கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகள் திடீர் நிறுத்தம்! மறு உத்தரவு விரைவில் வெளியாகும் – கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம்!

கூட்டுறவுச் சங்க தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 18,775 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி தலைவர், துணை தலைவர் மற்றும் இயக்குனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சங்கங்கள் தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றுவது, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கண்ட நிர்வாகிகள் கவனிப்பார்கள். 2013ல் … Continue reading கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகள் திடீர் நிறுத்தம்! மறு உத்தரவு விரைவில் வெளியாகும் – கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம்!

ஒரே நாடு-ஒரே தேர்தல்! ஆகஸ்டில் புதிய சட்ட மசோதா இரு அவைகளிலும் தாக்கலாகிறது!

ஒரு நாடு; ஒரு தேர்தல்' திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, தேர்தல் கமிஷனிடம், பல்வேறு கேள்விகளை மத்திய அரசு கேட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் கமிஷன், 'இத்திட்டத்தை நிறைவேற்ற, கூடுதல் ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு போட்டதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களுக்காக, 4,555 கோடி ரூபாய் தேவை' என, தெரிவித்துள்ளது. 'நாடு முழுவதும், லோக்சபாவுடன், மாநிலங் களின் சட்டசபைகளுக்கும் சேர்த்து, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 'அதனால், மக்கள் பணம் வீணாவது தடுக்கப்படும்' என, பிரதமர் … Continue reading ஒரே நாடு-ஒரே தேர்தல்! ஆகஸ்டில் புதிய சட்ட மசோதா இரு அவைகளிலும் தாக்கலாகிறது!

ஒரே தேசம்-ஒரே தேர்தல்! அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு? சமாளிக்குமா இந்திய தேர்தல் ஆணையம்?

நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த சமாஜ்வாதிக் கட்சி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இது சாத்தியமில்லாதது என திமுக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதனால், செலவு குறையும் என்று சட்ட ஆணையம் ஏப்ரல் மாதம் தெரிவித்தது. மேலும், 2019-ம் ஆண்டில் இருந்து இரு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம், இதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரலாம் என ஆலோசனை தெரிவித்தது. இந்தக் கருத்துக்கு … Continue reading ஒரே தேசம்-ஒரே தேர்தல்! அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு? சமாளிக்குமா இந்திய தேர்தல் ஆணையம்?

நாளை கூடும் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம்! சலசலப்பை ஏற்படுத்துமா? மீடியாக்கள் ஏக்கம்!

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாஜ தேசிய தலைவர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார். அவர் கட்சி நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேச திட்ட மிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாஜ தேசிய தலைவர் அமித்ஷா பாஜகவின் சக்தி கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார். இதற்காக ஒவ்வொரு மாநிலமாக அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் சக்தி கேந்திர ெபாறுப்பாளர்களை சந்திக்க அமித்ஷா … Continue reading நாளை கூடும் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம்! சலசலப்பை ஏற்படுத்துமா? மீடியாக்கள் ஏக்கம்!

ஒரே தேசம்–ஒரே தேர்தல்? இன்றும் தொடரும் ஆலோசனைக் கூட்டம்!

‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு யோசனை தெரிவித்து உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நிறைய செலவு மிச்சமாகும், காலவிரயமும் தவிர்க்கப்படும் என்றும், வளர்ச்சிப்பணிகளில் அரசு கவனம் செலுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பரிந்துரைத்துள்ள … Continue reading ஒரே தேசம்–ஒரே தேர்தல்? இன்றும் தொடரும் ஆலோசனைக் கூட்டம்!

கர்நாடக பொதுத் தேர்தலில் 67.2% வாக்குகள் பதிவு! அமையுமா தொங்கு சட்டசபை?

கர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு இந்த தேர்தல் வெற்றி முக்கியமாகக் கருதப்படுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுத்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக பேரவைத் தேர்தலும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநில பேரவைத் தேர்தல்களும், அடுத்த … Continue reading கர்நாடக பொதுத் தேர்தலில் 67.2% வாக்குகள் பதிவு! அமையுமா தொங்கு சட்டசபை?

கர்நாடகத்தில் இன்று பலபரீட்சை- யாருக்கு கிடைக்கும் வெற்றி?

கர்நாடகத்தில், முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் அரசின் பதவி காலம் முடிவடைய இருப்பதை யொட்டி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்ட சபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கியதால் ராஜராஜேஸ்வரி தொகுதியின் தேர்தல் வருகிற 28–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதனால் மீதம் … Continue reading கர்நாடகத்தில் இன்று பலபரீட்சை- யாருக்கு கிடைக்கும் வெற்றி?

மும்முனைப் போட்டியில் கர்நாடக தேர்தல் களம்! யாருக்கு சாதகம்?

தொங்குச் சட்டமன்றம் அமையும் என்று முக்கால் சொச்சம் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், பிரச்சார மழை நேற்று (மே 10) முதல் கர்நாடகாவில் ஓய்ந்துள்ளது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் என்ற மூன்று பெரிய கட்சிகளின் மும்முனைப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பதை நாளைய தேர்தல்களம் தீர்மானிக்கப் போகிறது. வரும் மே மாதத்தோடு கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவடைகிறது என்றபோதும், மார்ச் மாதம் வரை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதைப் பற்றி … Continue reading மும்முனைப் போட்டியில் கர்நாடக தேர்தல் களம்! யாருக்கு சாதகம்?

போலி வாக்காளர் அட்டை பறிமுதல்! ஒத்திவைக்கப்படும் கர்நாடக தேர்தல்?

