அரசுக்கெதிராக “நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி கூறியுள்ளது. … Continue reading அரசுக்கெதிராக “நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

ஜெயலலிதாவை கொடுமைப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி? நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி?

தூத்துக்குடியில் 7.9.17 அன்று அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார் மகள் டாக்டர் ஜெயலலிதா திருமண நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நாலாட்டின்புதூர் ராமகிருஷ்ணன்- சண்முகத்தாய் தம்பதியினரின் மகனும், கோட்டயம் எஸ்பியுமான கருப்பசாமி ஐ.பி.எஸ் தான் ஆறுமுகநயினார் மருமகன்.. அதிமுக பிரமுகர் ஆறுமுகநயினார், தன் மகளுக்கு பேச்சியம்மாள் என்றுதான் பெயர் வைத்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் விசுவாசம் இருப்பது போல் காட்டி, பதவிகள் பெறுவதற்காக தன் மகள் … Continue reading ஜெயலலிதாவை கொடுமைப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி? நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி?

5″ பாதிரியார்கள் இடைநீக்கம்?

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த ஒரு பெண், மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபையை சேர்ந்த ஒரு தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்கச்சென்று, 8 பாதிரியார்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாய் ஆவார். அவர், தனது திருமணத்துக்கு முன்பே, தனது திருச்சபையை சேர்ந்த ஒரு பாதிரியாருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பாவ மன்னிப்பு கேட்டார். அவருக்கு பாவ மன்னிப்பு வழங்கிய … Continue reading 5″ பாதிரியார்கள் இடைநீக்கம்?

முன்னாள் முதல்வரின் மரண மர்மம்! சிக்குகிறாரா சசிகலா?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த 9 மாதங்களாக விசாரித்து வருகிறது. ஆணையத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் நேரடியாக வாக்குமூலமும் அளித்து உள்ளார். இதில் , 2016 செப்டம்பர் 22ம் தேதி அன்று போயஸ்கார்டனில் நடந்த சம்பவங்கள் குறித்து இருவரும் அளித்த தகவலில் பல முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. செப்டம்பர் 22ம் தேதியன்று இரவு 7 மணியளவில் தன்னை சசிகலா … Continue reading முன்னாள் முதல்வரின் மரண மர்மம்! சிக்குகிறாரா சசிகலா?

“தமிழக போலீசார்” தேடிவரும் குற்றவாளி, “தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், தமிழக காவல்துறை, எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் கூறியது. ஆனால், போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகரோ, மத்திய மாநில அமைச்சர்களுடனும், கோவில் குளங்களுக்கும் போலீசார் துணையுடன் சென்று வருகிறார். இது பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களிடத்திலும் தமிழக காவல்துறைமீது கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில், பல மாவட்டங்களில் … Continue reading “தமிழக போலீசார்” தேடிவரும் குற்றவாளி, “தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?

பதஞ்சலியின் உலகளாவிய திருட்டு! தோலுரித்து காட்டிய சவுக்கு

இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும். ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர். ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர். ஒருவர் ஜக்கி வாசுதேவ். மற்றொருவர் பாபா ராம்தேவ். … Continue reading பதஞ்சலியின் உலகளாவிய திருட்டு! தோலுரித்து காட்டிய சவுக்கு

மனிதம் தொலைத்த மனிதர்கள்? இன்றைய யுகத்தின் சாபக்கேடு!

சிவப்பு நிற டாட்டா இண்டிகா கார் கரப்பான் பூச்சியை கவிழ்த்து போட்டது போல் கவிழ்ந்து கிடக்கிறது. கவிழ்ப்பதற்கு முன்னர், ஆக்ரோஷமாக அடித்து நொறுக்கப்பட்டிருப்பது அந்த வீடியோவைப் பார்த்தாலே தெரிகிறது. அதன்பின்தான் காரை கவிழ்த்திருக்க வேண்டும். காருக்கு அருகிலேயே ஐந்து பேரின் ஆடைகள் கிழிக்கப்பட்டு, உதிரம் வலிய அமர்ந்திருக்க அவர்களை மனிதர்கள் கூட்டமாக காலால், கையால் புரட்டி அடித்தனர். அவர்களோ வலியில் துடிதுடித்தனர். கும்பலாக ஒரு சிலர் காரில் வந்தவர்களை அடித்துக்கொண்டிருக்க, அதை ஊர் திருவிழா போன்று வீட்டு … Continue reading மனிதம் தொலைத்த மனிதர்கள்? இன்றைய யுகத்தின் சாபக்கேடு!

S ve சேகரை விளாசிய நீதிபதி- முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

படுக்கையைப் பகிர்ந்தால் முன்னேற முடியும் என்று பதிவிடுவது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கும் பொருந்துமா? பணிக்கு செல்லும் பெண்கள் குறித்து இதைவிடக் கேவலமாகப் பதிவிட முடியாது என்று கடுமையாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதி முன் ஜாமீனை ரத்து செய்துள்ளார். எஸ்.வி சேகர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பிறப்பித்துள்ள விரிவான தீர்ப்பில், எஸ்.வி.சேகரின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளதுடன், சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். அவரது தீர்ப்பு முழு விபரம் வருமாறு: “ஒருவர் கோபமாக இருக்கும்போதோ … Continue reading S ve சேகரை விளாசிய நீதிபதி- முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

Sve சேகரை கைது செய்ய தாமதிப்பதேன்? உயர்நீதிமன்றம் கண்டனம்!

