#ஸ்டெர்லைட் விவகாரம்! தமிழக அரசு மேல்முறையீடு?

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22-ந் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தேசிய பசுமை … Continue reading #ஸ்டெர்லைட் விவகாரம்! தமிழக அரசு மேல்முறையீடு?

போராட்டங்களால் பொதுச் சொத்துக்கள் சேதம்? உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

நாட்டில் எதற்கெடுத்தாலும் போராட்டங்களும் அதனையடுத்து வன்முறைச் சம்பவங்களும் அரசு, தனியார் உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும் கவலையளிக்கிறது என்று கூறிய உச்ச நீதிமன்றம் இதற்கான சட்டத் திருத்தத்துக்காக அரசின் முடிவை எதிர்நோக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் கூறியபோது நாட்டில் எங்காவது ஒரு பகுதியில் தினப்படி போராட்டங்கள், வன்முறைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன என்று சமீபத்திய கன்வாரிய போராட்டத்தைக் குறிப்பிட்டு எழுப்பிய போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசின் சட்டத்திருத்தத்துக்காகக் … Continue reading போராட்டங்களால் பொதுச் சொத்துக்கள் சேதம்? உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

அமித்ஷா தலைமையில் கூடும் பாஜக பயங்கரவாதிகள்? சுப்ரமணியம் சாமி அதிரடிப் பேச்சு!

கடந்த வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் திருமதி. தமிழிசை சௌந்திரராஜன் பேசியதாவது அமித் ஷாவின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். தாமரை மலராது, தமிழக பாஜகவில் என்ன இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிகழ்ச்சியாக அமையும். பாஜக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் கட்சி. பல எம்எல்ஏக்களைப் பெற்று தோல்வியடைந்த கட்சி போல் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சவாலான சூழ்நிலையில் அடிமட்டத் தொண்டர் வரை கட்சியை எவ்வளவு எடுத்துச் சென்றிருக்கிறோம் என … Continue reading அமித்ஷா தலைமையில் கூடும் பாஜக பயங்கரவாதிகள்? சுப்ரமணியம் சாமி அதிரடிப் பேச்சு!

#பசுமை_வழிச்சாலை! அரைகுறையாக புரிந்து கொண்டு எதிர்க்கின்றனர்-உயர்நீதிமன்றம்!

சேலம் 8 வழி சாலை திட்டத்தின் நோக்கத்தையும்,பயன்களையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும், என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாரியம்மன் கோயில் திடலில் தமாக கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் பொது கூட்டம் நடத்த அனுமதி கோரி சேலம் ஓமலூர் காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை, தங்கள் மனு பரிசீலிக்கப்படாததால், உரிய முறையில் … Continue reading #பசுமை_வழிச்சாலை! அரைகுறையாக புரிந்து கொண்டு எதிர்க்கின்றனர்-உயர்நீதிமன்றம்!

மூன்றாண்டு தொடர்ந்த அதிகார மோதல்? தீர்த்து வைத்த உச்சநீதிமன்றம்!

தில்லி தலைநகர் பிராந்தியத்தைப் பொருத்தமட்டில் துணைநிலை ஆளுநருக்கு என தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே பல்வேறு விஷயங்களில் அதிகார மோதல் போக்கு நிலவி வந்தது. இதில், உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம், லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவை நிர்வகிக்கும் விவகாரம், சிஎன்ஜி வாகனங்களின் தரத்தை நிர்ணயிப்பதில் … Continue reading மூன்றாண்டு தொடர்ந்த அதிகார மோதல்? தீர்த்து வைத்த உச்சநீதிமன்றம்!

“காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது தவறு என்று கர்நாடக நீா்வளத் துறை அமைச்சா் டி.கே.சிவக்குமார், சனிக்கிழமை தெரிவித்தார். பெங்களூரு, விதான சௌதாவில் காவிரி தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காவிரி தொடா்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் கா்நாடகத்துக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் ஆராயப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பால் சிலவற்றில் கா்நாடகத்துக்கு … Continue reading “காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

லாரி ஸ்ட்ரைக் வாபஸ்?

தமிழகம் உள்பட நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இந்நிலையில், டீசலுக்கு மாநில அரசுகள் விதித்து வரும் வரியை குறைத்தால் போராட்டத்தை வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்தது. நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர். டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் ஏற்கெனவே லாரி உரிமையாளர்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். … Continue reading லாரி ஸ்ட்ரைக் வாபஸ்?