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாக்காளர் அடையாள அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. அதன்பேரில் தேர்தல் அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 9,746 போலி வாக்காளர் அடையாள அட்டைகளும், 5 மடிக்கணினிகளும், ஒரு அச்சு எந்திரமும் இருந்தது தெரியவந்தது. வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்ப … Continue reading போலி வாக்காளர் அட்டை பறிமுதல்! ஒத்திவைக்கப்படும் கர்நாடக தேர்தல்?

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்? 16ம் தேதி டில்லியில் ஆலோசனை!

நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். தேர்தல் செலவுகளை பெரிய அளவில் குறைக்கும் நோக்கில் இந்த கருத்தை அவர் தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் நடவடிக்கையில் மத்திய சட்ட ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக சட்ட ஆணையம் அரசியல் சாசன நிபுணர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தலில் தொடர்பு கொண்டோரிடம் கருத்து கேட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் இது … Continue reading நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்? 16ம் தேதி டில்லியில் ஆலோசனை!

கர்நாடக தேர்தல் பிரச்சாரம் இன்றே கடைசி நாள்?

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம், இன்று மாலை நிறைவடைகிறது. கர்நாடகவில் உள்ள, 224 தொகுதிகளுக்கு மே 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பெங்களூரு, ஜெயநகர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் விஜயகுமார், 59, பிரசாரத்தின்போது, மயங்கி விழுந்து, மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால், இந்த தொகுதியில் மட்டும், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மற்ற, 223 தொகுதிகளிலும், மொத்தம், 2,654 வேட்பாளர்கள், தேர்தல் களத்தில் உள்ளனர்.தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கிய வேளையில், பிரதமர் நரேந்திர … Continue reading கர்நாடக தேர்தல் பிரச்சாரம் இன்றே கடைசி நாள்?

கூட்டுறவு சங்க தேர்தல் – தற்போதைய நிலையே நீடிக்கும்! உயர்நீதிமன்றம்!

சென்னை : கூட்டுறவு சங்க தேர்தலில் அரசியல்வாதிகளின் சொல்படி ஆடிய அதிகாரிகள் சிக்குகின்றனர். இத்தேர்தலில் முறைகேடு செய்தோருக்கு 'ஆப்பு' வைக்கும் விதத்தில் கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்துவதில் ஒருதலைபட்சமாக செயல்பட்டோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக போட்டியிட்டவர்கள் குற்றம் சாட்டினர். 'வேட்புமனுக்கள் நிராகரிப்பு; வேட்புமனுக்களை ஏற்க மறுப்பு; முறையில்லாமல் தேர்தல் நடப்பது; தேர்தல் அதிகாரிகளின் துணையுடன் … Continue reading கூட்டுறவு சங்க தேர்தல் – தற்போதைய நிலையே நீடிக்கும்! உயர்நீதிமன்றம்!

மோடியின் பேச்சுக்களால் மக்களுக்கு சோறு கிடைக்காது: சோனியா பேச்சு.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சார களத்தில் இறங்கிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நேற்று பீஜப்பூரில் நடந்த பிரச்சாரத்தின் போது "பிரதமர் மோடியின் பேச்சுக்களால் மட்டும் நாட்டு மக்களின் பசி தீர்ந்து விடாது" என்றார். ஆளும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவும் கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்குபெற்றார். 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிரச்சார மேடையில் இறங்கிய சோனியா, … Continue reading மோடியின் பேச்சுக்களால் மக்களுக்கு சோறு கிடைக்காது: சோனியா பேச்சு.

பற்றவைத்த பாகிஸ்தான்? மோதிக்கொள்ளும் பாஜக-காங்!

கர்நாடகத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளநிலையில், திப்பு சுல்தானைப் புகழ்ந்து பாகிஸ்தான் அரசு செய்துள்ள ட்வீட்டால், காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் கடுமையாக கருத்து மோதல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுநாள் வரை திப்புசுல்தானைப் புகழ்ந்து ட்வீட் செய்யாத பாகிஸ்தான், திடீரென கர்நாடகத் தேர்தலை கணக்கில் கொண்டு ட்வீட் செய்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னன் திப்புசுல்தான். அவரின் 218-வது நினைவுநாள் இம்மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக பாகிஸ்தான் அரசு திப்புசுல்தானைப் புகழ்ந்து தனது அதிகாரப்பூர்வ … Continue reading பற்றவைத்த பாகிஸ்தான்? மோதிக்கொள்ளும் பாஜக-காங்!

பாஜக மீது சரமாரி புகார் வாசித்த கர்நாடக முதல்வர் வேட்பாளர்!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் நெருங்குவதால் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. தேசிய கட்சிகளின் தலைவர்கள் கர்நாடகத்தில் முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் முதல்- மந்திரி சித்தராமையா பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது அடுக்கடுக் கான குற்றச்சாட்டுகளை நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பட்டியலிட்டு உள்ளார். இந்த தேர்தலிலும் … Continue reading பாஜக மீது சரமாரி புகார் வாசித்த கர்நாடக முதல்வர் வேட்பாளர்!

ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்! திருநாவுக்கரசர் ஆரூடம்.

நடப்பாண்டில் கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழகத் தலைவர் சு.திருநாவுக்கரசர் நம்பிக்கை தெரிவித்தார்.மத்திய பாஜக ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் "ஜன் ஆக்ரோஷ்' என்ற பெயரில் தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் … Continue reading ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்! திருநாவுக்கரசர் ஆரூடம்.

கர்நாடக தேர்தலுக்காக தயாராகிறது காங்கிரஸின் தேர்தல் அறிக்கை.

கர்நாடகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி ‌தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவையின் 225 உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வரும் மே 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று வெளியிட்டார். கர்நாடக மக்களின் குரலாக இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய ராகுல்காந்தி, … Continue reading கர்நாடக தேர்தலுக்காக தயாராகிறது காங்கிரஸின் தேர்தல் அறிக்கை.