத்தப் (ஜெய்க்கப்) போவது யாரு?                 சிறப்புத் தொடர். பகுதி 1

சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் – சசிகலா அதிரடி

“பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க திவாகரன், தினகரன் இருவரும் நேரம் கேட்டிருந்தார்கள். ஆனால், இருவரையும் இன்னும் சந்திக்காமல் தவிர்த்து வருகிறார் சசிகலா. ஆனால், எதிர்பாராமல் திடீரென இன்று பெங்களூரு புகழேந்தியை வர வழைத்துப் பேசியிருக்கிறார் சசிகலா. புகழேந்தியைப் பார்த்ததுமே தினகரன், திவாகரன் பிளவு தொடர்பாகத்தான் பேசியிருக்கிறார் சசிகலா. ‘வெளியில் என்னதான் நடந்துட்டு இருக்குது? என்னத்துக்காக இப்போ அவரு கட்சி ஆரம்பிச்சிருக்காரு? ஆரம்பத்துல இருந்தே தினகரனும் நான் சொன்னதை கேட்கல. இப்போ திவாகரனும் என்கிட்ட … Continue reading சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் – சசிகலா அதிரடி