2019 ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல்? மத்திய அரசு தீவிரம்!

'சட்டசபைகளுக்கும், லோக்சபாவிற்கும் வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்த, அரசிற்கு பெருந்தொகை செலவாவதால், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் கடந்த செவ்வாய்க்கிமை அன்று பேசிய போது ''இந்தியாவில் 29 மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலோடு ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தலையும் வைப்பதென்பது சாத்தியமில்லை. அரசியலமைப்பிலும் சட்டத் திருத்தம் கொண்டுவராமல் இதை நடத்த முடியாது'' … Continue reading 2019 ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல்? மத்திய அரசு தீவிரம்!

தமிழர்கள் அகதிகளா? மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் அகதிகள் வருகிறார்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது. அதிமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தான் வாய்தவறி பேசிவிட்டதாகக் கூறிவிட்டார். மக்களவையில் பல்வேறு துணைக் கேள்விகளுக்கு நேற்று மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார். அப்போது அகதிகள் விவகாரம் குறித்துப் பேசுகையில், ” மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் வரும் ரோஹிங்கயா முஸ்லிகளுக்கு அகதிகள் … Continue reading தமிழர்கள் அகதிகளா? மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

பாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி? அதிமுக தலைமை அதிர்ச்சி!

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தையொட்டி நடந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சிகளை சேர்ந்த பல எம்.பிக்கள் வாக்களிக்காத விவரம் தற்போது வெளியாகியுள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 4 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி ஸ்ரீநிவாஸ் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப் … Continue reading பாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி? அதிமுக தலைமை அதிர்ச்சி!

“ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்? மம்தா-சந்திரபாபு நாயுடு பேச்சு!

மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு எதிராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி குறிப்பிட்டார். ஜெயலலிதா இருந்திருந்தால் … Continue reading “ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்? மம்தா-சந்திரபாபு நாயுடு பேச்சு!

நம்பிக்கையில்லாத் தீர்மானம்! வியூகம் வகுக்கும் பாஜக!

மக்களவையில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளும் பாஜக திடீரென ஏற்றுக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்களவை தேர்தலுக்கான வியூகத்தை அக்கட்சித் தலைவர் அமித் ஷா மாற்றியுள்ளதாக தெரிகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தது. இதன்படி, … Continue reading நம்பிக்கையில்லாத் தீர்மானம்! வியூகம் வகுக்கும் பாஜக!

20,23 தேதிகளில் விவாதம்! பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதன்பின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலங்கு தேசம் கட்சியினர் பெரும் அமளியில் ஈடுபட்டு ஆளும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்தனர். ஆனால் அதை மக்களவை சபாநாயகர் ஏற்கவில்லை. இந்நிலையில், மழைக்காலக் கூட்டத்தொடரிலும் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை … Continue reading 20,23 தேதிகளில் விவாதம்! பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு!

இன்று கூடுகிறது “பார்லி மழைக்கால கூட்டத்தொடர்” ! முழங்குமா? முடங்குமா?

'பார்லி.,யில் மழைக்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று(ஜூலை 18) துவங்குகிறது. இதை முன்னிட்டு, அனைத்துக் கட்சி கூட்டம், நேற்று நடந்தது. இதைஅடுத்து நிருபர்களிடம் பேசிய, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது: இரு அவைகளிலும் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்க, அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் குறித்து பேச வேண்டும். பார்லி., கூட்டத்தொடரை மக்கள் … Continue reading இன்று கூடுகிறது “பார்லி மழைக்கால கூட்டத்தொடர்” ! முழங்குமா? முடங்குமா?

அரசுக்கெதிராக “நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி கூறியுள்ளது. … Continue reading அரசுக்கெதிராக “நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

ஒரே தேசம்-ஒரே தேர்தல்! அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு? சமாளிக்குமா இந்திய தேர்தல் ஆணையம்?

நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த சமாஜ்வாதிக் கட்சி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இது சாத்தியமில்லாதது என திமுக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதனால், செலவு குறையும் என்று சட்ட ஆணையம் ஏப்ரல் மாதம் தெரிவித்தது. மேலும், 2019-ம் ஆண்டில் இருந்து இரு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம், இதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரலாம் என ஆலோசனை தெரிவித்தது. இந்தக் கருத்துக்கு … Continue reading ஒரே தேசம்-ஒரே தேர்தல்! அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு? சமாளிக்குமா இந்திய தேர்தல் ஆணையம்?

அமித்ஷா தலைமையில் கூடும் பாஜக பயங்கரவாதிகள்? சுப்ரமணியம் சாமி அதிரடிப் பேச்சு!

கடந்த வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் திருமதி. தமிழிசை சௌந்திரராஜன் பேசியதாவது அமித் ஷாவின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். தாமரை மலராது, தமிழக பாஜகவில் என்ன இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிகழ்ச்சியாக அமையும். பாஜக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் கட்சி. பல எம்எல்ஏக்களைப் பெற்று தோல்வியடைந்த கட்சி போல் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சவாலான சூழ்நிலையில் அடிமட்டத் தொண்டர் வரை கட்சியை எவ்வளவு எடுத்துச் சென்றிருக்கிறோம் என … Continue reading அமித்ஷா தலைமையில் கூடும் பாஜக பயங்கரவாதிகள்? சுப்ரமணியம் சாமி அதிரடிப் பேச்சு!

தமிழகத்தில் பொதுத்தேர்தல்-2019? மத்திய அரசு தீவிரம்!

பார்லி. லோக்சப, மாநில சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் குறித்து வரும் 7 தேதி முதல் அரசியல்கட்சிகளுடன் சட்ட கமிஷன் ஆலோசனை நடத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பார்லி. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் .ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் அதிக பண செலவு குறைக்கப்படும் என பிரதமர் மோடி யோசனை கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் வரவேற்பும் ஆதரவும் இருந்தது. இது குறித்த அறிக்கை … Continue reading தமிழகத்தில் பொதுத்தேர்தல்-2019? மத்திய அரசு தீவிரம்!

மத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு! முக்கிய மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது!

மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. தமிழக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. முன்னதாக இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது: மத்திய அரசு, … Continue reading மத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு! முக்கிய மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது!

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்? 16ம் தேதி டில்லியில் ஆலோசனை!

நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். தேர்தல் செலவுகளை பெரிய அளவில் குறைக்கும் நோக்கில் இந்த கருத்தை அவர் தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் நடவடிக்கையில் மத்திய சட்ட ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக சட்ட ஆணையம் அரசியல் சாசன நிபுணர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தலில் தொடர்பு கொண்டோரிடம் கருத்து கேட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் இது … Continue reading நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்? 16ம் தேதி டில்லியில் ஆலோசனை!