ஜெயலலிதாவை கொடுமைப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி? நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி?

தூத்துக்குடியில் 7.9.17 அன்று அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார் மகள் டாக்டர் ஜெயலலிதா திருமண நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நாலாட்டின்புதூர் ராமகிருஷ்ணன்- சண்முகத்தாய் தம்பதியினரின் மகனும், கோட்டயம் எஸ்பியுமான கருப்பசாமி ஐ.பி.எஸ் தான் ஆறுமுகநயினார் மருமகன்..

அதிமுக பிரமுகர் ஆறுமுகநயினார், தன் மகளுக்கு பேச்சியம்மாள் என்றுதான் பெயர் வைத்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் விசுவாசம் இருப்பது போல் காட்டி, பதவிகள் பெறுவதற்காக தன் மகள் பெயரை ஜெயலலிதா என்று மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது..

டாக்டர் ஜெயலலிதா – கருப்பசாமி ஐ.பி.எஸ் திருமணத்துக்கு பிறகு வரதட்சணை கேட்டு ஜெயலலிதாவை கொடுமை செய்ததாக தெரிகிறது. இதனால் ஜெயலலிதா தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார். இந் நிலையில் ஆறுமுகநயினார், 17.6.18 AVM மருத்துவமனையில் மகள் ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்து, சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனை வந்த கருப்பசாமி ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிலர் என்னை தாக்கினார்கள். என் நெற்றியில் துப்பாக்கி வைத்து சுட்டுவிடுவேன் என்று மிரட்டினார்கள். என் மகளுக்கு பிறந்த குழந்தையை பிடுங்க முயற்சி செய்தார்கள் என்று 28.6.18 தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.. கருப்பசாமி தாக்கியதில் காயம் அடைந்ததாக மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார்.. இந்த புகாரின் பேரில் கருப்பசாமி ஐ.பி.எஸ் மீது 377/2018 பிரிவு 323,506(11)27(2) Of arms actல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆசியுடன், பல அமைச்சர்கள் வாழ்த்துக்களுடன் நடந்த ஆறுமுகநயினார் மகள் டாக்டர் ஜெயலலிதா – கருப்பசாமி ஐ.பி.எஸ் திருமணம் இப்படியாகிவிட்டதே என்று அதிமுகவினர் புலம்புகிறார்கள்..

சாதாரண குடிமகனாக இருந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டால், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யும் காவல்துறை அதிகாரிகள் கேரளா மாநிலம் கோட்டயம்/வையநாடு காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கும் கருப்பசாமி ஐ.பி.எஸ்யை கைது செய்வார்களா?

தகவல்கள் மக்கள்செய்திமையம்.காம்