சத்துணவு முட்டை ஊழல்? டென்ட்டர் ரத்தின் பின்னனி!

வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் அரசின் முட்டை டெண்டரில் பங்கேற்க பண்ணையாளர்கள் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 9 மணி நேர இழுபறிக்கு பிறகு முட்டை டெண்டர் ரத்து செய்யப்பட்டது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை, அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு, பருப்பு சப்ளை செய்து வரும் திருச்செங்கோட்டை சேர்ந்த `கிறிஸ்டி புட்ஸ்’ நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் கடந்த 5ம் தேதி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் 500 பேர் … Continue reading சத்துணவு முட்டை ஊழல்? டென்ட்டர் ரத்தின் பின்னனி!

2019 ல் பொதுத்தேர்தல்? #அதிமுக_எதிர்ப்பு!

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார். அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட … Continue reading 2019 ல் பொதுத்தேர்தல்? #அதிமுக_எதிர்ப்பு!

ரேஷன் கார்டு ரத்து? மத்திய அரசு விளக்கம்!

ரேஷன் கார்டைப் பயன்படுத்தி தொடர்ந்து 3 மாதங்கள் பொருட்கள் வாங்காதவர்களின் கார்டுகளை ரத்து செய்யலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநிலங்களின் உணவுத்துறை அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் ராம் விலாஸ் பாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டில் ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள் அனைவரும் முறையாக கார்டுகளை பயன்படுத்துவதில்லை. சில பணக்காரர்கள் ரேஷன்கார்டை பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். அவர்களை அடையாளம் … Continue reading ரேஷன் கார்டு ரத்து? மத்திய அரசு விளக்கம்!

அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இடமாறுதலா? ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

அமைச்சா் பரிந்துரையின் பேரில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவா் மதிவாணனை திருவாடானைக்கு இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மணக்குடியைச் சோ்ந்தவா் வ.து.நடராஜன். முன்னாள் அமைச்சரும் அம்மா மக்கள் முன்னேற்றறக் கழகத்தின் மாநில நிா்வாகியுமான இவரது மகன் மதிவாணன். இவா் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் எலும்பு சிகிச்சைப் பிரிவு மருத்துவராக உள்ளாா். இந்த நிலையில், இவா் திருவாடாணை தாலுகா மருத்துவமனைக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா். இந்த உத்தரவை … Continue reading அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இடமாறுதலா? ரத்து செய்த உயர்நீதிமன்றம்!