20,23 தேதிகளில் விவாதம்! பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதன்பின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலங்கு தேசம் கட்சியினர் பெரும் அமளியில் ஈடுபட்டு ஆளும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்தனர். ஆனால் அதை மக்களவை சபாநாயகர் ஏற்கவில்லை. இந்நிலையில், மழைக்காலக் கூட்டத்தொடரிலும் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை … Continue reading 20,23 தேதிகளில் விவாதம்! பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு!

அரசுக்கெதிராக “நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி கூறியுள்ளது. … Continue reading அரசுக்கெதிராக “நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

#காவிரி_விவகாரம்? முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை!

காவிரிப் படுகை நீர்த் தேக்கங்களில் நீர் மதிப்பீடு தொடர்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகள், அதற்காகப் பயன்பாட்டில் உள்ள சாதனங்கள் ஆகியவை குறித்த நிலவர அறிக்கையை தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களும் தாக்கல் செய்யுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுக்கான தலைவர்கள், உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை … Continue reading #காவிரி_விவகாரம்? முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை!

மூன்றாண்டு தொடர்ந்த அதிகார மோதல்? தீர்த்து வைத்த உச்சநீதிமன்றம்!

தில்லி தலைநகர் பிராந்தியத்தைப் பொருத்தமட்டில் துணைநிலை ஆளுநருக்கு என தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே பல்வேறு விஷயங்களில் அதிகார மோதல் போக்கு நிலவி வந்தது. இதில், உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம், லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவை நிர்வகிக்கும் விவகாரம், சிஎன்ஜி வாகனங்களின் தரத்தை நிர்ணயிப்பதில் … Continue reading மூன்றாண்டு தொடர்ந்த அதிகார மோதல்? தீர்த்து வைத்த உச்சநீதிமன்றம்!

தகுதிநீக்க வழக்கு! ஆகஸ்டில் இறுதி தீர்ப்பா?

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணையை ஆரம்பித்த மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அனைத்து தரப்பினரும் வழக்கில் ஆஜராக வசதியாக ஜூலை 23 முதல் வழக்கு விசாரணை தொடங்கி தினமும் நடக்கும் என்று உத்தரவிட்டார். தமிழக முதல்வர் கே.பழனிசாமியை மாற்றக் கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் தமிழக ஆளுநரிடம் கடந்த ஆண்டு மனு அளித்தனர். இதில் ஜக்கையனைத் தவிர மீதமுள்ள 18 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை … Continue reading தகுதிநீக்க வழக்கு! ஆகஸ்டில் இறுதி தீர்ப்பா?

காவலர்களுக்கு ஓய்வு? அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க கடந்த 2012 ஆம் ஆண்டு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது காவலர்கள் தொடர் தற்கொலை குறித்து நீதிபதி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் காவலர்கள் வீட்டில் ஆடர்லியாக உள்ளவர்களின் விவரம் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். மீண்டும் இந்த வழக்கு … Continue reading காவலர்களுக்கு ஓய்வு? அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

“பசுமை வழிச் சாலை” திட்டத்துக்கு எதிராக உயநீதிமன்றம் திடீர் உத்தரவு

மக்களிடம் கருத்து கேட்காமல் பசுமை வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதை எதிர்த்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்லும் நேரத்தை குறைப்பதற்காக பசுமை வழிச்சாலையை அமைக்க மத்திய அரசு பரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் சென்னையிலிருந்து சேலம்வரை 277 கிலோ மீட்டர் தூரம் பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தவுள்ளது. இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை ரத்து … Continue reading “பசுமை வழிச் சாலை” திட்டத்துக்கு எதிராக உயநீதிமன்றம் திடீர் உத்தரவு

பசுமைவழி சாலைக்கு எதிர்ப்பு? தீக்குளிக்க முயற்சித்த விவசாயிகள்!

சேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40 ஆயிரம் வீடுகள், 8 மலைகளும் உடைக்கப்பட உள்ளது. சாலை அமைப்பதற்கான நில அளவீடு பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன் … Continue reading பசுமைவழி சாலைக்கு எதிர்ப்பு? தீக்குளிக்க முயற்சித்த விவசாயிகள்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு? விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து வரும் 25-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையின்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. மேலும், ஆலைக்கான மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர உருக்குப் பிரிவு அருகேயுள்ள கந்தக அமிலம் சேமிப்பு டேங்கில் கசிவு இருப்பது போலீஸ் ரோந்துப் பணியின்போது கண்டறியப்பட்டது. கந்தக அமிலம் முழுவதையும் அகற்றும் பணி … Continue reading ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு? விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

“தமிழக போலீசார்” தேடிவரும் குற்றவாளி, “தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், தமிழக காவல்துறை, எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் கூறியது. ஆனால், போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகரோ, மத்திய மாநில அமைச்சர்களுடனும், கோவில் குளங்களுக்கும் போலீசார் துணையுடன் சென்று வருகிறார். இது பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களிடத்திலும் தமிழக காவல்துறைமீது கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில், பல மாவட்டங்களில் … Continue reading “தமிழக போலீசார்” தேடிவரும் குற்றவாளி, “தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?

கநாடக ஆட்சி பொறுப்பை ஏற்கப் போவது யார்? உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

கர்நாடக அரசியலில் அதிரடியாக நடைபெற்று வரும் திருப்பங்கள் நேற்று (மே 16) இரவு முதல் விடிய விடிய பல்வேறு பரபரப்புக் காட்சிகளை பெங்களூருவிலும் டெல்லியிலும் அரங்கேற்றியுள்ளன. கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிகாலை கூறிவிட்டது. ஆனபோதும் காங்கிரஸ் மஜதவினரின் மனுவை தள்ளுபடி செய்ய வில்லை என்றும் இதை பின் விசாரிப்பதாகவும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். நேற்று இரவு பெங்களூருவில் தொடங்கி அதிகாலை உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த … Continue reading கநாடக ஆட்சி பொறுப்பை ஏற்கப் போவது யார்? உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

கர்நாடக பொதுத் தேர்தலில் 67.2% வாக்குகள் பதிவு! அமையுமா தொங்கு சட்டசபை?

கர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு இந்த தேர்தல் வெற்றி முக்கியமாகக் கருதப்படுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுத்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக பேரவைத் தேர்தலும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநில பேரவைத் தேர்தல்களும், அடுத்த … Continue reading கர்நாடக பொதுத் தேர்தலில் 67.2% வாக்குகள் பதிவு! அமையுமா தொங்கு சட்டசபை?

இறக்குமதி மணல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு இறக்குமதி செய்த 55 ஆயிரம் டன் “சிலிகா சாண்ட்” என்ற மணலை துறைமுகத்துக்கு வெளியில் எடுத்துச் செல்லவும், அரசின் அனுமதி இன்றி மணலை இறக்குமதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனை எதிர்த்து மணல் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு ஒற்றை நீதிபதி இந்த தடை உத்தரவை ரத்து செய்ததோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து … Continue reading இறக்குமதி மணல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

போலி வாக்காளர் அட்டை பறிமுதல்! ஒத்திவைக்கப்படும் கர்நாடக தேர்தல்?

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாக்காளர் அடையாள அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. அதன்பேரில் தேர்தல் அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 9,746 போலி வாக்காளர் அடையாள அட்டைகளும், 5 மடிக்கணினிகளும், ஒரு அச்சு எந்திரமும் இருந்தது தெரியவந்தது. வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்ப … Continue reading போலி வாக்காளர் அட்டை பறிமுதல்! ஒத்திவைக்கப்படும் கர்நாடக தேர்தல்?