ஆக14 ல் திமுக செயற்குழு கூட்டம்? அழகிரிக்கு வாய்ப்பு!

திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டிய நிலை திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. அன்பழகன் இல்லத்தில்...: சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள க.அன்பழகன் இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் வந்தார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா … Continue reading ஆக14 ல் திமுக செயற்குழு கூட்டம்? அழகிரிக்கு வாய்ப்பு!

#அஞ்சா_நெஞ்சர்_அழகிரி #அடிப்பாரா_செஞ்ச்சுரி? பகுதி -2

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க, காவேரி மருத்துவமனைக்கு வரும், அவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் பலர், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினிடம் பேசும்போது, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை பற்றியும், தவறாமல் பேசுகின்றனர். அவரை மீண்டும் கட்சியில் இணைத்து செயல்படும்படி, ஸ்டாலினிடம் வலியுறுத்துவதாக, தகவல் வெளியாகியுள்ளது. தென் மண்டல அமைப்பு செயலர் பதவி வகித்த அழகிரி, 2014ல், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். அதனால், அதிருப்தி அடைந்த அழகிரி, லோக்சபா தேர்தலிலும், … Continue reading #அஞ்சா_நெஞ்சர்_அழகிரி #அடிப்பாரா_செஞ்ச்சுரி? பகுதி -2

திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும்? கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி!

“ஆரம்பத்தில் ஐ.ஐ.டி. வளாகத்தில் வாக்கிங் போவதை வழக்கமாக வைத்திருந்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். கடந்த சில மாதங்களாகவே அவரது வாக்கிங் ஸ்பாட் அடையாறில் உள்ள The Theosophical Society கேம்பஸுக்கு மாறிவிட்டது. அடையாறு ஆலமரம் இருக்கக்கூடிய பகுதி இது. இங்கே உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே கேம்பஸுக்குள் நுழைய முடியும். சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் பசுமை சூழ இருக்கும். இந்த வளாகத்தில்தான் வாக்கிங் போகிறார் ஸ்டாலின். டிடிவி தினகரன் வீட்டிலிருந்து இந்த கேம்பஸ் … Continue reading திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும்? கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி!

ராமநாதபுரம் மாவட்டம் துவைக்கி வைத்த முக அழகிரியின் #ரீ_என்ட்ரி?

அண்மையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்த சுப.த.திவாகரன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக முத்துராமலிங்கம் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனையும் அவரது ஆதரவாளர்களையும் கோபத்தில் ஆழ்த்திவிட்டது. ஏனெனில், அவரது மகன்தான் மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். மாவட்டத்தில் இருக்கும் பல நிர்வாகிகளும் சுப.தங்கவேலனால் கொண்டுவரப்பட்டவர்கள் என்பதால் புதிய மா.செ.வை யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. நியமன அறிவிப்பு வந்த இரண்டாவது நாளே ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் … Continue reading ராமநாதபுரம் மாவட்டம் துவைக்கி வைத்த முக அழகிரியின் #ரீ_என்ட்ரி?

#அஞ்சா_நெஞ்சர்_அழகிரி! அடிப்பாரா செஞ்ச்சுரி?

மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் அழகிரியின் போஸ்டர் இருந்த காலமும் உண்டு. அஞ்சா நெஞ்சர் முதல் ஆயிரமாயிரம் பட்டங்கள் தர தனியாக 11 பேர் கொண்ட குழுவே இருந்தது என்றெல்லாம் கலாய்க்கப்பட்டாலும்கூட செம்ம மாஸ் என்ற ரேஞ்சில் ரேஞ்ச் ரோவரில் உலா வந்தவர். சமீப காலமாக அழகிரியின் முகவரி அமைதி என்றே இருக்கிறது. அவ்வப்போது ஏதாவது சொல்வார். அதுவும் சில நாட்களில் நீர்த்துவிடும். ஆனால், இன்று அவர் மதுரை பாலமேட்டில் தொண்டர் இல்ல விழாவில் பேசியதற்கு கொஞ்சம் எஃபெக்ட் … Continue reading #அஞ்சா_நெஞ்சர்_அழகிரி! அடிப்பாரா செஞ்ச்சுரி?

திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள்!

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் தமிழகத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதி மன்றம் கொடுத்த 6 வார கெடு மார்ச் 29ம் தேதி முடிவடைந்தும், மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ‘ஸ்கீம்’ குறித்து விளக்கம் கேட்டு மனு செய்தது. மே 3ம் தேதி வரை காலக்கெடு அளித்தது உச்சநீதிமன்றம். அதன் பிறகு, மீண்டும் மத்திய அரசு அவகாசம் கேட்டதால், … Continue reading திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள்!

முக ஸ்டாலினை சந்திக்கும் சந்திரசேகர ராவ்! காவிரி விவகாரத்தில் பாஜக, காங் நாடகம்?

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை குறைத்து கடந்த பிப்ரவரி மாதம் 16–ந் தேதி தீர்ப்பு வழங்கியது. அத்துடன், நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்‘ (செயல்திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் … Continue reading முக ஸ்டாலினை சந்திக்கும் சந்திரசேகர ராவ்! காவிரி விவகாரத்தில் பாஜக, காங் நாடகம்?