“தமிழக போலீசார்” தேடிவரும் குற்றவாளி, “தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், தமிழக காவல்துறை, எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் கூறியது. ஆனால், போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகரோ, மத்திய மாநில அமைச்சர்களுடனும், கோவில் குளங்களுக்கும் போலீசார் துணையுடன் சென்று வருகிறார். இது பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களிடத்திலும் தமிழக காவல்துறைமீது கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில், பல மாவட்டங்களில் … Continue reading “தமிழக போலீசார்” தேடிவரும் குற்றவாளி, “தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?

சேலம் மாவட்டத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ! நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?

சேலத்தில் விவாகரத்தான பெண் மருத்துவரை தாக்கிவரும் கனவரிடம் இருந்து பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மாதர் சங்கம் மனு. சேலத்தில் விவாகரத்தான பெண் மருத்துவரை தாக்கி வரும் தனது கனவரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புதன் கிழமை மனு அளிக்கப்பட்டது. சேலம் மாநகரம் 24வது டிவிசன் கந்தம்பட்டி மேம்பாளம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஹிலா பேகம், மருத்துவரான இவர் இதே பகுதியில் மருத்துவமனை, வீடு … Continue reading சேலம் மாவட்டத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ! நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?

தேனி மதக்கலவரம்: தலித்தியம் பேசும் திருமா எங்கே? கொந்தளிக்கும் பாதிக்கப்பட்ட சமூகம்!

தேனியில் இரு சமூகத்தினரிடையே நடந்த மதக்கலவரம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதுபற்றி பெரிய பெரிய ஊடகங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் வாய் திறக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிவாங்கியவர்கள் இந்துக்கள் என்பதால் கலவரம் மறைக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் வள்ளியம்மாள் என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த 64 வயது பெண்மணி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மரணமடைந்தார். இறுதி ஊர்வலத்திற்காக அவரது உடல் கொண்டு செல்லப்படும் … Continue reading தேனி மதக்கலவரம்: தலித்தியம் பேசும் திருமா எங்கே? கொந்தளிக்கும் பாதிக்கப்பட்ட சமூகம்!

ஜெயலலிதாவை மிஞ்சினாரா எடப்பாடியார்?

“கோட்டையை முற்றுகையிடப்போவதாக அறிவித்த அரசு ஊழியர்கள் சங்கத்தினரை நேற்று இரவிலிருந்தே கைது செய்ய ஆரம்பித்துவிட்டது போலீஸ். வழக்கமாகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதும், மாலையில் விடுவிப்பதும்தான் போலீஸ் ஸ்டைல். ஆனால், இன்று அரசு ஊழியர்களைப் போராட்டமே நடத்தவிடாமல் தடுத்தது எடப்பாடி ஸ்டைல் என்று சொல்கிறார்கள். ‘அரசு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிடப் போகிறார்கள் என்று அறிவிப்பு வந்ததுமே காவல் துறையில் தனக்கு நெருக்கத்தில் உள்ள சிலரை அழைத்துப் பேசினார் முதல்வர். ‘இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு எப்படி இருக்கும் என்பதை … Continue reading ஜெயலலிதாவை மிஞ்சினாரா எடப்பாடியார்?

இழுத்து மூடப்பட்ட அதானி மீதான ஊழல் விசாரணை?

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானதாக அறியப்படும் அதானி குழும நிறுவனங்கள் விலை மதிப்பை அதிகமாகக் காட்டி (ஓவர் இன்வாய்ஸ்) மின் உபகரணங்கள் இறக்குமதி செய்ததாக கூறப்படும் வழக்கின் பூர்வாங்க விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) தனது “அதிகார எல்லை வரம்புக்குள் வரவில்லை” என்ற சொதப்பலான ஒரு காரணத்தைச் சொல்லி இழுத்து மூடிவிட்டது. இதன் மூலம் இந்த விசாரணை குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் … Continue reading இழுத்து மூடப்பட்ட அதானி மீதான ஊழல் விசாரணை?

துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினாலும் மே 10 ல் போராடுவோம்!

சென்னை: தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார். மே 10-ம் தேதி முதல் மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடந்தே தீரும் என்றும் அய்யாக்கண்ணு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, சென்னை மெரினாவில் அய்யாக்கண்ணுவுக்கு ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க தனி நீதிபதி அளித்த அனுமதிக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் ஈரோட்டில் … Continue reading துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினாலும் மே 10 ல் போராடுவோம்!