#ஸ்டெர்லைட் விவகாரம்! தமிழக அரசு மேல்முறையீடு?

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22-ந் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தேசிய பசுமை … Continue reading #ஸ்டெர்லைட் விவகாரம்! தமிழக அரசு மேல்முறையீடு?

அம்த்ஷா பேச்சுக்கு இலகணேசன் விளக்கம்? அதிமுகவை விமர்சித்து பேசவில்லை!

அதிமுக அரசை ஊழல் அரசு என அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 9-ம் தேதி சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் பாஜக ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், ''தமிழகத்தை நினைத்தால் எனக்கு வேதனையாக இருக்கிறது. மிகவும் ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கிறது. இந்த ஊழல்கள் அனைத்தும் … Continue reading அம்த்ஷா பேச்சுக்கு இலகணேசன் விளக்கம்? அதிமுகவை விமர்சித்து பேசவில்லை!

#காவிரி_விவகாரம்? முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை!

காவிரிப் படுகை நீர்த் தேக்கங்களில் நீர் மதிப்பீடு தொடர்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகள், அதற்காகப் பயன்பாட்டில் உள்ள சாதனங்கள் ஆகியவை குறித்த நிலவர அறிக்கையை தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களும் தாக்கல் செய்யுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுக்கான தலைவர்கள், உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை … Continue reading #காவிரி_விவகாரம்? முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை!

மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை எதிர்த்து, வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்குப் பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர். இறுதியில் … Continue reading மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை? பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு? ரவுடி என்கவ்ன்ட்டர்!

சென்னை கிண்டியில் போலீஸை வெட்டிய ரவுடியை போலீஸார் பிடிக்கச் சென்றபோது நடந்த மோதலில் கொல்லப்பட்டார். இதில் உதவி ஆய்வாளர் காயமடைந்தார். சென்னை பி.எம்.தர்கா பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். நேற்று பி.எம்.தர்காவில் ரவுடிகள் அட்டூழியம் செய்வதாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற காவலர் ராஜவேலுவை 10 பேர் கும்பல் சூழ்ந்து வெட்டியது. இதில் 16 இடங்களில் வெட்டுப்பட்ட ராஜவேலு ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் நேற்று காலை … Continue reading போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு? ரவுடி என்கவ்ன்ட்டர்!

காஷ்மீரத்தில் பாஜகவின் ஆட்சி? திருப்புமுனை!

காஷ்மீரில் மெகபூபா முஃப்தி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தனது ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்ததால், ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்து ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், யாரும் ஆட்சி அமைக்க முன்வராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்த நிலையில் 3 பிடிபி எம்.எல்.ஏ.க்கள் மெஹபூபா முப்ஃதிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். கட்சியில் இருந்து விலகுவதாக 3 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்துள்ளனர். மெஹபூபாவின் … Continue reading காஷ்மீரத்தில் பாஜகவின் ஆட்சி? திருப்புமுனை!

“காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது தவறு என்று கர்நாடக நீா்வளத் துறை அமைச்சா் டி.கே.சிவக்குமார், சனிக்கிழமை தெரிவித்தார். பெங்களூரு, விதான சௌதாவில் காவிரி தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காவிரி தொடா்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் கா்நாடகத்துக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் ஆராயப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பால் சிலவற்றில் கா்நாடகத்துக்கு … Continue reading “காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

சபாநாயகருடன் கடும் வாக்குவாதம்? துணை முதல்வர் செய்து வைத்த சமரசம்!

சட்டப் பேரவைத் தலைவா் தனபாலுடன், அமைச்சா் ஓ.எஸ்.மணியன் புதன்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலையீட்டால் சமாதானம் ஏற்பட்டது. சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், ஆளுநா் சுற்றுப்பயணம் குறித்து பேசுகையில், மாநில சுயாட்சி குறித்து பேசினாா். பின்னா் அது தொடா்பாக கைத்தறித்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பேசுகையில், ‘எதிா்கட்சித் தலைவா் மாநில சுயாட்சி குறித்து பேசினாா். அதுகுறித்து விளக்கம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்’ என்றாா். … Continue reading சபாநாயகருடன் கடும் வாக்குவாதம்? துணை முதல்வர் செய்து வைத்த சமரசம்!

பசுமைவழி சாலைக்கு எதிர்ப்பு? தீக்குளிக்க முயற்சித்த விவசாயிகள்!

சேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40 ஆயிரம் வீடுகள், 8 மலைகளும் உடைக்கப்பட உள்ளது. சாலை அமைப்பதற்கான நில அளவீடு பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன் … Continue reading பசுமைவழி சாலைக்கு எதிர்ப்பு? தீக்குளிக்க முயற்சித்த விவசாயிகள்!

சேலத்தில் தீவிரமாகும் போராட்டங்கள்! அரசிடம் மக்கள் எதிர்பார்க்கும் முடிவு என்ன?

