போட்டி திமுக பிரம்மாண்ட பேரணி? மதுரையின் முக்கிய முடிவுகள்!

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்கொடி துாக்கி உள்ள, அவரது அண்ணன் அழகிரி தலைமை யில், விரைவில், போட்டி தி.மு.க., உதயமாகிறது. கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆக.,7ல் மரணம் அடைந்தார். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 14ம் தேதி, அறிவாலயத்தில், தி.மு.க., தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடந்தது. அதில் … Continue reading போட்டி திமுக பிரம்மாண்ட பேரணி? மதுரையின் முக்கிய முடிவுகள்!

இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி தூக்குவார் என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதைத் தொடங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கருணாநிதி மறைந்த 7-ஆவது நாளிலேயே அழகிரி தனது எதிர்ப்பை ஆரம்பித்திருக்கிறார். ஸ்டாலின் கலக்கம்? ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம்' தொடங்கியது போன்று, அழகிரியும் இப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் தனது பாணி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் உள்ளனர். என் … Continue reading இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!

திக்…. திக்…. திமுக! நாளை நடக்கப் போவதென்ன? சிறு பார்வை!

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ என, முக்கிய நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால், ஆக., 7ல் காலமானார். அவரது உடல், மெரினாவில் உள்ள அண்ணாதுரை நினைவிடத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டது. நினைவிடத்திற்கு, தினமும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வந்து, அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். இந்நிலையில், தி.மு.க., செயற்குழு கூட்டம், செயல் தலைவர் … Continue reading திக்…. திக்…. திமுக! நாளை நடக்கப் போவதென்ன? சிறு பார்வை!

ஆக14 ல் திமுக செயற்குழு கூட்டம்? அழகிரிக்கு வாய்ப்பு!

திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டிய நிலை திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. அன்பழகன் இல்லத்தில்...: சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள க.அன்பழகன் இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் வந்தார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா … Continue reading ஆக14 ல் திமுக செயற்குழு கூட்டம்? அழகிரிக்கு வாய்ப்பு!

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த அஇஅதிமுக நிர்வாகி? நெரிசலில் சிக்கி பலி!

ராஜாஜி ஹாலில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியபோது நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் அதிமுக நிர்வாகியும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மரணமடைந்தார். மறுநாள் அதிகாலை அவரது உடல் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. காலையிலிருந்தே அவரது உடலைக்காண லட்சக்கணக்கான மக்கள் ராஜாஜி ஹாலில் குவிந்தனர். கருணாநிதியின் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்கிற வேட்கையில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். பிரதமர் வந்துச்சென்ற பின்னர் தடுப்புகளை தாண்டி முண்டியடித்துக்கொண்டு பொதுமக்கள் முன்னேறியதால் கடும் … Continue reading கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த அஇஅதிமுக நிர்வாகி? நெரிசலில் சிக்கி பலி!

தமிழகம் முழுவதும் காவல்துறை பாதூகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்!

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் பணியில் சுமார் 1.20 லட்சம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி முதுமையின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மாறிமாறி தகவல்கள் வந்ததால், திமுக தொண்டர்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையை … Continue reading தமிழகம் முழுவதும் காவல்துறை பாதூகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்!

அரசியல் சாணக்கியரின் ஐம்பதாம் ஆண்டு!

இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ‘முத்துவேல் கருணாநிதி’. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) ஒரு பகுதியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969 ல் இருந்து கட்சியை வழிவகுத்து வருகிறார். சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட வைத்தது. 60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்துகிறார். … Continue reading அரசியல் சாணக்கியரின் ஐம்பதாம் ஆண்டு!