பதவி நியமனத்தில் பாரபட்சம்? தன்னிச்சையாக செயல்படும் மூவர் அணி! போராடத் தயாரான தொழில்நுட்ப பிரிவு?

“ ஆரம்பத்துல சாதாரணத் தொண்டன்கூட நினைச்ச நேரத்துல TTV தினகரனைப் பார்க்க முடிஞ்சது. அதனால்தான் தொண்டர்கள் அவரை விரும்பினாங்க; தேடி வந்தாங்க. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அது எல்லாமே மாறிடுச்சு. தினகரன் கட்சியில் அதிகாரம் என்பது ஒரு நபர் கைக்குப் போயிடுச்சு. அந்த ஒரு நபர் தினகரன் இல்லை; அவரது உதவியாளர் ஜனார்த்தனன்.

கடந்த 6 மாதங்களாகவே ஜனார்த்தனன் மீது பல புகார்கள் வந்தன. எல்லாம் தினகரன் கவனத்துக்கும் போனது. ஆனால், அவர் கண்டுகொள்ளவே இல்லை. அதற்குக் காரணம், தினகரன் வீட்டு கிச்சன் கேபினெட். தினகரன் மனைவி அனுராதா ஆரம்பத்தில் ஜெயா டிவியை நிர்வகித்துவந்த காலத்தில், சாதாரண ஊழியராக அங்கே பணியாற்றியவர் ஜனார்த்தனன். அதன் பிறகு, தினகரன் வீட்டுக்குக் காய்கறி வாங்கி வருவதுவரை எல்லா வேலைகளையும் பார்த்தார். ஒருகட்டத்தில் ஜெயா டிவியிலிருந்து ஒதுங்கி மொத்தமாக தினகரன் வீட்டோடு செட்டிலாகிவிட்டார். தினகரனின் மொத்த ரகசியங்களும் தெரிந்த ஒரே நபர் இன்று ஜனார்த்தனன்தான். அதனால் தினகரன் அவரைக் கேள்வியும் கேட்பதில்லை. கேட்டாலும் தினகரன் மனைவி அனுராதா அனுமதிப்பதும் இல்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரானது. பட்டியலைத் தயாரித்தவர் ஜனார்த்தனன். யாருக்கு என்ன பொறுப்பு என்பதைத் தீர்மானிக்கும் முன்னரே சம்பந்தப்பட்டவர்களை அழைத்தும் பேசியிருக்கிறார் ஜனார்த்தனன். ‘இதை அவருக்குக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். உங்களுக்கு வேணுமா?’ எனச் சில டீலும் பேசப்பட்டதாகச் சொல்கிறார்கள். அப்படிப் பேசிப் பேசித்தான் ஒரு பெரிய நிர்வாகிகள் பட்டியலைத் தலைமை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பட்டியல் எல்லாமே வேடிக்கையாக இருக்கு. சம்பந்தமே இல்லாதவங்களை சம்பந்தமே இல்லாத பொறுப்புக்கு போட்டிருக்காங்க. செய்தித் தொடர்பாளர்களாகச் சிலரை நியமிச்சிருக்காங்க. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தினகரனுக்காகப் பேசி வந்த அக்னீஸ்வரன், தேனி கர்ணன், குரு முருகானந்தம் எனப் பலர் புதிய பட்டியலில் இடம் பெறவில்லை. இன்னும் சில நிர்வாகிகள் பட்டியல் வெளியானதுமே ஜனார்த்தனனைத் தொடர்புகொண்டு கோபமாகப் பேசியிருக்கிறார்கள்.

‘இங்கே நான் என்ன சொல்றேனோ அதுதான் நடக்கும். என்னை எதிர்க்கணும்னு நினைச்சா யாரும் கட்சியில் இருக்கவே மாட்டீங்க..’ என மிரட்டியிருக்கிறார் ஜனார்த்தனன். இப்படிப் பல நிர்வாகிகளும் புகார்களுடன் இன்று வந்தாங்க. ஆனால், என்ன பிரயோஜனம்? எல்லா மனுக்களையும் அந்த ஜனார்த்தனன்தான் வாங்குறாரு. அம்மா இருந்தபோது, பூங்குன்றன் புகார்களை வாங்கிவிட்டு அம்மா கவனத்துக்கே கொண்டுபோக மாட்டாரு. இப்போ அதே கதைதான் இங்கே நடக்குது.

அம்மா இருந்த மாதிரி இப்போ தினகரன் இருக்காரு. அதே பூங்குன்றன் இடத்துல ஜனார்த்தனன் இருக்காரு. அம்மாகிட்ட பொறுமையாக இருந்த மாதிரியெல்லாம் தினகரன்கிட்ட யாரும் இருக்க மாட்டோம். பாதிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்று திரட்டி, மீடியா முன்பு அவங்க பண்ற அநியாயத்தை எல்லாம் கொட்டித் தீர்த்துடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் Ttv தினகரன் ஆதரவு நபர்களிடம் பரவலாக பேசப்பட்டு வரும் சூழலில் இதுபற்றிய தற்போதைய நிலவரம் அறிய தினகரன் அணியிலுள்ள முக்கிய நபர்களான நண்பர்களிடம் நாம் பேசிய போது கிடைத்த தகவல்கள் இதோ உங்களுக்காக!

