#காவிரி_விவகாரம்? முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை!

காவிரிப் படுகை நீர்த் தேக்கங்களில் நீர் மதிப்பீடு தொடர்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகள், அதற்காகப் பயன்பாட்டில் உள்ள சாதனங்கள் ஆகியவை குறித்த நிலவர அறிக்கையை தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களும் தாக்கல் செய்யுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுக்கான தலைவர்கள், உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை … Continue reading #காவிரி_விவகாரம்? முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை!

Advertisements

காவிரி விவகாரம்-அனைத்துக்கட்சி கூட்டம்? தமிழக முதல்வர் விளக்கம்!

காவிரி விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப்பேரவை திங்கள்கிழமை தொடங்கியதும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசியது: காவிரி பிரச்னையில் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியன அமைக்கப்பட்டு அதில் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். … Continue reading காவிரி விவகாரம்-அனைத்துக்கட்சி கூட்டம்? தமிழக முதல்வர் விளக்கம்!

கூடுகிறது காவிரி ஆணையம்! கிடைக்குமா காவிரி?

சென்னை; காவிரி விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இரண்டு அமைப்புகளையும் மத்திய அரசு ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சார்பில் காவிரி உறுப்பினராக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநில அரசுகளும் தங்களது மாநில பிரதிநிதிகளை … Continue reading கூடுகிறது காவிரி ஆணையம்! கிடைக்குமா காவிரி?

“காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது தவறு என்று கர்நாடக நீா்வளத் துறை அமைச்சா் டி.கே.சிவக்குமார், சனிக்கிழமை தெரிவித்தார். பெங்களூரு, விதான சௌதாவில் காவிரி தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காவிரி தொடா்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் கா்நாடகத்துக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் ஆராயப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பால் சிலவற்றில் கா்நாடகத்துக்கு … Continue reading “காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

மீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” ? விடுதலையாவாளா “காவிரித்தாய்?

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர்ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரச சார்பில் இன்று நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்சத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவில் தங்களிடம் ஆலோசிக்காமல் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட உள்ளது. தவறவிடாதீர் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.71 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி … Continue reading மீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” ? விடுதலையாவாளா “காவிரித்தாய்?

அமைந்தது “காவிரி ஆணையம்” ! மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, உறுப்பினர்களையும் நியமித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 1ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனால் ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. ஆணையத்தின் தமிழக உறுப்பினருக்குப் பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பெயரை தமிழக அரசு பரிந்துரை … Continue reading அமைந்தது “காவிரி ஆணையம்” ! மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

பிரதமருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்! ஏன்? எதற்கு?

தமிழ்நாட்டு அரசின் பலத்த சட்டப்போராட்டம், தமிழக கட்சிகள், மக்களின் கடுமையான போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்து நேற்று (ஜூன் 1 ) அரசிதழில் வெளியிட்டது. இது தமிழகத்தின் காவிரி வரலாற்றில் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இது மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசிற்கும், தமிழ்நாட்டு … Continue reading பிரதமருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்! ஏன்? எதற்கு?

மும்முனைப் போட்டியில் கர்நாடக தேர்தல் களம்! யாருக்கு சாதகம்?

தொங்குச் சட்டமன்றம் அமையும் என்று முக்கால் சொச்சம் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், பிரச்சார மழை நேற்று (மே 10) முதல் கர்நாடகாவில் ஓய்ந்துள்ளது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் என்ற மூன்று பெரிய கட்சிகளின் மும்முனைப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பதை நாளைய தேர்தல்களம் தீர்மானிக்கப் போகிறது. வரும் மே மாதத்தோடு கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவடைகிறது என்றபோதும், மார்ச் மாதம் வரை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதைப் பற்றி … Continue reading மும்முனைப் போட்டியில் கர்நாடக தேர்தல் களம்! யாருக்கு சாதகம்?

திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள்!

