18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை என்றும் சபாநாயகர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே தகுதிநீக்கம் செய்தார் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது. 18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கு, மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு மூன்றாவது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்ஏ-க்கள் தரப்பிலான வாதம் கடந்த 2 நாட்களில் முடிவடைந்த நிலையில், நேற்று சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலர் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார். … Continue reading 18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

பரப்பன அக்ரகாரா மாறியது “குடும்ப ஆலோசனை மையமாக” !

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் சசிகலா, சிறையைக் குடும்ப சமரச மையமாக மாற்றிவருவதாகச் சொல்கிறார்கள் சிறை வட்டாரத்தினர். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகர் மூவரும் கடந்த 14 மாதங்களாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர். சசிகலா சிறையிலிருந்தாலும் நாள்தோறும் குடும்பப் பஞ்சாயத்தில் சிக்கித் தவித்துவருகிறார் . ஆனால், வெளியில் உள்ள சசிகலா குடும்பத்தார் அரசியல் அதிகாரப் பதவியை கைப்பற்றவும் அளவில்லாத சொத்துகளைப் பங்குபோட்டுக்கொள்ளவும் … Continue reading பரப்பன அக்ரகாரா மாறியது “குடும்ப ஆலோசனை மையமாக” !

முன்னாள் முதல்வரின் மரண மர்மம்! சிக்குகிறாரா சசிகலா?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த 9 மாதங்களாக விசாரித்து வருகிறது. ஆணையத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் நேரடியாக வாக்குமூலமும் அளித்து உள்ளார். இதில் , 2016 செப்டம்பர் 22ம் தேதி அன்று போயஸ்கார்டனில் நடந்த சம்பவங்கள் குறித்து இருவரும் அளித்த தகவலில் பல முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. செப்டம்பர் 22ம் தேதியன்று இரவு 7 மணியளவில் தன்னை சசிகலா … Continue reading முன்னாள் முதல்வரின் மரண மர்மம்! சிக்குகிறாரா சசிகலா?

எனது பெயரைப் பயன்படுத்தக் கூடாது- சசிகலா அதிரடி! அதிர்ச்சியில் திவாகரன்

எனது பெயரையோ, புகைப்படத்தையோ திவகாரன் பயன்படுத்தக்கூடாது என்று சசிகலா தரப்பிடமிருந்து திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் திவாகரனுக்கு அனுப்பிய நோட்டீஸில் தெரிவித்துள்ளதாவது: ''தாங்கள் சசிகலாவின் உடன் பிறந்த சகோதரர். உங்கள் மீது சசிகலா அதிக பாசம் கொண்டவர் என்பது தாங்கள் அறிந்ததே. ஆனாலும், தங்களின் முரண்பட்ட செயல்பாடுகளும் வெளிப்பாடுகளும் சசிகலாவை கனத்த மனதுடன் இந்த அறிவிப்பை தங்களுக்கு அனுப்பும் சூழலுக்கு தள்ளியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை … Continue reading எனது பெயரைப் பயன்படுத்தக் கூடாது- சசிகலா அதிரடி! அதிர்ச்சியில் திவாகரன்

சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் – சசிகலா அதிரடி

“பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க திவாகரன், தினகரன் இருவரும் நேரம் கேட்டிருந்தார்கள். ஆனால், இருவரையும் இன்னும் சந்திக்காமல் தவிர்த்து வருகிறார் சசிகலா. ஆனால், எதிர்பாராமல் திடீரென இன்று பெங்களூரு புகழேந்தியை வர வழைத்துப் பேசியிருக்கிறார் சசிகலா. புகழேந்தியைப் பார்த்ததுமே தினகரன், திவாகரன் பிளவு தொடர்பாகத்தான் பேசியிருக்கிறார் சசிகலா. ‘வெளியில் என்னதான் நடந்துட்டு இருக்குது? என்னத்துக்காக இப்போ அவரு கட்சி ஆரம்பிச்சிருக்காரு? ஆரம்பத்துல இருந்தே தினகரனும் நான் சொன்னதை கேட்கல. இப்போ திவாகரனும் என்கிட்ட … Continue reading சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் – சசிகலா அதிரடி