இரட்டை இலைக்கு இலஞ்சம் கொடுத்ததாக கடந்த ஆண்டு தினகரன் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அவருக்கு மக்களிடம் உயர செல்வாக்கை உயர்த்த அதிக உழைப்பைக் காட்டி வருபவர்கள் தொழில்நுட்ப பிரிவினர் தான், அதிலும் அஇஅதிமுக வில் தொழில்நுட்ப பிரிவின் பல பதவிகளில் இருந்தவர்கள் தினகரன் தனியாக பிரிந்து வரும் போது அவருக்காக தங்களது பதவிகளையும் துறந்து கடும் உழைப்பை வெளிப்படுத்தினார்கள். ஆனால் தினகரன் கடந்த ஆண்டு சிறையிலிருந்து திரும்பிய பிறகு சிலருக்கு பதவி வழங்க பரிந்துரை செய்திருந்தார் பெரம்பலூர் எம்எல்ஏ வெற்றிவேல். மேலும் தனக்கு பரிட்சையமானவர்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து பதவிகளை வழங்கும்படி தினகரனிடம் வலியுறுத்தி வந்துள்ளார். அதனடிப்படையில் வழங்கப்பட்ட பதவிகளில் இருந்தவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதால் “வெற்றிவேல் பரிந்துரை செய்த நபர்களில் சிலரின் பதவிகள் பறிக்கப்பட்டு, சிலரை டம்மியாக்கி வைத்திருந்தார் தினகரன்.

தனியாக அமமுகவைத் துவக்கிய பிறகு கட்சியில் பதவி வாங்கித் தரும்படி போட்டி போட்டுக் கொண்டு வெற்றிவேலை தொண்டர்கள் நெருங்கத் தொடங்கியதைத் தொடர்ந்து தினகரனிடம் இதுகுறித்து வெற்றிவேல் பேசியுள்ளார், அப்போது தினகரன் “நீங்க எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க, அதே போல தான் தங்கமும், அதனால நீங்க பரிந்துரை செய்பவர்களுக்கு பதவி வழங்கினால் “ஏற்கனவே நடந்த மாதிரி திரும்பவும் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி விடும், அதனால கட்சி பொறுப்புகளை கொடுக்கும் பணியை “தங்கதமிழ்ச் செல்வனும் மானாமதுரை மாரியப்பன் கென்னடியும் “செய்யட்டும். கொஞ்ச நாளைக்குப் பிறகு பார்த்துக்கலாம். இப்போதைக்கு அவங்களுக்கும் வாய்ப்பு கொடுப்போம், இல்லைனா நம்ம கூட இருக்கிற எம்எல்க்களில் சிலர் மீண்டும் அரசாங்கத்தின் பக்கம் செல்ல வாய்ப்பாகிவிடும் “என்று தினகரன் கூறியதைத் தொடர்ந்து அரைமனதுடன் சம்மதித்துள்ளார் வெற்றிவேல்!

அதன்படி அமமுக வில் பொறுப்புகளை வழங்க தற்போது “தங்கமும், கென்னடியும்” தீவிரமாக செயல்பட்டு தங்களுக்கு ஆதரவான (நோட் பண்ணிக்கங்க #ஆதரவான ) நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தற்போது அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதன்படி சிலநாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பலரும் புதியவர்கள், தினகரனுக்காக அஇஅதிமுக பதவியைத் துறந்தவர்களில் யாருக்கும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை, மேலும் அரசியல் பற்றிய புரிதல் இல்லாதவர்களையும், விமர்சனங்களை சரியான விளக்கங்களுடன் எதிர்கொள்ள திறனில்லாதவர்களையும் தொழில்நுட்ப பிரிவில் நியமித்துள்ளார்கள். வெறுமனே தினகரனின் சுற்றுப்பயண விவரங்களை போட்டோக்களாக சமூகவலைதளங்களில் பரவவிட்டு வரும் நபர்களை மாநில பொறுப்புகளிலும், மாவட்ட பொறுப்புகளிலும் நியமித்துள்ளார்கள். தினகரனைப்பற்றியும், கட்சி பற்றியும் ஏதேனும் எதிர்க்கட்சி தொண்டர்கள் விமர்சித்தால், அதை எதிர்த்து விளக்கமளித்து நம்முடைய கொள்கைகளை மாற்றுக்கட்சியினர்க்கு புரிய வைக்க வேண்டும். மாறாக தங்கள் ஆதரவு நபர்கள் அனைவருக்கும் தகவல் குடுத்து தரக்குறைவாக விமர்சிப்பது போன்ற ஈன செயல்களில் ஈடுபட்டவர்களே தற்போது அமமுக தொழில்நுட்ப பிரிவில் முக்கிய நிர்வாகப் பொறுப்புளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சில நான் முன்பு பதவி பறிக்கப்பட்ட ராகவேந்திர ராவ் என்பவரும் மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் தான்.

இந்நிலையில் மாநில அளவில் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி , வடகரையைச் சேர்ந்த #மீரான்_அப்துல் மீது தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தினகரன் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் ஒன்று திரண்டு தினகரனைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது பற்றிய விளக்கம் பெற தினகரன் ஆதரவு முக்கிய நண்பரிடம் நாம் பேசிய போது தற்போது பதவிகளைப் பரிந்துரை செய்வது தங்கமும், கென்னடியும் தான்! ஆனால் எல்லாருக்கும் பொறுப்பு வழங்க முடியுமா? பதவி கிடைக்காதவங்க பொறாமையில் பேசத்தான் செய்வார்கள், இருந்தாலும் இந்த தகவல்களைத் தினகரனின் கவனத்திற்க்கு கொண்டு செல்வதாக கூறினார்.