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் தமிழகத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதி மன்றம் கொடுத்த 6 வார கெடு மார்ச் 29ம் தேதி முடிவடைந்தும், மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ‘ஸ்கீம்’ குறித்து விளக்கம் கேட்டு மனு செய்தது. மே 3ம் தேதி வரை காலக்கெடு அளித்தது உச்சநீதிமன்றம். அதன் பிறகு, மீண்டும் மத்திய அரசு அவகாசம் கேட்டதால், … Continue reading திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள்!

தமிழகத்தை திட்டமிட்டே அவமதிக்கும் மத்திய அரசு! பதிலடி கொடுக்குமா தமிழக அரசு?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி பார்க்க மறுத்துள்ளது தமிழ்நாட்டிற்கான அவமானமாகவே பார்க்க வேண்டியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில், தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் அறிவித்தனர். அத்துடன் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த புதிய திட்டத்தை (ஸ்கீம்) வகுக்கும்படி மத்திய … Continue reading தமிழகத்தை திட்டமிட்டே அவமதிக்கும் மத்திய அரசு! பதிலடி கொடுக்குமா தமிழக அரசு?

கனவாகும் காவிரி வாரியம்?

அண்மையில் காவிரி உரிமை போராட்டங்களில் “ஸ்கீம்“ என்ற ஒரு வார்த்தை ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆவேசத்தையும் மத்திய அரசுக்கு எதிராகக் கிளறிவிட்டது. உச்சநீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடுவின் இறுதியில் “ஸ்கீம்“ என்பதை விளக்குமாறு மத்திய அரசு மனு அளித்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து தமிழகம் கொதிநிலையை அடைந்தது. கர்நாடக மாநில தேர்தல்களை மனதில் வைத்து மத்திய அரசு செய்யும் காலம் தாழ்த்தும் நாடகம் என்று இது சரியாகவே புரிந்துகொள்ளப்பட்டது என்றாலும், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவின் உள்ளடக்கம் … Continue reading கனவாகும் காவிரி வாரியம்?

துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினாலும் மே 10 ல் போராடுவோம்!

சென்னை: தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார். மே 10-ம் தேதி முதல் மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடந்தே தீரும் என்றும் அய்யாக்கண்ணு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, சென்னை மெரினாவில் அய்யாக்கண்ணுவுக்கு ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க தனி நீதிபதி அளித்த அனுமதிக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் ஈரோட்டில் … Continue reading துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினாலும் மே 10 ல் போராடுவோம்!

காவிரி மட்டுமல்ல! பலவற்றிலும் தமிழகத்திற்கு “திமுக” துரோகம் இழைத்தே வந்துள்ளது.

காவிரியில் தமிழக உரிமையை தாரை வார்த்து கொடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்று முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் திருவாரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பேசினார்.  அப்போது, காவிரி ஆற்றில் கர்நாடகா பல்வேறு அணைகளை கட்டியபோது கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காவிரி உரிமையை தாரை வார்த்து கொடுத்தவர் கருணாநிதி என்று குற்றம்சாட்டினார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் … Continue reading காவிரி மட்டுமல்ல! பலவற்றிலும் தமிழகத்திற்கு “திமுக” துரோகம் இழைத்தே வந்துள்ளது.

காவிரி! அறிக்கை தாக்கல் செய்கிறது மத்திய அரசு?

புதுடெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் வரைவு செயல் திட்டத்துக்கு பதிலாக, அதற்காக இதுவரை எடுக்கப்பட்ட  நடவடிக்கைகளின் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில்,  மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மே 3ம் தேதிக்குள் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.  மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் அவகாசம் வழங்கியும் அதை செயல்படுத்தாமல், கடைசி … Continue reading காவிரி! அறிக்கை தாக்கல் செய்கிறது மத்திய அரசு?

முக ஸ்டாலினை சந்திக்கும் சந்திரசேகர ராவ்! காவிரி விவகாரத்தில் பாஜக, காங் நாடகம்?

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை குறைத்து கடந்த பிப்ரவரி மாதம் 16–ந் தேதி தீர்ப்பு வழங்கியது. அத்துடன், நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்‘ (செயல்திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் … Continue reading முக ஸ்டாலினை சந்திக்கும் சந்திரசேகர ராவ்! காவிரி விவகாரத்தில் பாஜக, காங் நாடகம்?