எம்எல்ஏ வுக்கு கொலை மிரட்டல்? போலீசார் வலைவீச்சு!

உத்தர பிரதேச மாநிலத்தில், பகுஜன் சமாஜ் - எம்.எல்.ஏ., ஒருவர், நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமிடம் இருந்து, கொலை மிரட்டல் வந்ததாக அளித்த புகாரை, போலீசார் விசாரித்து வருகின்றனர். புகார் : உத்தர பிரதேச மாநிலத்தின், பலியா மாவட்டத்தில் உள்ள, ரஸ்ரா சட்டசபை தொகுதியின், எம்.எல்.ஏ., வாக இருப்பவர், உமா சங்கர் சிங்; பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். இவர், நேற்று, போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: ஆக., 6ல், என் மொபைல் போன் எண்ணுக்கு, ஒரு … Continue reading எம்எல்ஏ வுக்கு கொலை மிரட்டல்? போலீசார் வலைவீச்சு!

சாம்பாரில் கரப்பான் பூச்சி? 5 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது!

இட்லி பார்சல் வாங்கியதில் சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடப்பதாகவும், அதை இணையதளத்தில் வீடியோவாக வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டிய இளைஞரை போலீஸார் சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்தனர். சென்னை வேளச்சேரியில் தமிழ்க்கடவுள் பெயரில் இயங்கும் பிரபலமான இட்லி கடை உள்ளது. சென்னை முழுவதும் பல கிளைகள் கொண்ட இந்த உணவகத்தில் எந்நேரமும் கூட்டம் அலைமோதும். இந்த ஓட்டலில் கடந்த 9-ம் தேதி காலை இளைஞர் ஒருவர் தோசை, இட்லி பார்சல் வாங்கிச் சென்றார். … Continue reading சாம்பாரில் கரப்பான் பூச்சி? 5 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது!

“தமிழக போலீசார்” தேடிவரும் குற்றவாளி, “தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், தமிழக காவல்துறை, எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் கூறியது. ஆனால், போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகரோ, மத்திய மாநில அமைச்சர்களுடனும், கோவில் குளங்களுக்கும் போலீசார் துணையுடன் சென்று வருகிறார். இது பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களிடத்திலும் தமிழக காவல்துறைமீது கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில், பல மாவட்டங்களில் … Continue reading “தமிழக போலீசார்” தேடிவரும் குற்றவாளி, “தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?

டெல்டா பகுதிகளில் CRPF படை குவிப்பு? பின்னனி?

தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் போலீஸ் படையினர் திடீரென குவிக்கப்பட்டுள்ளனர். ஹைட்ரோ கார்பன் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம்,புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மீத்தேன், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு போன்ற மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கு அங்குள்ள விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், துணை ராணுவம் என்று அழைக்கப்படும் மத்திய … Continue reading டெல்டா பகுதிகளில் CRPF படை குவிப்பு? பின்னனி?

முதல்வருக்கு கொலை மிரட்டல்? மிரட்டல் டுத்தவரை தேடும் போலீஸ்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலை வெட்டப்படும் என்று நக்சலைட்டுகள் கொலை மிரட்டல் விடுத்து போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர். பாலக்காடு மாவட்டம், பழையனூர் பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் அருகே இந்த பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளனர். அந்தப் பதாகைகளில் கேரள ஆதிவாசிகளின் கவனிக்காத விஜயனின் தலை வெட்டப்படும் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் குறித்தும் யாரும் புகார் செய்ததால் இதுவரை போலீஸார் எந்தவிதமான வழக்குப் பதிவும் செய்யவில்லை. இது குறித்து வடக்கன்சேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, போலீஸார் விசாரணை … Continue reading முதல்வருக்கு கொலை மிரட்டல்? மிரட்டல் டுத்தவரை தேடும் போலீஸ்!