அமமுகவில் தொடரும் பணிப்போர்! தொண்டர்களின் கோபக்கணையில் சிக்கிய ஜனா!

‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்னிச்சையாகக் கழகத்தைச் சார்ந்தவர் போல, விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்த தேனி கர்ணன் அவர்கள், தற்போது சமூக வலைதளங்களில் கழகத்திற்கு எதிரான விஷமத்தனமான செய்திகளைப் பரப்பி வருகிறார் எனத் தெரியவருகிறது. ஆகவே, கழகத் தோழர்கள் தேனி கர்ணனுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ -இப்படி ஒரு அறிவிப்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியாகியிருக்கிறது. தொலைக்காட்சி … Continue reading அமமுகவில் தொடரும் பணிப்போர்! தொண்டர்களின் கோபக்கணையில் சிக்கிய ஜனா!

திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும்? கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி!

“ஆரம்பத்தில் ஐ.ஐ.டி. வளாகத்தில் வாக்கிங் போவதை வழக்கமாக வைத்திருந்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். கடந்த சில மாதங்களாகவே அவரது வாக்கிங் ஸ்பாட் அடையாறில் உள்ள The Theosophical Society கேம்பஸுக்கு மாறிவிட்டது. அடையாறு ஆலமரம் இருக்கக்கூடிய பகுதி இது. இங்கே உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே கேம்பஸுக்குள் நுழைய முடியும். சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் பசுமை சூழ இருக்கும். இந்த வளாகத்தில்தான் வாக்கிங் போகிறார் ஸ்டாலின். டிடிவி தினகரன் வீட்டிலிருந்து இந்த கேம்பஸ் … Continue reading திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும்? கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி!

பரப்பன அக்ரகாரா மாறியது “குடும்ப ஆலோசனை மையமாக” !

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் சசிகலா, சிறையைக் குடும்ப சமரச மையமாக மாற்றிவருவதாகச் சொல்கிறார்கள் சிறை வட்டாரத்தினர். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகர் மூவரும் கடந்த 14 மாதங்களாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர். சசிகலா சிறையிலிருந்தாலும் நாள்தோறும் குடும்பப் பஞ்சாயத்தில் சிக்கித் தவித்துவருகிறார் . ஆனால், வெளியில் உள்ள சசிகலா குடும்பத்தார் அரசியல் அதிகாரப் பதவியை கைப்பற்றவும் அளவில்லாத சொத்துகளைப் பங்குபோட்டுக்கொள்ளவும் … Continue reading பரப்பன அக்ரகாரா மாறியது “குடும்ப ஆலோசனை மையமாக” !

எனது பெயரைப் பயன்படுத்தக் கூடாது- சசிகலா அதிரடி! அதிர்ச்சியில் திவாகரன்

எனது பெயரையோ, புகைப்படத்தையோ திவகாரன் பயன்படுத்தக்கூடாது என்று சசிகலா தரப்பிடமிருந்து திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் திவாகரனுக்கு அனுப்பிய நோட்டீஸில் தெரிவித்துள்ளதாவது: ''தாங்கள் சசிகலாவின் உடன் பிறந்த சகோதரர். உங்கள் மீது சசிகலா அதிக பாசம் கொண்டவர் என்பது தாங்கள் அறிந்ததே. ஆனாலும், தங்களின் முரண்பட்ட செயல்பாடுகளும் வெளிப்பாடுகளும் சசிகலாவை கனத்த மனதுடன் இந்த அறிவிப்பை தங்களுக்கு அனுப்பும் சூழலுக்கு தள்ளியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை … Continue reading எனது பெயரைப் பயன்படுத்தக் கூடாது- சசிகலா அதிரடி! அதிர்ச்சியில் திவாகரன்

சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் – சசிகலா அதிரடி

“பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க திவாகரன், தினகரன் இருவரும் நேரம் கேட்டிருந்தார்கள். ஆனால், இருவரையும் இன்னும் சந்திக்காமல் தவிர்த்து வருகிறார் சசிகலா. ஆனால், எதிர்பாராமல் திடீரென இன்று பெங்களூரு புகழேந்தியை வர வழைத்துப் பேசியிருக்கிறார் சசிகலா. புகழேந்தியைப் பார்த்ததுமே தினகரன், திவாகரன் பிளவு தொடர்பாகத்தான் பேசியிருக்கிறார் சசிகலா. ‘வெளியில் என்னதான் நடந்துட்டு இருக்குது? என்னத்துக்காக இப்போ அவரு கட்சி ஆரம்பிச்சிருக்காரு? ஆரம்பத்துல இருந்தே தினகரனும் நான் சொன்னதை கேட்கல. இப்போ திவாகரனும் என்கிட்ட … Continue reading சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் – சசிகலா அதிரடி