ஜெயலலிதாவை கொடுமைப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி? நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி?

தூத்துக்குடியில் 7.9.17 அன்று அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார் மகள் டாக்டர் ஜெயலலிதா திருமண நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நாலாட்டின்புதூர் ராமகிருஷ்ணன்- சண்முகத்தாய் தம்பதியினரின் மகனும், கோட்டயம் எஸ்பியுமான கருப்பசாமி ஐ.பி.எஸ் தான் ஆறுமுகநயினார் மருமகன்.. அதிமுக பிரமுகர் ஆறுமுகநயினார், தன் மகளுக்கு பேச்சியம்மாள் என்றுதான் பெயர் வைத்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் விசுவாசம் இருப்பது போல் காட்டி, பதவிகள் பெறுவதற்காக தன் மகள் … Continue reading ஜெயலலிதாவை கொடுமைப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி? நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி?

மனிதம் தொலைத்த மனிதர்கள்? இன்றைய யுகத்தின் சாபக்கேடு!

சிவப்பு நிற டாட்டா இண்டிகா கார் கரப்பான் பூச்சியை கவிழ்த்து போட்டது போல் கவிழ்ந்து கிடக்கிறது. கவிழ்ப்பதற்கு முன்னர், ஆக்ரோஷமாக அடித்து நொறுக்கப்பட்டிருப்பது அந்த வீடியோவைப் பார்த்தாலே தெரிகிறது. அதன்பின்தான் காரை கவிழ்த்திருக்க வேண்டும். காருக்கு அருகிலேயே ஐந்து பேரின் ஆடைகள் கிழிக்கப்பட்டு, உதிரம் வலிய அமர்ந்திருக்க அவர்களை மனிதர்கள் கூட்டமாக காலால், கையால் புரட்டி அடித்தனர். அவர்களோ வலியில் துடிதுடித்தனர். கும்பலாக ஒரு சிலர் காரில் வந்தவர்களை அடித்துக்கொண்டிருக்க, அதை ஊர் திருவிழா போன்று வீட்டு … Continue reading மனிதம் தொலைத்த மனிதர்கள்? இன்றைய யுகத்தின் சாபக்கேடு!

தேனி மதக்கலவரம்: தலித்தியம் பேசும் திருமா எங்கே? கொந்தளிக்கும் பாதிக்கப்பட்ட சமூகம்!

தேனியில் இரு சமூகத்தினரிடையே நடந்த மதக்கலவரம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதுபற்றி பெரிய பெரிய ஊடகங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் வாய் திறக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிவாங்கியவர்கள் இந்துக்கள் என்பதால் கலவரம் மறைக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் வள்ளியம்மாள் என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த 64 வயது பெண்மணி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மரணமடைந்தார். இறுதி ஊர்வலத்திற்காக அவரது உடல் கொண்டு செல்லப்படும் … Continue reading தேனி மதக்கலவரம்: தலித்தியம் பேசும் திருமா எங்கே? கொந்தளிக்கும் பாதிக்கப்பட்ட சமூகம்!

YouTube மூலம் பயிற்சியெடுத்து திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள்!

சென்னையில் செல்போனை பறிப்பது எப்படி? என இணையதளத்தை பார்த்து பயிற்சி எடுத்து ‘பிரஸ்’ ஸ்டிக்கர் ஒட்டிய மோட்டார் சைக்கிளில் வந்து செல்போனைப் பறிக்க முயன்ற இளைஞர்கள் சிக்கினர். சென்னையை அடுத்த திருவொற்றியூர் கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (37). இவருடைய மனைவி காமாட்சி (32). இவர்களது உறவினர் இல்லத் திருமணம் பக்கத்தில் உள்ள காலடிப்பேட்டையில் நேற்று நடந்தது. இதில் நடராஜன் கலந்துகொள்ளாததால அவர் மனைவி காமாட்சி மட்டும் திருமணத்திற்குச் சென்றிருந்தார். திருமணம் முடிந்த பின்னர் மதியம் தனது … Continue reading YouTube மூலம் பயிற்சியெடுத்து திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள்!

“பெளத்த” மதத்தைத் தழுவிய குஜராத் மக்கள்!

குஜராத் மாநிலம், உனா பகுதியில் பசு பாதுகாவலர்களால் கடுமையாகத் தாக்குதலுக்குள்ளான தலித் குடும்பத்தினர் உள்பட 450 பேர் புத்த மதத்தை ஞாயிற்றுக்கிழமை தழுவினர். மதரீதியாகவும், ஜாதிரீதியாகவும் தாங்கள் பாகுபடுத்தப்படுவதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். குஜராத்தின் உனா பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இறந்த பசுவின் தோலை உரித்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை பசு பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் கட்டி வைத்து கடுமையாக அடித்தனர். மேலும், … Continue reading “பெளத்த” மதத்தைத் தழுவிய குஜராத் மக்கள்!