மைக்ரோசாஃப்ட் தனது சமூக வலைதளமான லிங்க்ட்இன் (linkedin) சேவையை சீனாவில் நிறுத்துகிறது. சீன அரசின் சட்ட திட்டங்களுக்கு இணங்குவதில் உள்ள சிரமங்களை காரணமாகக் கூறுகிறது மைக்ரோசாஃப்ட்.

சில பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து கேள்விகளை எழுப்பிய போது இந்த விவரங்கள் கூறப்பட்டன. லிங்க்ட்இன் வலைதளம், இந்த ஆண்டின் பிற்பகுதியில், இன் ஜாப்ஸ் என்கிற பெயரில் வேலை தேடுவதற்கென்றே வடிவமைக்கப்பட்ட பிரத்யேக தளத்தை தொடங்க உள்ளது. இதில் சமூக பதிவுகளை அல்லது கட்டுரைகளைப் பகிரவோ, பதிவிடவோ முடியாது.

“நாங்கள் சீனாவில் மிகவும் சவாலான இயக்க சூழல் மற்றும் அதிக சட்ட திட்ட இணக்கத் தேவைகளை எதிர்கொள்கிறோம்.” என லிங்க்ட் இன் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மோஹக் ஷ்ராஃப் தன் வலைப்பக்கத்தில் கூறியுள்ளார்.

“இந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் இருக்கும் உள்ளூர்மயமாக்கப்பட்ட லிங்க்ட் இன் பதிப்பை நாங்கள் நிறுத்தப் போகிறோம். நாங்கள் சீனாவில் தொடர்ந்து எங்கள் இருப்பை நிலைநிறுத்துவோம். மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் புதிய இன் ஜாப்ஸ் சேவையைத் தொடங்க உற்சாகமாக இருக்கிறோம்.” என அந்நிறுவனத்தின் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

By Anna