அமமுகவில் தொடரும் பணிப்போர்! தொண்டர்களின் கோபக்கணையில் சிக்கிய ஜனா!

‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்னிச்சையாகக் கழகத்தைச் சார்ந்தவர் போல, விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்த தேனி கர்ணன் அவர்கள், தற்போது சமூக வலைதளங்களில் கழகத்திற்கு எதிரான விஷமத்தனமான செய்திகளைப் பரப்பி வருகிறார் எனத் தெரியவருகிறது. ஆகவே, கழகத் தோழர்கள் தேனி கர்ணனுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ -இப்படி ஒரு அறிவிப்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியாகியிருக்கிறது. தொலைக்காட்சி … Continue reading அமமுகவில் தொடரும் பணிப்போர்! தொண்டர்களின் கோபக்கணையில் சிக்கிய ஜனா!

18 Mla கள் தகுதி நீக்க வழக்கு துவங்கியது விசாரணை!

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், தகுதி நீக்க விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டன சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என தமிழக ஆளுநரை சந்தித்து கடந்த ஆண்டு கடிதம் அளித்தனர். இதனையடுத்து, இவர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி 18 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை … Continue reading 18 Mla கள் தகுதி நீக்க வழக்கு துவங்கியது விசாரணை!

தினகரன் பேச்சு! தகுதி நீக்க எம்எல்ஏ அதிர்ப்தி? கலகலத்த பரமக்குடி!

மறைந்த முன்னால் குடியரசுத் தலைவர் #அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இராமநாதபுரம் அருகே பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர். அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த இராமநாதபுரம் மாவட்ட அமமுக தலைவர் Ttv தினகரன் நேற்று பிற்பகல் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து சேர்ந்தவர் தனியார் விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டு மாலை மதுரையிலிருந்து சாலைப் பயணமாக இராமநாதபுரம் … Continue reading தினகரன் பேச்சு! தகுதி நீக்க எம்எல்ஏ அதிர்ப்தி? கலகலத்த பரமக்குடி!

18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை என்றும் சபாநாயகர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே தகுதிநீக்கம் செய்தார் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது. 18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கு, மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு மூன்றாவது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்ஏ-க்கள் தரப்பிலான வாதம் கடந்த 2 நாட்களில் முடிவடைந்த நிலையில், நேற்று சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலர் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார். … Continue reading 18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

“அம்மா மக்கள் முன்னேற்ற கழக” துணைப் பொதுச் செயலாளரை வரவேற்க பரமக்குடி நகரம் தீவிரம்!

வருகிற 27/7/18 அன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அய்யா அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்த இராமநாதபுர மாவட்ட "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்" சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த "அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் #Ttv தினகரன் இராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு வருகை தருகிறார். 26/7/18 அன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் … Continue reading “அம்மா மக்கள் முன்னேற்ற கழக” துணைப் பொதுச் செயலாளரை வரவேற்க பரமக்குடி நகரம் தீவிரம்!

உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் 3-ஆவது நீதிபதி விசாரணையில், "அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காததே எங்களது முதல் குற்றச்சாட்டு" என தினகரன் தரப்பு வாதம் வைத்தது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதியின் விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது. இந்த வழக்கு மீதான விசாரணை திங்கள்கிழமை முதல் வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறும் 3-ஆவது நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்தார். இதையடுத்து, முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது தகுதி … Continue reading உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

18 எம்எல்ஏகள் தகுதி நீக்கம்? இன்று மூன்றாவது நீதிபதி விசாரணை துவக்கம்!

சென்னை : சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று(ஜூலை 23) முதல் மூன்றாவது நீதிபதி, சத்திய நாராயணன் விசாரிக்கிறார். தொடர்ந்து ஐந்து நாட்கள், விசாரணை நடைபெற உள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து, அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். 'பழனிசாமிக்கு எங்கள் ஆதரவு இல்லை; அவரை மாற்ற வேண்டும்' என, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், கவர்னரிடம் … Continue reading 18 எம்எல்ஏகள் தகுதி நீக்கம்? இன்று மூன்றாவது நீதிபதி விசாரணை துவக்கம்!

திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும்? கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி!

“ஆரம்பத்தில் ஐ.ஐ.டி. வளாகத்தில் வாக்கிங் போவதை வழக்கமாக வைத்திருந்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். கடந்த சில மாதங்களாகவே அவரது வாக்கிங் ஸ்பாட் அடையாறில் உள்ள The Theosophical Society கேம்பஸுக்கு மாறிவிட்டது. அடையாறு ஆலமரம் இருக்கக்கூடிய பகுதி இது. இங்கே உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே கேம்பஸுக்குள் நுழைய முடியும். சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் பசுமை சூழ இருக்கும். இந்த வளாகத்தில்தான் வாக்கிங் போகிறார் ஸ்டாலின். டிடிவி தினகரன் வீட்டிலிருந்து இந்த கேம்பஸ் … Continue reading திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும்? கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி!

தகுதிநீக்க வழக்கு! ஆகஸ்டில் இறுதி தீர்ப்பா?

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணையை ஆரம்பித்த மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அனைத்து தரப்பினரும் வழக்கில் ஆஜராக வசதியாக ஜூலை 23 முதல் வழக்கு விசாரணை தொடங்கி தினமும் நடக்கும் என்று உத்தரவிட்டார். தமிழக முதல்வர் கே.பழனிசாமியை மாற்றக் கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் தமிழக ஆளுநரிடம் கடந்த ஆண்டு மனு அளித்தனர். இதில் ஜக்கையனைத் தவிர மீதமுள்ள 18 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை … Continue reading தகுதிநீக்க வழக்கு! ஆகஸ்டில் இறுதி தீர்ப்பா?

18 Mla வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும்? ராஜா செந்தூர்பாண்டியன் சிறப்பு பேட்டி!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும் என டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். இது குறித்து டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியனிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது: நேற்று 11 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வந்துள்ளது அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?  தீர்ப்பைப் பொறுத்தவரையில் அனைத்து தரப்பு வாதங்களும் முழுமையாக தீர்ப்பில் … Continue reading 18 Mla வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும்? ராஜா செந்தூர்பாண்டியன் சிறப்பு பேட்டி!