#காவிரி_விவகாரம்? முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை!

காவிரிப் படுகை நீர்த் தேக்கங்களில் நீர் மதிப்பீடு தொடர்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகள், அதற்காகப் பயன்பாட்டில் உள்ள சாதனங்கள் ஆகியவை குறித்த நிலவர அறிக்கையை தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களும் தாக்கல் செய்யுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுக்கான தலைவர்கள், உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை … Continue reading #காவிரி_விவகாரம்? முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை!

காவிரி விவகாரம்-அனைத்துக்கட்சி கூட்டம்? தமிழக முதல்வர் விளக்கம்!

காவிரி விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப்பேரவை திங்கள்கிழமை தொடங்கியதும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசியது: காவிரி பிரச்னையில் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியன அமைக்கப்பட்டு அதில் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். … Continue reading காவிரி விவகாரம்-அனைத்துக்கட்சி கூட்டம்? தமிழக முதல்வர் விளக்கம்!

கூடுகிறது காவிரி ஆணையம்! கிடைக்குமா காவிரி?

சென்னை; காவிரி விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இரண்டு அமைப்புகளையும் மத்திய அரசு ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சார்பில் காவிரி உறுப்பினராக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநில அரசுகளும் தங்களது மாநில பிரதிநிதிகளை … Continue reading கூடுகிறது காவிரி ஆணையம்! கிடைக்குமா காவிரி?

“காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது தவறு என்று கர்நாடக நீா்வளத் துறை அமைச்சா் டி.கே.சிவக்குமார், சனிக்கிழமை தெரிவித்தார். பெங்களூரு, விதான சௌதாவில் காவிரி தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காவிரி தொடா்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் கா்நாடகத்துக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் ஆராயப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பால் சிலவற்றில் கா்நாடகத்துக்கு … Continue reading “காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

மீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” ? விடுதலையாவாளா “காவிரித்தாய்?

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர்ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரச சார்பில் இன்று நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்சத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவில் தங்களிடம் ஆலோசிக்காமல் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட உள்ளது. தவறவிடாதீர் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.71 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி … Continue reading மீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” ? விடுதலையாவாளா “காவிரித்தாய்?

அமைந்தது “காவிரி ஆணையம்” ! மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, உறுப்பினர்களையும் நியமித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 1ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனால் ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. ஆணையத்தின் தமிழக உறுப்பினருக்குப் பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பெயரை தமிழக அரசு பரிந்துரை … Continue reading அமைந்தது “காவிரி ஆணையம்” ! மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

பிரதமருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்! ஏன்? எதற்கு?

தமிழ்நாட்டு அரசின் பலத்த சட்டப்போராட்டம், தமிழக கட்சிகள், மக்களின் கடுமையான போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்து நேற்று (ஜூன் 1 ) அரசிதழில் வெளியிட்டது. இது தமிழகத்தின் காவிரி வரலாற்றில் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இது மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசிற்கும், தமிழ்நாட்டு … Continue reading பிரதமருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்! ஏன்? எதற்கு?

கநாடக ஆட்சி பொறுப்பை ஏற்கப் போவது யார்? உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

கர்நாடக அரசியலில் அதிரடியாக நடைபெற்று வரும் திருப்பங்கள் நேற்று (மே 16) இரவு முதல் விடிய விடிய பல்வேறு பரபரப்புக் காட்சிகளை பெங்களூருவிலும் டெல்லியிலும் அரங்கேற்றியுள்ளன. கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிகாலை கூறிவிட்டது. ஆனபோதும் காங்கிரஸ் மஜதவினரின் மனுவை தள்ளுபடி செய்ய வில்லை என்றும் இதை பின் விசாரிப்பதாகவும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். நேற்று இரவு பெங்களூருவில் தொடங்கி அதிகாலை உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த … Continue reading கநாடக ஆட்சி பொறுப்பை ஏற்கப் போவது யார்? உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

கர்நாடக பொதுத் தேர்தலில் 67.2% வாக்குகள் பதிவு! அமையுமா தொங்கு சட்டசபை?

