அரசுக்கெதிராக “நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி கூறியுள்ளது. … Continue reading அரசுக்கெதிராக “நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

“பெளத்த” மதத்தைத் தழுவிய குஜராத் மக்கள்!

குஜராத் மாநிலம், உனா பகுதியில் பசு பாதுகாவலர்களால் கடுமையாகத் தாக்குதலுக்குள்ளான தலித் குடும்பத்தினர் உள்பட 450 பேர் புத்த மதத்தை ஞாயிற்றுக்கிழமை தழுவினர். மதரீதியாகவும், ஜாதிரீதியாகவும் தாங்கள் பாகுபடுத்தப்படுவதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். குஜராத்தின் உனா பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இறந்த பசுவின் தோலை உரித்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை பசு பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் கட்டி வைத்து கடுமையாக அடித்தனர். மேலும், … Continue reading “பெளத்த” மதத்தைத் தழுவிய குஜராத் மக்கள்!