இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி தூக்குவார் என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதைத் தொடங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கருணாநிதி மறைந்த 7-ஆவது நாளிலேயே அழகிரி தனது எதிர்ப்பை ஆரம்பித்திருக்கிறார். ஸ்டாலின் கலக்கம்? ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம்' தொடங்கியது போன்று, அழகிரியும் இப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் தனது பாணி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் உள்ளனர். என் … Continue reading இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!

இன்று கூடுகிறது “பார்லி மழைக்கால கூட்டத்தொடர்” ! முழங்குமா? முடங்குமா?

'பார்லி.,யில் மழைக்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று(ஜூலை 18) துவங்குகிறது. இதை முன்னிட்டு, அனைத்துக் கட்சி கூட்டம், நேற்று நடந்தது. இதைஅடுத்து நிருபர்களிடம் பேசிய, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது: இரு அவைகளிலும் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்க, அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் குறித்து பேச வேண்டும். பார்லி., கூட்டத்தொடரை மக்கள் … Continue reading இன்று கூடுகிறது “பார்லி மழைக்கால கூட்டத்தொடர்” ! முழங்குமா? முடங்குமா?

திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும்? கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி!

“ஆரம்பத்தில் ஐ.ஐ.டி. வளாகத்தில் வாக்கிங் போவதை வழக்கமாக வைத்திருந்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். கடந்த சில மாதங்களாகவே அவரது வாக்கிங் ஸ்பாட் அடையாறில் உள்ள The Theosophical Society கேம்பஸுக்கு மாறிவிட்டது. அடையாறு ஆலமரம் இருக்கக்கூடிய பகுதி இது. இங்கே உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே கேம்பஸுக்குள் நுழைய முடியும். சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் பசுமை சூழ இருக்கும். இந்த வளாகத்தில்தான் வாக்கிங் போகிறார் ஸ்டாலின். டிடிவி தினகரன் வீட்டிலிருந்து இந்த கேம்பஸ் … Continue reading திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும்? கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி!

மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை எதிர்த்து, வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்குப் பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர். இறுதியில் … Continue reading மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

காஷ்மீரத்தில் பாஜகவின் ஆட்சி? திருப்புமுனை!

காஷ்மீரில் மெகபூபா முஃப்தி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தனது ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்ததால், ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்து ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், யாரும் ஆட்சி அமைக்க முன்வராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்த நிலையில் 3 பிடிபி எம்.எல்.ஏ.க்கள் மெஹபூபா முப்ஃதிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். கட்சியில் இருந்து விலகுவதாக 3 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்துள்ளனர். மெஹபூபாவின் … Continue reading காஷ்மீரத்தில் பாஜகவின் ஆட்சி? திருப்புமுனை!

“காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது தவறு என்று கர்நாடக நீா்வளத் துறை அமைச்சா் டி.கே.சிவக்குமார், சனிக்கிழமை தெரிவித்தார். பெங்களூரு, விதான சௌதாவில் காவிரி தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காவிரி தொடா்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் கா்நாடகத்துக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் ஆராயப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பால் சிலவற்றில் கா்நாடகத்துக்கு … Continue reading “காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

மீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” ? விடுதலையாவாளா “காவிரித்தாய்?

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர்ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரச சார்பில் இன்று நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்சத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவில் தங்களிடம் ஆலோசிக்காமல் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட உள்ளது. தவறவிடாதீர் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.71 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி … Continue reading மீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” ? விடுதலையாவாளா “காவிரித்தாய்?

பசுமைவழி சாலைக்கு எதிர்ப்பு? தீக்குளிக்க முயற்சித்த விவசாயிகள்!

சேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40 ஆயிரம் வீடுகள், 8 மலைகளும் உடைக்கப்பட உள்ளது. சாலை அமைப்பதற்கான நில அளவீடு பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன் … Continue reading பசுமைவழி சாலைக்கு எதிர்ப்பு? தீக்குளிக்க முயற்சித்த விவசாயிகள்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு? விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து வரும் 25-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையின்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. மேலும், ஆலைக்கான மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர உருக்குப் பிரிவு அருகேயுள்ள கந்தக அமிலம் சேமிப்பு டேங்கில் கசிவு இருப்பது போலீஸ் ரோந்துப் பணியின்போது கண்டறியப்பட்டது. கந்தக அமிலம் முழுவதையும் அகற்றும் பணி … Continue reading ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு? விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

ஜம்மு-காஷ்மீர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த “ஆளுநரின் தொலைபேசி அழைப்பு!

மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி-பாஜக கூட்டணி அரசின் ஆட்சியானது, ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என். வோராவின் தொலைபேசி அழைப்பு மூலம் முடிவுக்கு வந்திருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அதிகாரிகள் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீர் தலைமை செயலகத்தில் மெஹபூபா முஃப்தி தனது வழக்கமான பணிகளில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது தலைமை செயலர் பி.பி. வியாசுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆளுநர் வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி எங்குள்ளார்? அவருடன் … Continue reading ஜம்மு-காஷ்மீர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த “ஆளுநரின் தொலைபேசி அழைப்பு!

“தமிழக போலீசார்” தேடிவரும் குற்றவாளி, “தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், தமிழக காவல்துறை, எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் கூறியது. ஆனால், போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகரோ, மத்திய மாநில அமைச்சர்களுடனும், கோவில் குளங்களுக்கும் போலீசார் துணையுடன் சென்று வருகிறார். இது பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களிடத்திலும் தமிழக காவல்துறைமீது கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில், பல மாவட்டங்களில் … Continue reading “தமிழக போலீசார்” தேடிவரும் குற்றவாளி, “தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?

தூத்துக்குடி கலவரம்! யாருடைய திட்டம்? உண்மை என்ன?

தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தது 11 பேர் மாநில போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பிறகு, அந்த ஆலையின் தினமும் 1,200 டன் உற்பத்திக்கான சர்ச்சைக்குரிய விரிவாக்கத்திற்கு உயர் நீதிமன்றம் மே 23 தடை விதித்துள்ளது. ஆலை கட்டுவதற்கு முன்னர் அப்பகுதி மக்களை கலந்தாலோசிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவ்வாறு சட்டப்பூர்வமாக செய்ய வேண்டியதில்லை என அந்த நிறுவனம் கூறியது. பொதுமக்களை ஆலோசிக்காமல் ஸ்மெல்டரை விரிவாக்கம் செய்து உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க … Continue reading தூத்துக்குடி கலவரம்! யாருடைய திட்டம்? உண்மை என்ன?

ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்வாரா முதல்வர் ?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை இரவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து விளக்கம் அளித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. போராட்டத்தின் 100-வது நாளான நேற்றுமுன்தினம் (மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதில் போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. நேற்று 2-வது நாளாகவும் வன்முறை, துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 12 … Continue reading ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்வாரா முதல்வர் ?

மனிதம் தொலைத்த மனிதர்கள்? இன்றைய யுகத்தின் சாபக்கேடு!

சிவப்பு நிற டாட்டா இண்டிகா கார் கரப்பான் பூச்சியை கவிழ்த்து போட்டது போல் கவிழ்ந்து கிடக்கிறது. கவிழ்ப்பதற்கு முன்னர், ஆக்ரோஷமாக அடித்து நொறுக்கப்பட்டிருப்பது அந்த வீடியோவைப் பார்த்தாலே தெரிகிறது. அதன்பின்தான் காரை கவிழ்த்திருக்க வேண்டும். காருக்கு அருகிலேயே ஐந்து பேரின் ஆடைகள் கிழிக்கப்பட்டு, உதிரம் வலிய அமர்ந்திருக்க அவர்களை மனிதர்கள் கூட்டமாக காலால், கையால் புரட்டி அடித்தனர். அவர்களோ வலியில் துடிதுடித்தனர். கும்பலாக ஒரு சிலர் காரில் வந்தவர்களை அடித்துக்கொண்டிருக்க, அதை ஊர் திருவிழா போன்று வீட்டு … Continue reading மனிதம் தொலைத்த மனிதர்கள்? இன்றைய யுகத்தின் சாபக்கேடு!

இளையராஜா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பரிந்துரை! இயேசுநாதர் பற்றிய விமர்சனம் காரணமா?

இசையமைப்பாளர் இளையராஜா திடீரென இயேசு உயிர்த்தெழுதல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து, வழக்கறிஞர் ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில் இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார். இசை சம்பந்தமான தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா திடீரென இயேசு உயிர்த்தெழுதல் குறித்துப் பேசினார். இயேசு மறைந்தார், உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையில் கிறிஸ்தவ மதம் உள்ளது. ஆனால் உயிர்த்தெழுந்தார் என்பது உண்மையில்லை என்பதை ஆராய்ச்சி செய்து யூடியூபில் போடுகிறார்கள் என்று ஆவணப்படத்தை … Continue reading இளையராஜா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பரிந்துரை! இயேசுநாதர் பற்றிய விமர்சனம் காரணமா?

தேனி மதக்கலவரம்: தலித்தியம் பேசும் திருமா எங்கே? கொந்தளிக்கும் பாதிக்கப்பட்ட சமூகம்!

தேனியில் இரு சமூகத்தினரிடையே நடந்த மதக்கலவரம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதுபற்றி பெரிய பெரிய ஊடகங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் வாய் திறக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிவாங்கியவர்கள் இந்துக்கள் என்பதால் கலவரம் மறைக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் வள்ளியம்மாள் என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த 64 வயது பெண்மணி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மரணமடைந்தார். இறுதி ஊர்வலத்திற்காக அவரது உடல் கொண்டு செல்லப்படும் … Continue reading தேனி மதக்கலவரம்: தலித்தியம் பேசும் திருமா எங்கே? கொந்தளிக்கும் பாதிக்கப்பட்ட சமூகம்!