நெடுவாசல் மீத்தேன் எதிர்ப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு, சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு எதிர்ப்பு என தொடர்ந்து மக்கள் போராட்டங்களால் தமிழக அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகளும்,உதிரிக்கட்சிகளும் தங்களது திட்டத்தை செயல்படுத்த அப்பாவி பாமர மக்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதே உண்மை.... ஆனால் போராட்டங்களை முன்னெடுத்துப் போராடும் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முயற்சிக்காமல், போராட்டங்களை பின்னிருந்து இயக்கும் சில அமைப்புகள்,மற்றும் கட்சிகளின் நிர்வாகிகளை அழைத்து சமாதானம் பேசிவரும் அரசு அதிகாரிகளின் வீண் முயற்சிகளால் போராட்டங்களை முடிவுக்கு … Continue reading சேலத்தில் தீவிரமாகும் போராட்டங்கள்! அரசிடம் மக்கள் எதிர்பார்க்கும் முடிவு என்ன?

ஜம்மு-காஷ்மீர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த “ஆளுநரின் தொலைபேசி அழைப்பு!

மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி-பாஜக கூட்டணி அரசின் ஆட்சியானது, ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என். வோராவின் தொலைபேசி அழைப்பு மூலம் முடிவுக்கு வந்திருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அதிகாரிகள் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீர் தலைமை செயலகத்தில் மெஹபூபா முஃப்தி தனது வழக்கமான பணிகளில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது தலைமை செயலர் பி.பி. வியாசுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆளுநர் வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி எங்குள்ளார்? அவருடன் … Continue reading ஜம்மு-காஷ்மீர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த “ஆளுநரின் தொலைபேசி அழைப்பு!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீவிரமாகும் “தமிழக அரசு!

புதுடெல்லி, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– 4–வது நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக நிறைய கோரிக்கைகள் வைத்திருக்கின்றோம். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர் மேலாண்மை பணிகளுக்கு முக்கியத்துவம் தருவது குறித்தும், தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்படும் குடிமராமத்து திட்டத்தைப் பற்றியும், விளக்கி மத்திய அரசிற்கு குறிப்பிட்டோம். அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய … Continue reading ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீவிரமாகும் “தமிழக அரசு!

பிரதமருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்! ஏன்? எதற்கு?

தமிழ்நாட்டு அரசின் பலத்த சட்டப்போராட்டம், தமிழக கட்சிகள், மக்களின் கடுமையான போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்து நேற்று (ஜூன் 1 ) அரசிதழில் வெளியிட்டது. இது தமிழகத்தின் காவிரி வரலாற்றில் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இது மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசிற்கும், தமிழ்நாட்டு … Continue reading பிரதமருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்! ஏன்? எதற்கு?

தூத்துக்குடி கலவரம்! யாருடைய திட்டம்? உண்மை என்ன?

தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தது 11 பேர் மாநில போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பிறகு, அந்த ஆலையின் தினமும் 1,200 டன் உற்பத்திக்கான சர்ச்சைக்குரிய விரிவாக்கத்திற்கு உயர் நீதிமன்றம் மே 23 தடை விதித்துள்ளது. ஆலை கட்டுவதற்கு முன்னர் அப்பகுதி மக்களை கலந்தாலோசிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவ்வாறு சட்டப்பூர்வமாக செய்ய வேண்டியதில்லை என அந்த நிறுவனம் கூறியது. பொதுமக்களை ஆலோசிக்காமல் ஸ்மெல்டரை விரிவாக்கம் செய்து உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க … Continue reading தூத்துக்குடி கலவரம்! யாருடைய திட்டம்? உண்மை என்ன?

ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்வாரா முதல்வர் ?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை இரவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து விளக்கம் அளித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. போராட்டத்தின் 100-வது நாளான நேற்றுமுன்தினம் (மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதில் போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. நேற்று 2-வது நாளாகவும் வன்முறை, துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 12 … Continue reading ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்வாரா முதல்வர் ?

S ve சேகரை விளாசிய நீதிபதி- முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

படுக்கையைப் பகிர்ந்தால் முன்னேற முடியும் என்று பதிவிடுவது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கும் பொருந்துமா? பணிக்கு செல்லும் பெண்கள் குறித்து இதைவிடக் கேவலமாகப் பதிவிட முடியாது என்று கடுமையாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதி முன் ஜாமீனை ரத்து செய்துள்ளார். எஸ்.வி சேகர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பிறப்பித்துள்ள விரிவான தீர்ப்பில், எஸ்.வி.சேகரின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளதுடன், சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். அவரது தீர்ப்பு முழு விபரம் வருமாறு: “ஒருவர் கோபமாக இருக்கும்போதோ … Continue reading S ve சேகரை விளாசிய நீதிபதி- முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

தேனி மதக்கலவரம்: தலித்தியம் பேசும் திருமா எங்கே? கொந்தளிக்கும் பாதிக்கப்பட்ட சமூகம்!

தேனியில் இரு சமூகத்தினரிடையே நடந்த மதக்கலவரம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதுபற்றி பெரிய பெரிய ஊடகங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் வாய் திறக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிவாங்கியவர்கள் இந்துக்கள் என்பதால் கலவரம் மறைக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் வள்ளியம்மாள் என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த 64 வயது பெண்மணி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மரணமடைந்தார். இறுதி ஊர்வலத்திற்காக அவரது உடல் கொண்டு செல்லப்படும் … Continue reading தேனி மதக்கலவரம்: தலித்தியம் பேசும் திருமா எங்கே? கொந்தளிக்கும் பாதிக்கப்பட்ட சமூகம்!