சிறுமிகள் வன்புணர்வு? மரண தண்டனைக்கு குடிரசுத்தலைவர் ஒப்புதல்!

இந்தியா முழுவதிலும் அதிகரித்துவரும் இளம்சிறார் பாலியல் வன்புணர்வும் ,அதன் தொடர்பாக ஏற்படும் வன்முறைகளும், போராட்டங்களும் பொதுச் சொத்துக்களுக்கே சேதம் விளைவித்து வருகின்றன. இதைத் தடுக்க புதிதாக போடப்பட்ட சட்டத்திற்க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலளித்துள்ளார். காஷ்மீரின் கதுவாவில் சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சிறுமிகளை கற்பழிப்போருக்கு … Continue reading சிறுமிகள் வன்புணர்வு? மரண தண்டனைக்கு குடிரசுத்தலைவர் ஒப்புதல்!

பெண்ணின் அந்தரங்கங்களைத் திருடிய வாலிபர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள தாமரை ஊரணியைச் சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி வாலிபர் தினேஷ்குமார். அந்த பகுதியில் உள்ள தனது உறவுக்கார பெண் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார் தினேஷ் குமார். அவரிடம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் ஆசை ஆசையாய் அனுப்பி வைத்த ஸ்மார்ட் போனை கொடுத்து அதில் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து தர கேட்டுள்ளார் அவருடைய உறவுக்கார பெண். அந்த ஸ்மார்ட் போனில் வேவு பார்க்கும் செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்த தினேஷ்குமார் … Continue reading பெண்ணின் அந்தரங்கங்களைத் திருடிய வாலிபர் கைது!

சிறார் பாலியல் வன்கொடுமை! உறுதி செய்யப்பட்ட தூக்குதண்டனை!

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்த மசோதா மீது அனைத்துக் கட்சிகளும் விவாதம் நடத்தினாலும், இறுதியில் குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்தச் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி, உபியில் உன்னாவ் நகரில் சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்தை … Continue reading சிறார் பாலியல் வன்கொடுமை! உறுதி செய்யப்பட்ட தூக்குதண்டனை!

நம் குழந்தைகளைப் பாதுகாக்க நாம் முன்வர வேண்டும்! #Good_touch #Bad_touch பற்றிய காணொளி!

சமீப காலமாக தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது, அதன் மூலம் வளர்ந்து வாசம் வீச வேண்டிய பூ மலர்கள் அறியாப் பருவத்திலேயே தங்களையுமறியாமல் சருகாகிப் போவது தொடர்கதையாகிப் போனதே நிஜம். இதைத் தடுக்க அரசாங்கம் மட்டும் முயற்சித்தால் போதாது. மாறாக நம் குழந்தைகளுக்கு விவரம் தெரிந்த நாள் முதலாக #நல்ல_தொடுதல் #தீய_தொடுதல் பற்றிய பயிற்சியை எளிமையான முறையில் பயிற்றுவிக்கலாமே! இந்தக் காணொளியில் தனது குழந்தைக்கு #GOOD_TOUCH #BAD_TOUCH பற்றி தனது குழந்தைக்கு பயிற்றுவிக்கும் … Continue reading நம் குழந்தைகளைப் பாதுகாக்க நாம் முன்வர வேண்டும்! #Good_touch #Bad_touch பற்றிய காணொளி!

கேரளா மாணவி கற்பழிப்பு😓! ஐஏஎஸ் அதிகாரி உடந்தையா 😨?

பெங்களூருவில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒரு தம்பதியின் மகள் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்தார். அப்போது அந்த மாணவிக்கும், பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபரின் மகனுமான நஜீர்கான் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த மாணவியை கடந்த ஜனவரி மாதம் நஜீர்கான் மதம் மாற்றியதாகவும், … Continue reading கேரளா மாணவி கற்பழிப்பு😓! ஐஏஎஸ் அதிகாரி உடந்தையா 😨?

5″ பாதிரியார்கள் இடைநீக்கம்?

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த ஒரு பெண், மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபையை சேர்ந்த ஒரு தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்கச்சென்று, 8 பாதிரியார்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாய் ஆவார். அவர், தனது திருமணத்துக்கு முன்பே, தனது திருச்சபையை சேர்ந்த ஒரு பாதிரியாருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பாவ மன்னிப்பு கேட்டார். அவருக்கு பாவ மன்னிப்பு வழங்கிய … Continue reading 5″ பாதிரியார்கள் இடைநீக்கம்?

சேலம் மாவட்டத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ! நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?

சேலத்தில் விவாகரத்தான பெண் மருத்துவரை தாக்கிவரும் கனவரிடம் இருந்து பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மாதர் சங்கம் மனு. சேலத்தில் விவாகரத்தான பெண் மருத்துவரை தாக்கி வரும் தனது கனவரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புதன் கிழமை மனு அளிக்கப்பட்டது. சேலம் மாநகரம் 24வது டிவிசன் கந்தம்பட்டி மேம்பாளம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஹிலா பேகம், மருத்துவரான இவர் இதே பகுதியில் மருத்துவமனை, வீடு … Continue reading சேலம் மாவட்டத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ! நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?