வதந்தி பரப்புவோருக்கு வருகிறது ஆப்(பு)! வாட்சப் நிறுவனம் அதிரடி!

வதந்திகளையும், போலிச் செய்திகளையும் தடுக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக ஒரு மெசேஜ் எங்கிருந்து வருகிறது, யார் அனுப்புகிறார்கள், பரப்புகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் முறையை வகுத்து வருகிறோம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் முக்கிய இடம் வகிக்கும் வாட்ஸ் அப்பில் பல்வேறுவிதமான நம்பகத்தன்மையில்லாத செய்திகள், மெசேஜ்கள், படங்கள் சமீபகாலமாக பரப்பிவிடப்படுகின்றன. குறிப்பாக, பலாத்காரம், குழந்தைகள் கடத்தல், பசுக்களைக் கடத்துதல் தொடர்பான வீடியோக்கள் போன்றவை போலியாகச் சித்தரிக்கப்பட்டும், பழைய வீடியோக்களையும் சமீபத்தில் … Continue reading வதந்தி பரப்புவோருக்கு வருகிறது ஆப்(பு)! வாட்சப் நிறுவனம் அதிரடி!

கேரளா மாணவி கற்பழிப்பு😓! ஐஏஎஸ் அதிகாரி உடந்தையா 😨?

பெங்களூருவில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒரு தம்பதியின் மகள் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்தார். அப்போது அந்த மாணவிக்கும், பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபரின் மகனுமான நஜீர்கான் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த மாணவியை கடந்த ஜனவரி மாதம் நஜீர்கான் மதம் மாற்றியதாகவும், … Continue reading கேரளா மாணவி கற்பழிப்பு😓! ஐஏஎஸ் அதிகாரி உடந்தையா 😨?

மனிதம் தொலைத்த மனிதர்கள்? இன்றைய யுகத்தின் சாபக்கேடு!

சிவப்பு நிற டாட்டா இண்டிகா கார் கரப்பான் பூச்சியை கவிழ்த்து போட்டது போல் கவிழ்ந்து கிடக்கிறது. கவிழ்ப்பதற்கு முன்னர், ஆக்ரோஷமாக அடித்து நொறுக்கப்பட்டிருப்பது அந்த வீடியோவைப் பார்த்தாலே தெரிகிறது. அதன்பின்தான் காரை கவிழ்த்திருக்க வேண்டும். காருக்கு அருகிலேயே ஐந்து பேரின் ஆடைகள் கிழிக்கப்பட்டு, உதிரம் வலிய அமர்ந்திருக்க அவர்களை மனிதர்கள் கூட்டமாக காலால், கையால் புரட்டி அடித்தனர். அவர்களோ வலியில் துடிதுடித்தனர். கும்பலாக ஒரு சிலர் காரில் வந்தவர்களை அடித்துக்கொண்டிருக்க, அதை ஊர் திருவிழா போன்று வீட்டு … Continue reading மனிதம் தொலைத்த மனிதர்கள்? இன்றைய யுகத்தின் சாபக்கேடு!

மணல் கடத்தல்? அதிகாரிகளைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த வேடியம்மாள் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், மணல் கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டதாக கூறி எனது கணவர் பாபுவை காவல்துறை கைது செய்தனர். பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். எனது … Continue reading மணல் கடத்தல்? அதிகாரிகளைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!