தர்மயுத்தம் 2.0 நடத்தப் (ஜெய்க்கப்) போவது யாரு?                 சிறப்புத் தொடர். பகுதி 1

சினிமாவுல ஒரு தடவை கிளைமேக்ஸ் வந்தால்தான் சுவாரஸ்யமா இருக்கும். ஆனால் சீனுக்கு சீன் கிளைமேக்ஸ் வைத்தால் அடிக்கடி பிரஷர் எகிறி பிராணனுக்கே பிரச்னை வந்துடாது? இப்படியொரு இக்கட்டான இம்சையில்தான் சிக்கித் தவிக்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். ‘ஓ.பி.எஸ். அணி’ என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டு அவரது பின்னால் நிற்பவர்கள், பன்னீரின் அரசியல் செல்வாக்கு சொந்த மாவட்டத்திலேயே ஆட்டம் காண துவங்கியிருப்பதால் மண்டை காய துவங்குகிறார்களாம். ஜெயலலிதாவுக்கு சிக்கல் வரும்போதெல்லாம் முதல்வராக்கப்பட்டார் பன்னீர்செல்வம். இதனால் ஜெ.வுக்கு அடுத்து, சசிக்கும் நடுவில் … Continue reading தர்மயுத்தம் 2.0 நடத்தப் (ஜெய்க்கப்) போவது யாரு?                 சிறப்புத் தொடர். பகுதி 1

தனியார் வெடிமருந்து ஆலைக்கு ஆதரவாக செயல்படும் DSP? காவல்துறையினர் தாக்கியதில் இளைஞர் படுகாயம்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே காவல்துறையினரால் விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்ட நபர் போலீசாரின் கடுமையான தாக்குதலின் விளைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் T.முருங்கபட்டி பகுதியில் இயங்கிவந்த தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த 2016 டிசம்பரில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 ஊழியர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இதையடுத்து அந்த வெடிமருந்து தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட 5 நபர்களைக் காவல்துறையினர் கைது செய்து தொழிற்சாலைக்கும் சீல் வைத்தனர்! மேலும் … Continue reading தனியார் வெடிமருந்து ஆலைக்கு ஆதரவாக செயல்படும் DSP? காவல்துறையினர் தாக்கியதில் இளைஞர் படுகாயம்!

இழுத்து மூடப்பட்ட அதானி மீதான ஊழல் விசாரணை?

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானதாக அறியப்படும் அதானி குழும நிறுவனங்கள் விலை மதிப்பை அதிகமாகக் காட்டி (ஓவர் இன்வாய்ஸ்) மின் உபகரணங்கள் இறக்குமதி செய்ததாக கூறப்படும் வழக்கின் பூர்வாங்க விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) தனது “அதிகார எல்லை வரம்புக்குள் வரவில்லை” என்ற சொதப்பலான ஒரு காரணத்தைச் சொல்லி இழுத்து மூடிவிட்டது. இதன் மூலம் இந்த விசாரணை குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் … Continue reading இழுத்து மூடப்பட்ட அதானி மீதான ஊழல் விசாரணை?

டெல்டா பகுதிகளில் CRPF படை குவிப்பு? பின்னனி?

தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் போலீஸ் படையினர் திடீரென குவிக்கப்பட்டுள்ளனர். ஹைட்ரோ கார்பன் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம்,புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மீத்தேன், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு போன்ற மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கு அங்குள்ள விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், துணை ராணுவம் என்று அழைக்கப்படும் மத்திய … Continue reading டெல்டா பகுதிகளில் CRPF படை குவிப்பு? பின்னனி?

“சிப்பாய் கலகம்” நிகழ்ந்த மண்ணில் தற்போது “சீப்பான கலகம்” நடக்கிறது- ராமதாஸ்

தமிழகத்தில் புரட்சி என்ற வார்த்தை படும் பாட்டைப் பார்த்தால் மன அழுத்தம் வெடித்துவிடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- நல்லவேளை.... சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ, வேலுப்பிள்ளை பிரபாகரன், ஸ்டாலின் ( இவர் ஜோசப் ஸ்டாலின்), ஜார்ஜ் வாஷிங்டன், மார்ட்டின் லூதர்கிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நெல்சன் மண்டேலா, யாசர் அராஃபத் போன்ற தலைவர்கள் இப்போது உயிருடன் இல்லை. அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்தில் புரட்சி என்ற வார்த்தை படும் … Continue reading “சிப்பாய் கலகம்” நிகழ்ந்த மண்ணில் தற்போது “சீப்பான கலகம்” நடக்கிறது- ராமதாஸ்