மே 3 பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி. சேகருக்கு எதிரான வழக்கில் பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் கேள்வி எழுப்பினார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலை நியாயப்படுத்தி, நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் … Continue reading Sve சேகரை கைது செய்ய தாமதிப்பதேன்? உயர்நீதிமன்றம் கண்டனம்!

மணல் கடத்தல்? அதிகாரிகளைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த வேடியம்மாள் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், மணல் கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டதாக கூறி எனது கணவர் பாபுவை காவல்துறை கைது செய்தனர். பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். எனது … Continue reading மணல் கடத்தல்? அதிகாரிகளைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

தனியார் வெடிமருந்து ஆலைக்கு ஆதரவாக செயல்படும் DSP? காவல்துறையினர் தாக்கியதில் இளைஞர் படுகாயம்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே காவல்துறையினரால் விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்ட நபர் போலீசாரின் கடுமையான தாக்குதலின் விளைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் T.முருங்கபட்டி பகுதியில் இயங்கிவந்த தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த 2016 டிசம்பரில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 ஊழியர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இதையடுத்து அந்த வெடிமருந்து தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட 5 நபர்களைக் காவல்துறையினர் கைது செய்து தொழிற்சாலைக்கும் சீல் வைத்தனர்! மேலும் … Continue reading தனியார் வெடிமருந்து ஆலைக்கு ஆதரவாக செயல்படும் DSP? காவல்துறையினர் தாக்கியதில் இளைஞர் படுகாயம்!

இழுத்து மூடப்பட்ட அதானி மீதான ஊழல் விசாரணை?

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானதாக அறியப்படும் அதானி குழும நிறுவனங்கள் விலை மதிப்பை அதிகமாகக் காட்டி (ஓவர் இன்வாய்ஸ்) மின் உபகரணங்கள் இறக்குமதி செய்ததாக கூறப்படும் வழக்கின் பூர்வாங்க விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) தனது “அதிகார எல்லை வரம்புக்குள் வரவில்லை” என்ற சொதப்பலான ஒரு காரணத்தைச் சொல்லி இழுத்து மூடிவிட்டது. இதன் மூலம் இந்த விசாரணை குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் … Continue reading இழுத்து மூடப்பட்ட அதானி மீதான ஊழல் விசாரணை?

YouTube மூலம் பயிற்சியெடுத்து திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள்!

சென்னையில் செல்போனை பறிப்பது எப்படி? என இணையதளத்தை பார்த்து பயிற்சி எடுத்து ‘பிரஸ்’ ஸ்டிக்கர் ஒட்டிய மோட்டார் சைக்கிளில் வந்து செல்போனைப் பறிக்க முயன்ற இளைஞர்கள் சிக்கினர். சென்னையை அடுத்த திருவொற்றியூர் கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (37). இவருடைய மனைவி காமாட்சி (32). இவர்களது உறவினர் இல்லத் திருமணம் பக்கத்தில் உள்ள காலடிப்பேட்டையில் நேற்று நடந்தது. இதில் நடராஜன் கலந்துகொள்ளாததால அவர் மனைவி காமாட்சி மட்டும் திருமணத்திற்குச் சென்றிருந்தார். திருமணம் முடிந்த பின்னர் மதியம் தனது … Continue reading YouTube மூலம் பயிற்சியெடுத்து திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள்!

மன்சூர் அலிகான் மிரட்டல்! பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு

சேலத்தில் எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசினார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் நடைபெற்ற காவிரி போராட்டத்தின்போது, இரவு கைது செய்யப்பட்டவர்களை சந்திக்க சென்ற போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, சமீபத்தில்தான் ஜாமினில் வெளி வந்துள்ள மன்சூர் அலிகான், தற்போது சேலத்தில், 8 பேரை வெட்டுவேன் என்று கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். பொதுமக்களுக்கு ஆதரவாக … Continue reading மன்சூர் அலிகான் மிரட்டல்! பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு

வேலியே பயிரை மேய்ந்த அவலம்! தலைமைக் காவலரின் “காம லீலை”

நெல்லை காவலர் காம களியாட்டம்? புகாரளிக்க வரும் பெண்களை மிரட்டிப் பணிய வைத்த அவலம்! நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் நடராஜன்! இவர் மீது தற்போது பாலியல் புகார் எழுந்துள்ளது. காவல் நிலையத்தில் புகாரளிக்க வரும் பெண்களிடம், அவர்களின் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு வெகுமானமாக புகாரளித்த பெண்களின் கற்பை கேட்டு விலைபேசி வம்பில் சிக்கியுள்ளார் நெல்லை, பாவூர்சத்திரம் காவல்நிலைய தலைமைக் காவலர் நடராஜன். புகாரளிக்க வரும் பெண்களின் … Continue reading வேலியே பயிரை மேய்ந்த அவலம்! தலைமைக் காவலரின் “காம லீலை”