கர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு இந்த தேர்தல் வெற்றி முக்கியமாகக் கருதப்படுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுத்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக பேரவைத் தேர்தலும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநில பேரவைத் தேர்தல்களும், அடுத்த … Continue reading கர்நாடக பொதுத் தேர்தலில் 67.2% வாக்குகள் பதிவு! அமையுமா தொங்கு சட்டசபை?

கர்நாடகத்தில் இன்று பலபரீட்சை- யாருக்கு கிடைக்கும் வெற்றி?

கர்நாடகத்தில், முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் அரசின் பதவி காலம் முடிவடைய இருப்பதை யொட்டி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்ட சபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கியதால் ராஜராஜேஸ்வரி தொகுதியின் தேர்தல் வருகிற 28–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதனால் மீதம் … Continue reading கர்நாடகத்தில் இன்று பலபரீட்சை- யாருக்கு கிடைக்கும் வெற்றி?

மும்முனைப் போட்டியில் கர்நாடக தேர்தல் களம்! யாருக்கு சாதகம்?

தொங்குச் சட்டமன்றம் அமையும் என்று முக்கால் சொச்சம் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், பிரச்சார மழை நேற்று (மே 10) முதல் கர்நாடகாவில் ஓய்ந்துள்ளது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் என்ற மூன்று பெரிய கட்சிகளின் மும்முனைப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பதை நாளைய தேர்தல்களம் தீர்மானிக்கப் போகிறது. வரும் மே மாதத்தோடு கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவடைகிறது என்றபோதும், மார்ச் மாதம் வரை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதைப் பற்றி … Continue reading மும்முனைப் போட்டியில் கர்நாடக தேர்தல் களம்! யாருக்கு சாதகம்?

போலி வாக்காளர் அட்டை பறிமுதல்! ஒத்திவைக்கப்படும் கர்நாடக தேர்தல்?

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாக்காளர் அடையாள அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. அதன்பேரில் தேர்தல் அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 9,746 போலி வாக்காளர் அடையாள அட்டைகளும், 5 மடிக்கணினிகளும், ஒரு அச்சு எந்திரமும் இருந்தது தெரியவந்தது. வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்ப … Continue reading போலி வாக்காளர் அட்டை பறிமுதல்! ஒத்திவைக்கப்படும் கர்நாடக தேர்தல்?

கர்நாடக தேர்தல் பிரச்சாரம் இன்றே கடைசி நாள்?

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம், இன்று மாலை நிறைவடைகிறது. கர்நாடகவில் உள்ள, 224 தொகுதிகளுக்கு மே 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பெங்களூரு, ஜெயநகர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் விஜயகுமார், 59, பிரசாரத்தின்போது, மயங்கி விழுந்து, மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால், இந்த தொகுதியில் மட்டும், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மற்ற, 223 தொகுதிகளிலும், மொத்தம், 2,654 வேட்பாளர்கள், தேர்தல் களத்தில் உள்ளனர்.தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கிய வேளையில், பிரதமர் நரேந்திர … Continue reading கர்நாடக தேர்தல் பிரச்சாரம் இன்றே கடைசி நாள்?

மோடியின் பேச்சுக்களால் மக்களுக்கு சோறு கிடைக்காது: சோனியா பேச்சு.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சார களத்தில் இறங்கிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நேற்று பீஜப்பூரில் நடந்த பிரச்சாரத்தின் போது "பிரதமர் மோடியின் பேச்சுக்களால் மட்டும் நாட்டு மக்களின் பசி தீர்ந்து விடாது" என்றார். ஆளும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவும் கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்குபெற்றார். 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிரச்சார மேடையில் இறங்கிய சோனியா, … Continue reading மோடியின் பேச்சுக்களால் மக்களுக்கு சோறு கிடைக்காது: சோனியா பேச்சு.

