“அம்மா மக்கள் முன்னேற்ற கழக” துணைப் பொதுச் செயலாளரை வரவேற்க பரமக்குடி நகரம் தீவிரம்!

This slideshow requires JavaScript.

வருகிற 27/7/18 அன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அய்யா அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்த இராமநாதபுர மாவட்ட “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த “அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் #Ttv தினகரன் இராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு வருகை தருகிறார்.

26/7/18 அன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் Ttv தினகரன் மதுரையின் பிரபல தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு 26 ந் தேதி மாலை சாலை மார்க்கமாக இராமநாதபுரம் செல்லவிருக்கிறார். முன்னதாக அவருக்கு வரவேற்பளிக்க “மதுரையிலிருந்து இராமநாதபுரம் வரை தினகரன் பயணிக்கும் பகுதிகளில் கழக நிர்வாகிகள் அளிக்கும் வரவேற்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார் தினகரன்.

அதன் ஒரு பகுதியாக பரமக்குடி “அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ” நகர நிர்வாகிகள் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் #Ttvதினகரனுக்கு உற்சாக வரவேற்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது!

இது குறித்து நம்மிடம் பேசிய “பரமக்குடி நகர அம்மா பேரவை இணைத் தலைவர் D.பாபு தர்மலிங்கம் அவர்கள் கூறியதாவது,

இராமநாதபுரம் பேக்கரும்பு செல்லும் வழியில் பரமக்குடிக்கு வருகை தரும் எங்கள் கழக துணைப் பொதுச்செயலாளரை வரவேற்க்கும் விதமாக எங்களது அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் I.K.சுப்பிரமணியன் அவர்களின் ஏற்பாட்டின்படி நகர அம்மா பேரவை செயலாளர் G.K.கலைவாணன் அவர்களின் மேற்பார்வையில் பரமக்குடி நகர் கழகம் சார்பாக 150 க்கும் மேற்பட்ட கட் அவ்ட் வரவேற்பு பதாகைகள் வைக்கட்டுள்ளது, கிட்டத்தட்ட 50 கார்கள்,150 ஆட்டோக்கள், 200 மோட்டார்களின் அணிவகுப்புடன் “துணைப் பொதுச் செயலாளரை வரவேற்க திட்டமிட்டுள்ளோம்.

பரமக்குடி நகர கிழக்குப் பகுதி கழகம் சார்பாக வாண வேடிக்கைகளுடன், தாரைதப்பட்டை முழக்கங்களுடன், பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பளிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் 1000 ம் பேருக்கு அன்னதானம் அளிக்கவும் நகர கழகம் சார்பில் திட்டமிட்டுள்ளதாக “அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர அம்மா பேரவை இணைத்தலைவர் D.பாபு தர்மலிங்கம் நம்மிடம் தெரிவித்தார்…