2019 ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல்? மத்திய அரசு தீவிரம்!

'சட்டசபைகளுக்கும், லோக்சபாவிற்கும் வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்த, அரசிற்கு பெருந்தொகை செலவாவதால், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் கடந்த செவ்வாய்க்கிமை அன்று பேசிய போது ''இந்தியாவில் 29 மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலோடு ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தலையும் வைப்பதென்பது சாத்தியமில்லை. அரசியலமைப்பிலும் சட்டத் திருத்தம் கொண்டுவராமல் இதை நடத்த முடியாது'' … Continue reading 2019 ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல்? மத்திய அரசு தீவிரம்!

18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை என்றும் சபாநாயகர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே தகுதிநீக்கம் செய்தார் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது. 18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கு, மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு மூன்றாவது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்ஏ-க்கள் தரப்பிலான வாதம் கடந்த 2 நாட்களில் முடிவடைந்த நிலையில், நேற்று சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலர் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார். … Continue reading 18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் 3-ஆவது நீதிபதி விசாரணையில், "அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காததே எங்களது முதல் குற்றச்சாட்டு" என தினகரன் தரப்பு வாதம் வைத்தது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதியின் விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது. இந்த வழக்கு மீதான விசாரணை திங்கள்கிழமை முதல் வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறும் 3-ஆவது நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்தார். இதையடுத்து, முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது தகுதி … Continue reading உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

நல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்! ஆய்வு தகவல்!

இந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும் ஆய்வு மையம் ஆண்டு தோறும் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களின் பட்டியலை பப்ளிக் அஃபேர்ஸ் இன்டக்ஸ் எனும் ஆய்வறிக்கை மூலம் வெளியிடும். இந்த மையமானது மாநிலங்கள் முழுவதும் ஆய்வு நடத்தி அதனை சமூக வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் வரிசைபடுத்தி பட்டியலிடப்படும். அதுமட்டுமின்றி, 2 கோடி மக்கள் தொகைக்கு மேல் உள்ள … Continue reading நல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்! ஆய்வு தகவல்!

அம்த்ஷா பேச்சுக்கு இலகணேசன் விளக்கம்? அதிமுகவை விமர்சித்து பேசவில்லை!

அதிமுக அரசை ஊழல் அரசு என அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 9-ம் தேதி சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் பாஜக ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், ''தமிழகத்தை நினைத்தால் எனக்கு வேதனையாக இருக்கிறது. மிகவும் ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கிறது. இந்த ஊழல்கள் அனைத்தும் … Continue reading அம்த்ஷா பேச்சுக்கு இலகணேசன் விளக்கம்? அதிமுகவை விமர்சித்து பேசவில்லை!

ஒரே தேசம்–ஒரே தேர்தல்? இன்றும் தொடரும் ஆலோசனைக் கூட்டம்!

‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு யோசனை தெரிவித்து உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நிறைய செலவு மிச்சமாகும், காலவிரயமும் தவிர்க்கப்படும் என்றும், வளர்ச்சிப்பணிகளில் அரசு கவனம் செலுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பரிந்துரைத்துள்ள … Continue reading ஒரே தேசம்–ஒரே தேர்தல்? இன்றும் தொடரும் ஆலோசனைக் கூட்டம்!

2019 ல் பொதுத்தேர்தல்? #அதிமுக_எதிர்ப்பு!

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார். அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட … Continue reading 2019 ல் பொதுத்தேர்தல்? #அதிமுக_எதிர்ப்பு!

தமிழகத்தில் பொதுத்தேர்தல்-2019? மத்திய அரசு தீவிரம்!

பார்லி. லோக்சப, மாநில சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் குறித்து வரும் 7 தேதி முதல் அரசியல்கட்சிகளுடன் சட்ட கமிஷன் ஆலோசனை நடத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பார்லி. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் .ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் அதிக பண செலவு குறைக்கப்படும் என பிரதமர் மோடி யோசனை கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் வரவேற்பும் ஆதரவும் இருந்தது. இது குறித்த அறிக்கை … Continue reading தமிழகத்தில் பொதுத்தேர்தல்-2019? மத்திய அரசு தீவிரம்!

