பாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி? அதிமுக தலைமை அதிர்ச்சி!

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தையொட்டி நடந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சிகளை சேர்ந்த பல எம்.பிக்கள் வாக்களிக்காத விவரம் தற்போது வெளியாகியுள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 4 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி ஸ்ரீநிவாஸ் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப் … Continue reading பாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி? அதிமுக தலைமை அதிர்ச்சி!

“ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்? மம்தா-சந்திரபாபு நாயுடு பேச்சு!

மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு எதிராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி குறிப்பிட்டார். ஜெயலலிதா இருந்திருந்தால் … Continue reading “ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்? மம்தா-சந்திரபாபு நாயுடு பேச்சு!

20,23 தேதிகளில் விவாதம்! பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதன்பின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலங்கு தேசம் கட்சியினர் பெரும் அமளியில் ஈடுபட்டு ஆளும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்தனர். ஆனால் அதை மக்களவை சபாநாயகர் ஏற்கவில்லை. இந்நிலையில், மழைக்காலக் கூட்டத்தொடரிலும் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை … Continue reading 20,23 தேதிகளில் விவாதம்! பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு!

அரசுக்கெதிராக “நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி கூறியுள்ளது. … Continue reading அரசுக்கெதிராக “நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

அசிங்கப்பட்டாரா ஆளவந்தான்? அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம்!

டெல்லியில் முகாமிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியிருந்தார். இதனை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக சோனியா காந்தியையும் சந்திக்க கமல்ஹாசன் அனுமதி கோரியிருந்தார். இதனை ஏற்று கமலை இன்று காலை பத்து மணிக்கு சந்திக்க சோனியா நேரம் ஒதுக்கியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை பத்து மணிக்கு தனது நண்பரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினருமான ஞானசம்பந்தம், பி.ஆர்.பி மாந்வி சர்மா உள்ளிட்டோருடன் கமல் டெல்லியில் உள்ள சோனியா … Continue reading அசிங்கப்பட்டாரா ஆளவந்தான்? அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம்!