2019 ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல்? மத்திய அரசு தீவிரம்!

'சட்டசபைகளுக்கும், லோக்சபாவிற்கும் வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்த, அரசிற்கு பெருந்தொகை செலவாவதால், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் கடந்த செவ்வாய்க்கிமை அன்று பேசிய போது ''இந்தியாவில் 29 மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலோடு ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தலையும் வைப்பதென்பது சாத்தியமில்லை. அரசியலமைப்பிலும் சட்டத் திருத்தம் கொண்டுவராமல் இதை நடத்த முடியாது'' … Continue reading 2019 ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல்? மத்திய அரசு தீவிரம்!

காங்கிரஸ் – பாஜக மோதல் ! – மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

பாஜக குற்றச்சாட்டு! அசாமில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில், மாநிலத்தில் வசித்து வரும் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு உள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சுயநலமாக செயல்படுவதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடந்த கட்சிப்பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:– அசாம் … Continue reading காங்கிரஸ் – பாஜக மோதல் ! – மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

Ops ன் திடீர் டில்லிப் பயணத்தின் முழுப் பின்னனி ? அதிர்ச்சி தகவல்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளதாகக் கடந்த மார்ச் 10ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அனுப்பியது நினைவிருக்கும். அந்த மனுவில், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துகளின் பட்டியலுக்கும் வருமான வரித் துறையில் செலுத்தியுள்ள சொத்துகளின் விவரங்களிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி, மகன்கள், மற்றும் மகளின் … Continue reading Ops ன் திடீர் டில்லிப் பயணத்தின் முழுப் பின்னனி ? அதிர்ச்சி தகவல்

நம்பிக்கையில்லாத் தீர்மானம்! வியூகம் வகுக்கும் பாஜக!

மக்களவையில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளும் பாஜக திடீரென ஏற்றுக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்களவை தேர்தலுக்கான வியூகத்தை அக்கட்சித் தலைவர் அமித் ஷா மாற்றியுள்ளதாக தெரிகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தது. இதன்படி, … Continue reading நம்பிக்கையில்லாத் தீர்மானம்! வியூகம் வகுக்கும் பாஜக!

நாளை கூடும் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம்! சலசலப்பை ஏற்படுத்துமா? மீடியாக்கள் ஏக்கம்!

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாஜ தேசிய தலைவர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார். அவர் கட்சி நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேச திட்ட மிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாஜ தேசிய தலைவர் அமித்ஷா பாஜகவின் சக்தி கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார். இதற்காக ஒவ்வொரு மாநிலமாக அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் சக்தி கேந்திர ெபாறுப்பாளர்களை சந்திக்க அமித்ஷா … Continue reading நாளை கூடும் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம்! சலசலப்பை ஏற்படுத்துமா? மீடியாக்கள் ஏக்கம்!