சபாநாயகருடன் கடும் வாக்குவாதம்? துணை முதல்வர் செய்து வைத்த சமரசம்!

சட்டப் பேரவைத் தலைவா் தனபாலுடன், அமைச்சா் ஓ.எஸ்.மணியன் புதன்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலையீட்டால் சமாதானம் ஏற்பட்டது. சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், ஆளுநா் சுற்றுப்பயணம் குறித்து பேசுகையில், மாநில சுயாட்சி குறித்து பேசினாா். பின்னா் அது தொடா்பாக கைத்தறித்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பேசுகையில், ‘எதிா்கட்சித் தலைவா் மாநில சுயாட்சி குறித்து பேசினாா். அதுகுறித்து விளக்கம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்’ என்றாா். … Continue reading சபாநாயகருடன் கடும் வாக்குவாதம்? துணை முதல்வர் செய்து வைத்த சமரசம்!

பெண்களுக்கு எதிரான வன்முறையில் தமிழகத்தின் நிலை? முதல்வர் விளக்கம்!

இந்தியாவிலேயே வன் குற்றங்களின் அடிப்படையில் தமிழகத்தின் நிலை என்ன என்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2018 - 19ம் ஆண்டுக்கான காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பின் தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அதில், 2016ஆம் ஆண்டைய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி, சொத்து சம்பந்தமான குற்றங்களில் நமது மாநிலத்தின் நிலை என்ன என்பதை இங்கு குறிப்பிட … Continue reading பெண்களுக்கு எதிரான வன்முறையில் தமிழகத்தின் நிலை? முதல்வர் விளக்கம்!

கநாடக ஆட்சி பொறுப்பை ஏற்கப் போவது யார்? உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

கர்நாடக அரசியலில் அதிரடியாக நடைபெற்று வரும் திருப்பங்கள் நேற்று (மே 16) இரவு முதல் விடிய விடிய பல்வேறு பரபரப்புக் காட்சிகளை பெங்களூருவிலும் டெல்லியிலும் அரங்கேற்றியுள்ளன. கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிகாலை கூறிவிட்டது. ஆனபோதும் காங்கிரஸ் மஜதவினரின் மனுவை தள்ளுபடி செய்ய வில்லை என்றும் இதை பின் விசாரிப்பதாகவும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். நேற்று இரவு பெங்களூருவில் தொடங்கி அதிகாலை உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த … Continue reading கநாடக ஆட்சி பொறுப்பை ஏற்கப் போவது யார்? உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

மும்முனைப் போட்டியில் கர்நாடக தேர்தல் களம்! யாருக்கு சாதகம்?

தொங்குச் சட்டமன்றம் அமையும் என்று முக்கால் சொச்சம் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், பிரச்சார மழை நேற்று (மே 10) முதல் கர்நாடகாவில் ஓய்ந்துள்ளது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் என்ற மூன்று பெரிய கட்சிகளின் மும்முனைப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பதை நாளைய தேர்தல்களம் தீர்மானிக்கப் போகிறது. வரும் மே மாதத்தோடு கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவடைகிறது என்றபோதும், மார்ச் மாதம் வரை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதைப் பற்றி … Continue reading மும்முனைப் போட்டியில் கர்நாடக தேர்தல் களம்! யாருக்கு சாதகம்?

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்? 16ம் தேதி டில்லியில் ஆலோசனை!

நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். தேர்தல் செலவுகளை பெரிய அளவில் குறைக்கும் நோக்கில் இந்த கருத்தை அவர் தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் நடவடிக்கையில் மத்திய சட்ட ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக சட்ட ஆணையம் அரசியல் சாசன நிபுணர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தலில் தொடர்பு கொண்டோரிடம் கருத்து கேட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் இது … Continue reading நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்? 16ம் தேதி டில்லியில் ஆலோசனை!