கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகள் திடீர் நிறுத்தம்! மறு உத்தரவு விரைவில் வெளியாகும் – கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம்!

கூட்டுறவுச் சங்க தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 18,775 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி தலைவர், துணை தலைவர் மற்றும் இயக்குனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சங்கங்கள் தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றுவது, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கண்ட நிர்வாகிகள் கவனிப்பார்கள். 2013ல் … Continue reading கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகள் திடீர் நிறுத்தம்! மறு உத்தரவு விரைவில் வெளியாகும் – கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம்!

கூட்டுறவு சங்க தேர்தல் – தற்போதைய நிலையே நீடிக்கும்! உயர்நீதிமன்றம்!

சென்னை : கூட்டுறவு சங்க தேர்தலில் அரசியல்வாதிகளின் சொல்படி ஆடிய அதிகாரிகள் சிக்குகின்றனர். இத்தேர்தலில் முறைகேடு செய்தோருக்கு 'ஆப்பு' வைக்கும் விதத்தில் கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்துவதில் ஒருதலைபட்சமாக செயல்பட்டோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக போட்டியிட்டவர்கள் குற்றம் சாட்டினர். 'வேட்புமனுக்கள் நிராகரிப்பு; வேட்புமனுக்களை ஏற்க மறுப்பு; முறையில்லாமல் தேர்தல் நடப்பது; தேர்தல் அதிகாரிகளின் துணையுடன் … Continue reading கூட்டுறவு சங்க தேர்தல் – தற்போதைய நிலையே நீடிக்கும்! உயர்நீதிமன்றம்!