சிறுமிகள் வன்புணர்வு? மரண தண்டனைக்கு குடிரசுத்தலைவர் ஒப்புதல்!

இந்தியா முழுவதிலும் அதிகரித்துவரும் இளம்சிறார் பாலியல் வன்புணர்வும் ,அதன் தொடர்பாக ஏற்படும் வன்முறைகளும், போராட்டங்களும் பொதுச் சொத்துக்களுக்கே சேதம் விளைவித்து வருகின்றன. இதைத் தடுக்க புதிதாக போடப்பட்ட சட்டத்திற்க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலளித்துள்ளார். காஷ்மீரின் கதுவாவில் சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சிறுமிகளை கற்பழிப்போருக்கு … Continue reading சிறுமிகள் வன்புணர்வு? மரண தண்டனைக்கு குடிரசுத்தலைவர் ஒப்புதல்!

“தமிழக அரசுக்கு விருது” மத்திய அரசு!

தாய்மார்கள் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை டெல்லியில் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவிடம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று பெற்றுக் கொண்டார். விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:– மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. சாதனை சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தமிழக சுகாதாரத்துறையின் மணிமகுடத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைத்ததற்காக வழங்கப்படும் இவ்விருது … Continue reading “தமிழக அரசுக்கு விருது” மத்திய அரசு!

மனிதம் தொலைத்த மனிதர்கள்? இன்றைய யுகத்தின் சாபக்கேடு!

சிவப்பு நிற டாட்டா இண்டிகா கார் கரப்பான் பூச்சியை கவிழ்த்து போட்டது போல் கவிழ்ந்து கிடக்கிறது. கவிழ்ப்பதற்கு முன்னர், ஆக்ரோஷமாக அடித்து நொறுக்கப்பட்டிருப்பது அந்த வீடியோவைப் பார்த்தாலே தெரிகிறது. அதன்பின்தான் காரை கவிழ்த்திருக்க வேண்டும். காருக்கு அருகிலேயே ஐந்து பேரின் ஆடைகள் கிழிக்கப்பட்டு, உதிரம் வலிய அமர்ந்திருக்க அவர்களை மனிதர்கள் கூட்டமாக காலால், கையால் புரட்டி அடித்தனர். அவர்களோ வலியில் துடிதுடித்தனர். கும்பலாக ஒரு சிலர் காரில் வந்தவர்களை அடித்துக்கொண்டிருக்க, அதை ஊர் திருவிழா போன்று வீட்டு … Continue reading மனிதம் தொலைத்த மனிதர்கள்? இன்றைய யுகத்தின் சாபக்கேடு!

வீழ்ந்தது தினகரனின் துவக்கமா? முன்னாள் MLA மேலூர் சாமி மறைவு!

மேலூர் ஆர்.சாமி, நேற்று பிற்பகலில் மரணம் அடைந்தார். டிடிவி தினகரனுக்கு வலது கரமாக இயங்கியவர். டிடிவி தினகரனுக்காக முதல் கூட்டம் நடத்தியவர்! மேலூர் ஆர்.சாமி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக.வில் துடிப்பாக இயங்கிய நிர்வாகிகளில் ஒருவர்! எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர்! ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இயங்கி வந்தார். நேற்றுகாலை 10 மணிக்கே மேலூர் சாமி இறந்ததாக கூறி சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணமிருந்தன. ஆனால் தினகரன் ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா டிவி பிற்பகல் … Continue reading வீழ்ந்தது தினகரனின் துவக்கமா? முன்னாள் MLA மேலூர் சாமி மறைவு!