பற்றவைத்த பாகிஸ்தான்? மோதிக்கொள்ளும் பாஜக-காங்!

கர்நாடகத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளநிலையில், திப்பு சுல்தானைப் புகழ்ந்து பாகிஸ்தான் அரசு செய்துள்ள ட்வீட்டால், காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் கடுமையாக கருத்து மோதல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுநாள் வரை திப்புசுல்தானைப் புகழ்ந்து ட்வீட் செய்யாத பாகிஸ்தான், திடீரென கர்நாடகத் தேர்தலை கணக்கில் கொண்டு ட்வீட் செய்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னன் திப்புசுல்தான். அவரின் 218-வது நினைவுநாள் இம்மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக பாகிஸ்தான் அரசு திப்புசுல்தானைப் புகழ்ந்து தனது அதிகாரப்பூர்வ … Continue reading பற்றவைத்த பாகிஸ்தான்? மோதிக்கொள்ளும் பாஜக-காங்!

கனவாகும் காவிரி வாரியம்?

அண்மையில் காவிரி உரிமை போராட்டங்களில் “ஸ்கீம்“ என்ற ஒரு வார்த்தை ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆவேசத்தையும் மத்திய அரசுக்கு எதிராகக் கிளறிவிட்டது. உச்சநீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடுவின் இறுதியில் “ஸ்கீம்“ என்பதை விளக்குமாறு மத்திய அரசு மனு அளித்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து தமிழகம் கொதிநிலையை அடைந்தது. கர்நாடக மாநில தேர்தல்களை மனதில் வைத்து மத்திய அரசு செய்யும் காலம் தாழ்த்தும் நாடகம் என்று இது சரியாகவே புரிந்துகொள்ளப்பட்டது என்றாலும், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவின் உள்ளடக்கம் … Continue reading கனவாகும் காவிரி வாரியம்?

பாஜக மீது சரமாரி புகார் வாசித்த கர்நாடக முதல்வர் வேட்பாளர்!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் நெருங்குவதால் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. தேசிய கட்சிகளின் தலைவர்கள் கர்நாடகத்தில் முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் முதல்- மந்திரி சித்தராமையா பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது அடுக்கடுக் கான குற்றச்சாட்டுகளை நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பட்டியலிட்டு உள்ளார். இந்த தேர்தலிலும் … Continue reading பாஜக மீது சரமாரி புகார் வாசித்த கர்நாடக முதல்வர் வேட்பாளர்!

கர்நாடக தேர்தலுக்காக தயாராகிறது காங்கிரஸின் தேர்தல் அறிக்கை.

கர்நாடகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி ‌தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவையின் 225 உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வரும் மே 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று வெளியிட்டார். கர்நாடக மக்களின் குரலாக இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய ராகுல்காந்தி, … Continue reading கர்நாடக தேர்தலுக்காக தயாராகிறது காங்கிரஸின் தேர்தல் அறிக்கை.

கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் வெற்றி யாருக்கு?

#KarnatakaElections2018 #INC4Karnataka #BJP4Karnataka #JDS4Karnataka பெல்லாரி நகரம் சட்டமன்ற தொகுதி பெல்லாரி நகரம் சட்டமன்ற தொகுதியில் இளைஞர்களின் ஆதரவு பாஜகவுக்கு பெரும்பான்மையாக இருக்கிறது. இத்தொகுதியில் முக்கிய மற்றும் பிரபலமான நபராக பார்க்கப்படுபவர் ஸ்ரீராமுலு. அவர் கடந்த 2011ம் ஆண்டு தனது தலைவர்களில் ஒருவரான ஜி.ஜனார்த்தன ரெட்டியை அன்றைய பாஜக அரசு சிறையிலடைத்ததை கண்டித்து, பாஜகவில் இருந்து பிரிந்து செயல்பட்டார். இதனால் 2013ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி பிளவுப்பட்டு, காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய … Continue reading கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் வெற்றி யாருக்கு?